49-வது புத்தகக் காட்சி: `எழுத்துக்களைப் படிக்க படிக்க எண்ணங்கள் மலரும்..!' - முத...
வங்கதேசம்: 24 மணிநேரத்தில் 2 இந்துக்கள் கொலை; தொடரும் பதற்றம்!
நாளுக்கு நாள் வங்கதேசத்தில் நிலைமை மோசமாகி வருகிறது.
2024-ம் ஆண்டு, வங்கதேசத்தில் முன்னாள் அதிபரான ஷேக் ஹசீனாவிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த மாணவத் தலைவர்களில் முக்கியமான ஒருவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி. இவர் கடந்த டிசம்பர் 12-ம் தேதி டாக்காவில் சுடப்பட்டார். மலேசியாவில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல், அவர் இறந்துவிட்டார்.
இது வங்கதேசத்தை மீண்டும் கலவர பூமியாக மாற்றியுள்ளது.

என்ன கோபம்?
ஷேக் ஹசீனாவிற்கு இந்தியா தான் அடைக்கலம் கொடுத்துள்ளது என்று ஏற்கெனவே வங்கதேசம் கோபத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில், ஷெரீப்பை சுட்டுக் கொன்றதற்கு பின்னும், இந்தியா தான் உள்ளது என்று வங்கதேசம் கைகாட்டுகிறது.
இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று, வங்கதேசத்தில் இருக்கும் இந்துக்களை குறி வைக்கின்றனர் வங்கதேச போராட்டக்காரர்கள். இதுவரை இந்தச் சம்பவத்தினால் 5 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்... ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா என்ன சொல்கிறது?
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், இரு இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் இந்துக்களைக் குறி வைப்பது மூலம் அவர்கள் இந்தியா மீதான கோபத்தைத் தான் வெளிப்படுத்துகின்றனர்.
'இது மிக கவலைக்குரியது' என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலும் பிரச்னை
வங்கதேசத்தில் நடக்கும் இந்தச் சம்பவம் இந்தியாவில் மெல்ல மெல்ல எதிரொலிக்க தொடங்கியுள்ளது. அங்கே இந்துகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எதிர்த்து இந்தியாவில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்தச் சம்பவம் நிச்சயம் மேற்கு வங்கத்தில் பெரிதாக எதிரொலிக்கும்.
இந்தியாவில், இந்தப் பிரச்னை இன்னும் பெரிதாவதற்கு முன்பு, இந்திய அரசு இதை தடுக்க எதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.














