பழைய Actorகிட்ட இருக்கிற dedication புதுசா வர்றவங்ககிட்ட...! - Actress Egavalli ...
பனையூரில் பா.ம.க பாலு; விஜய்க்கு அழைப்பு விடுத்த அன்புமணி
இன்று (டிச.11) காலை 10 மணிக்கு பனையூரில் தவெக மா.செக்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இந்நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு அன்புமணியின் ஆதரவாளரான பாமக பாலு தவெக அலுவலம் வந்திருக்கிறார்.

கட்சியின் கட்டமைப்பு மற்றும் மா.செக்களின் செயல்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்தக் கூட்டம் முடிகிற தருவாயில் அன்புமணியின் ஆதரவாளரான அட்வகேட் பாலு பாமக நிர்வாகிகளோடு பனையூர் அலுவலகம் வந்தார்.
செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ், அருண் ராஜ் போன்ற தவெகவின் முக்கிய நிர்வாகிகள் அலுவலகத்தில் இருக்கும் நிலையில் அவர்களோடு ஆலோசனை நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து பா.ம.க பாலு டிசம்பர் 17 ஆம் தேதி பாமக நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள தவெகவுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "பாமக சார்பில் 17 ஆம் தேதி சென்னையில் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம்.
சமூகநீதியில் அக்கறை உள்ள கட்சிகளுக்கு அன்புமணி அவர்கள் எழுதிய கடிதத்தை வழங்கி அழைத்திருக்கிறோம்.
சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் விஜய்யின் தவெகவும் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருக்கிறோம்.
அவர்களும் தவெக சார்பில் கட்டாயம் கலந்துகொள்கிறோம் எனக் கூறியிருக்கின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அதிகாரமில்லை என சட்டமன்றத்தில் கூறுகிறார். கலைஞர் இருந்திருந்தால் இப்படி கூறியிருக்கமாட்டார்.

17 ஆம் தேதி நடக்கும் போராட்டம் தமிழக அரசியலில் முக்கியமான போராட்டமாக இருக்கும்.
தவெக ஆரம்பித்த முதல் மாநாட்டிலிருந்தே சாதிவாரி கணக்கெடுப்பை அழுத்தமாக கூறுகிறார்கள்.
திமுகவை தவிர எல்லாக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம்.இது போராட்டத்துக்கான அழைப்பு" என்று பேசினார்.














