செய்திகள் :

வளைகுடா வாழ்க்கை முடிவதற்குள், உங்கள் 'இரண்டாவது சம்பளத்தை' உறுதி செய்துவிடுவீர்களா?| NRI Special

post image

துபாய் வெயிலோ, சவுதி பாலைவனமோ... கடந்த 10-20 வருடங்களாக குடும்பத்தைப் பிரிந்து, பண்டிகைகளைத் தியாகம் செய்து உழைத்துக்கொண்டிருக்கிறீர்கள். "இன்னும் 5 வருஷம்... அப்புறம் செட்டில் ஆகிடலாம்" என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்கிறீர்கள்.

ஆனால், 40-50 வயதைக் கடக்கும் வளைகுடா தமிழர்களின் மனதில் இருக்கும் உண்மையான பயம் என்ன தெரியுமா?

"ஊருக்குப் போனால், கைநீட்டி சம்பளம் வாங்க முடியாது. என் கௌரவம், என் வாழ்க்கைத் தரம் (Lifestyle) அப்படியே இருக்குமா? அல்லது குறுகிப் போகுமா?"

இந்தக் கேள்விக்கான பதிலை இன்றே தேடவில்லை என்றால், உங்கள் ஓய்வுக்காலம் சமரசமாகவே ஆகிவிடும்.

வளைகுடா தமிழர்கள் செய்யும் 3 பெரிய முதலீட்டுத் தவறுகள்!

Real Estate Vs Mutual Funds

உழைப்பது நீங்கள். ஆனால் உங்கள் பணம் எங்கே போகிறது?

1. "வீட்டு வாடகை வருமானம் தரும்" என்ற மாயை!

சம்பாதித்த மொத்தப் பணத்தையும் போட்டு ஊரில் வீடு கட்டியிருப்பீர்கள். "வாடகை வருமே" என்று. ஆனால் உண்மை என்ன? 1 கோடி ரூபாய் வீட்டுக்கு, இந்தியாவில் மாதம் 20,000 - 25,000 ரூபாய்க்கு மேல் வாடகை கிடைப்பதில்லை (வெறும் 2-3% வருமானம்). ஆனால், அதே 1 கோடியை சரியான SWP திட்டத்தில் போட்டால், மாதம் ₹50000 வரை எடுக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வீடு பாதுகாப்பானதுதான், ஆனால் அது உங்களுக்குச் சோறு போடாது.​

2. உறவினர்களிடம் சிக்கி கரையும் பணம்!

நீங்கள் அனுப்பும் பணத்தை ஊரில் உள்ள உறவினர்கள் நிர்வகிக்கிறார்கள். "அவசரம், தொழில் தொடங்கணும்" என்று அவர்கள் கேட்கும்போது உங்களால் மறுக்க முடிவதில்லை. இப்படிப் பாசம் என்ற பெயரில் உங்கள் சேமிப்பு கரைந்துகொண்டிருக்கிறது. உங்கள் பணத்தின் முழுக் கட்டுப்பாடும் உங்கள் கையில் மட்டுமே இருக்க வேண்டும்.​

3. வங்கி FD-யை மட்டுமே நம்பியிருப்பது!

NRE FD-ல் வட்டி வரி இல்லைதான். ஆனால் இந்தியாவின் பணவீக்கம் 6-7% இருக்கும்போது, 7% வட்டி தரும் FD உங்கள் பணத்தை வளர்க்கவில்லை; தக்கவைக்க மட்டுமே செய்கிறது. இந்தியா திரும்பும்போது, மருத்துவச் செலவும், பிள்ளைகள் படிப்பும் தாறுமாறாக ஏறியிருக்கும். அப்போது இந்த FD வட்டி நிச்சயம் போதாது.​

இதற்கு என்னதான் தீர்வு? SWP (Systematic Withdrawal Plan)

Monthly Income Plan
SWP Investment

"என் பணம் என் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். நான் ஊருக்குப் போனாலும், மாதம் 1-ந்தேதி என் அக்கவுண்டில் சம்பளம் விழ வேண்டும்." இதுதான் உங்கள் ஆசை என்றால், SWP தான் ஒரே வழி.

ரியல் எஸ்டேட்டில் ₹ 1 கோடி முதலீடு செய்தால் மாதம் கையில் கிடைப்பது வெறும் 16,000 - 17,000 ரூபாய் மட்டுமே (2% Yield). ஆனால், அதே ₹ 1 கோடியை பாதுகாப்பான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் (Conservative/Hybrid Funds) முதலீடு செய்து, மிகக் குறைந்த 6% விகிதத்தில் SWP செய்தாலே, மாதம் 50,000 ரூபாய் பெற முடியும். இது வாடகையை விட சரியாக 3 மடங்கு அதிகம்."

லிக்விடிட்டி (Liquidity): அவசரத்திற்கு உறவினரிடம் கேட்க வேண்டாம். உங்கள் பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம்.

