பழைய Actorகிட்ட இருக்கிற dedication புதுசா வர்றவங்ககிட்ட...! - Actress Egavalli ...
"நாளை மறுநாள் டெல்லி செல்கிறேன்" - எடப்பாடி உடனான சந்திப்பு குறித்து நயினார்
அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று (டிச.11) நடைபெற்றது.
அதில், கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி இருப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இன்று (டிச.11)பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமியை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார்.

வரும் 14ஆம் தேதி நயினார் நாகேந்திரன் டெல்லி செல்ல இருக்கிறார்.
அதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரனிடம் எடப்பாடியுடனான சந்திப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், "நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதைப் பற்றி தான் எடப்பாடியிடம் பேசினேன். அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரை கூட்டணிக்குள் கொண்டுவருவது பற்றியோ, தொகுதி பங்கீடு பற்றியோ பேசவில்லை. நாளை மறுநாள் டெல்லி செல்கிறேன்" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.














