செய்திகள் :

மன்னார்குடி: `பிரமாண்டத்தை வீழ்த்திய எளிமை' - காமராஜிடம் டி.ஆர்.பி.ராஜா வெற்றியை பறிகொடுத்த பின்னணி!

post image

மன்னார்குடி தொகுதியில் தி.மு.க-வில் டி.ஆர்.பி.ராஜா, அ.தி.மு.க கூட்டணியில் அ.ம.மு.க-வைச் சேர்ந்த எஸ்.காமராஜ், நா.த.க-வில் இலரா.பாரதிச்செல்வன், த.வெ.க-வில் யு.வி.எம்.ராஜராஜன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில் செல்வாக்கு படைத்த டி.ஆர்.பி.ராஜாவை தன் எளிமையால் வீழ்த்தி 1,566 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் எஸ்.காமராஜ். எந்த சூழ்நிலையிலும் மக்களிடமிருந்து விலகி நிற்காமல் மக்கள் பக்கம் நின்றால் நிச்சயம் அதற்குரிய பலனை மக்கள் கொடுப்பார்கள் என நெகிழ்ந்துள்ளார் எஸ்.காமராஜ்.

டி.ஆர்.பி.ராஜா - எஸ்.காமராஜ்

மூன்று முறை தொகுதியை தக்க வைத்திருந்த டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக இருந்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறோம் என்ற நம்பிக்கையோடு தேர்தலை எதிர் கொண்டார். ஆனால் நான்காவது முறை போட்டியிட்ட டி.ஆர்.பி.ராஜா தரப்பு வெற்றிக்காக போட்ட சில கணக்குகள் தப்ப... தோல்வியைத் தழுவியிருக்கிறார். ஒரு பிரமாண்டத்தை எளிமை வீழ்த்தியிருப்பதாக தொகுதிக்குள் பேசுகிறார்கள்.

இது குறித்து சிலரிடம் பேசினோம், ``மன்னார்குடியில் டி.ஆர்.பி.ராஜா தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். எஸ்.காமராஜ் இரண்டு முறை தோல்வியைத் தழுவியிருக்கிறார். ஆனாலும் எஸ்.காமராஜ் மக்களிடமான நெருக்கத்தை குறைத்துக் கொண்டதில்லை. எளிமை அவருக்கான அடையாளமாகவும் இருந்தது. யாரிடத்திலும் பாகுபாடு காட்ட மாட்டார். கோபப்பட மாட்டார். எவ்வித சூழலாக இருந்தாலும் எளிதாக அவரை சந்திக்கலாம். ஒரு முறை திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டதையும் சேர்த்து மூன்று முறை தோல்வியைச் சந்தித்துள்ளார்.

வெற்றி பெற்ற பின் எஸ்.காமராஜ்

இது மக்கள் மத்தியில் அவருக்கான அனுதாபத்தை அதிகப்படுத்தியிருந்தது. டி.ஆர்.பி.ராஜா அமைச்சரான பிறகு பெரும்பாலும் தொகுதிக்குள் இருக்கமுடியவில்லை. அவர் நம்பிய சிலரின் நடவடிக்கை சொந்த கட்சியினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியதும் பாதகமானது. மன்னார்குடியில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார் ராஜா. குறிப்பாக புதிய பேருந்து நிலையம், ரிங் ரோடு போன்றவற்றைச் சொல்லலாம். இதனால் நகரப் பகுதி தனக்கு கைகொடுக்கும் என்று நம்பினார். நகரப் பகுதியில் 6,000 வாக்குகள் லீடிங் வரும் எனவும் எதிர்பார்த்தார். ஆனால் அதிமுக நகரச் செயலாளர் ஆர்.ஜி.குமார், அமமுக நகரச் செயலாளர் ஆனந்தராஜ் இருவரும் இணைந்து செய்த வேலைகளால் எதிர்பார்த்தது நடக்காமல், காமராஜுக்கு சாதகமாக மாறியது.

எஸ்.காமராஜும் வெற்றி பெறக்கூடியவர் தான். சில சூழல்களால் வெற்றி கைக்கு எட்டாமல் போக... இப்போது அவருக்குச் சாத்தியமாகியிருக்கிறது. தோல்விக்குப் பிறகு டி.ஆர்.பி.ராஜா தனது முகநூல் பக்கத்தில், `இதுவரை யாரும் செய்திராத வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை கொண்டு வந்த பெருமையோடு நீண்ட நாள்களுக்குப் பிறகு உறங்கப் போகிறேன்' என்கிற ரீதியில் பதிவிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் உழைப்பை தமிழ்நாடு மறந்ததுதான் வருத்தமளிக்கிறது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். ராஜாவின் பதிவு திமுக-வினரை வருத்தமடையச் செய்திருக்கிறது" என்றனர்.

`தி.மு.க-வுக்கு பாயத் தயாராகும் சிறுத்தைகள் டு சாரி கேட்ட செந்தில் பாலாஜி!' | கழுகார் அப்டேட்ஸ்

புலம்பும் கு.ப.கிருஷ்ணன்!"தப்புக்கணக்கு போட்டுட்டோம்"த.வெ.க-வில், முகம் தெரியாத பலரும் வெற்றிபெற்ற நிலையில், லால்குடி தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனோ தோல்வியைத் தழுவியிருக்கிறார். அ.தி.மு.க முன்னாள் அ... மேலும் பார்க்க

விஜய்க்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் பந்தாடும் ஆளுநர்! - வலுக்கும் கண்டனங்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன... மேலும் பார்க்க

`அந்த திட்டம் வேண்டாம்!' - அதிமுகவுக்கு `நோ' சொல்லிய திமுக?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்தாலும் இன்னும் பரபரப்புக்குக் குறைவில்லாமல் நகர்கிறது அரசியல் களம். குறிப்பாக நேற்று இரவு வெளியான சில தகவல்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்கூட எதிர்பாராதவை. அதாவது, ... மேலும் பார்க்க

"விஜய்யைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும்; ஆளுநர் அப்படி சொல்ல முடியாது" - திருமாவளவன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணிய... மேலும் பார்க்க

`மு.க.ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மனதார வருத்தப்பட்டார்!' – ஆதங்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அதிலிருந்து ... மேலும் பார்க்க

SRH vs PBKS:"பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடம்; அதிரடி ஆட்டமே எங்களின் ரகசியம்!"– பேட் கம்மின்ஸ் பெருமிதம்

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (மே 6) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப் அணியை வீழ்த்தி, ஹைதராபாத் அணி அபார வெற்... மேலும் பார்க்க