``இந்தப் பிரச்னை குறித்து விவாதிப்போம்: இது நாடகமல்லவே" - பிரதமர் மோடிக்கு பிரிய...
மீண்டும் மீண்டும் தோல்வி; உலகக்கோப்பை தகுதிச்சுறில் சொதப்பிய இந்திய கூடைப்பந்து அணி
FIBA கூடைப்பந்து உலகக்கோப்பை 2027 தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆசிய அணிகளுக்கிடையேயான தகுதிச்சுற்றில் நேற்று இந்தியா மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதிய போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. இந்தப் போட்டியில் 57-81 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

ஆப்பிரிக்கா, ஆசியா, ஓசியானியா, ஐரோப்பா ஆகிய நான்கு கண்டங்களையும் சேர்த்து மொத்தம் 80 அணிகள் தகுதிச்சுற்றில் ஆடுகின்றன. இதில் இந்திய அணி ஆசிய கண்டத்தில் குரூப் D யில் லெபனான், சவுதி அரேபியா, கத்தார் ஆகிய அணிகளோடு இடம்பெற்றிருக்கிறது. முன்னதாக, கடந்த நவம்பர் 27 ஆம் தேதி சவுதி அரேபியாவில் இரு அணிகளும் மோதியிருந்தன.
அந்தப் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியிருந்தது. அந்தப் போட்டியில் இந்திய அணி 75-51 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில், நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இங்கேயும் தென்னாப்பிரிக்க அணியே கோலோச்சியது.

57-81 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்திய அணிக்கு கிடைத்த 76 பீல்ட் கோல் வாய்ப்புகளில் 22 புள்ளிகளை மட்டுமே இந்திய அணி பெற்றது. அதேநேரத்தில் சவுதி அரேபியா அணி 62 வாய்ப்புகளில் 30 புள்ளிகளை பெற்றிருந்தது.