இரண்டாவது சம்பளம்: நீங்கள் வளைகுடாவில் இருக்கும்போதே, ஊரில் உள்ள உங்கள் குடும்பத்திற்கு மாதம் தோறும் பணம் அனுப்ப இந்த SWP உதவும். நீங்கள் ஊர் திரும்பிய பிறகு, இதுவே உங்கள் பென்ஷனாகவும் இருக்கும்.

தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் உங்கள் நஷ்டம்!

"அடுத்த விடுமுறையில் பார்த்துக்கொள்ளலாம்" என்று தள்ளிப்போடாதீர்கள். 50 வயதில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு தவறான முடிவும், உங்கள் ஓய்வுக்கால நிம்மதியைக் குறைக்கும். ரியல் எஸ்டேட் மோகத்திலிருந்து வெளியே வந்து, புத்திசாலித்தனமாக யோசிக்க வேண்டிய நேரம் இது.

வளைகுடா தமிழர்களுக்கான பிரத்யேக ஒர்க் ஷாப்!

உங்கள் பயத்தைப் போக்கி, தெளிவான வழிகாட்டலை வழங்க, "வளைகுடா டு இந்தியா: SWP மூலம் இரண்டாவது வருமானம் (Second Income) உருவாக்குவது எப்படி?" என்ற சிறப்பு ஆன்லைன் வகுப்பு நடைபெறவுள்ளது.

Labham Webinar

இந்த வகுப்பில் என்ன கற்றுக்கொள்வீர்கள்?

ரியல் எஸ்டேட் vs மியூச்சுவல் ஃபண்ட்: ஒரு நேரடி ஒப்பீடு.

மாதம் 50,000 ரூபாய் வருமானம் பெற எவ்வளவு முதலீடு தேவை?

உறவினர்களை நம்பாமல், உங்கள் பணத்தை நீங்களே நிர்வகிப்பது எப்படி?

NRI-களுக்கான வரிச் சலுகைகள் என்னென்ன?

நாள்: டிசம்பர் 06, 2025 (சனிக்கிழமை)
நேரம்: மதியம் 12:30 - 02:00 (இந்திய நேரம்)
வகுப்பு மொழி: தமிழ்

உங்கள் உழைப்புக்கான சரியான அங்கீகாரத்தை நீங்களே கொடுங்கள்.

பதிவு செய்ய: https://labham.money/webinar-dec-06-2025?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_dec06_2025

(வேண்டுகோள்: இந்நிகழ்ச்சி துபாய், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத் போன்ற வளைகுடா நாடு வாழ் இந்தியர்களுக்கானது மட்டுமே. குறைந்த இடங்களே உள்ளன. எனவே, Gulf NRI அல்லாதோர் இந்நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டாம்.)

FD-ஐ விட இரட்டிப்பு லாபம்; 45-60 வயதில் ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்வது எப்படி? முழு விளக்கம்

"குழந்தைகள் படிப்பு முடிந்துவிட்டது அல்லது முடியப்போகிறது. வீட்டுக் கடன் கிட்டத்தட்ட அடைந்துவிட்டது. கையில் சில லட்சங்கள் சேமிப்பு இருக்கிறது. இனி என்ன செய்வது?" உங்களில் பலர் இப்படி யோசித்துக் கொண்டி... மேலும் பார்க்க

'இப்போ' வெள்ளி முதலீட்டை மிஸ் பண்ணீடாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் 'ஃபார்முக்கு' வந்துள்ளது என்றே கூறலாம். தீபாவளிக்குப் பிறகு, தங்கம், வெள்ளி விலை சற்று இறங்குமுகத்திற்கு சென்றது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. இந... மேலும் பார்க்க

மாதம் ரூ.1 - ரூ.3 லட்சம் பெறுவது எப்படி? - வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அசத்தல் Financial Planning!

துபாய், குவைத், ஓமன், சிங்கப்பூர், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து என உலகம் முழுக்க பல நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். பல்வேறு நாடுகளில் பல்வேறு வேலைப் பார்த்து, கஷ்டப்பட்டு உழைத்து, ச... மேலும் பார்க்க

அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வுக் காலத்துக்கான பணத்தை எப்படித் திட்டமிட்டுச் சேர்க்கலாம்?

அரசு வேலை என்றாலே கவலை இல்லாத வேலை என்றுதான் நினைத்தது ஒரு காலம். காரணம், நிலையான வேலை, கை நிறைய சம்பளம் என்பது போக, ஆயுள் முழுக்க பென்ஷனும் கிடைக்கும் என்கிற காரணங்களால் அனைவரும் அரசு வேலை வேண்டும் எ... மேலும் பார்க்க

இனி வெள்ளியை அடமானம் வைத்தும் கடன்; எவ்வளவு பெற முடியும்? எங்கே பெறலாம்?|Q&A

தங்கம் போல, வெள்ளியின் விலையும் உயர்ந்திருக்கிறது. அதே மாதிரி, இனி வெள்ளியையும் அடமானம் வைக்கலாம். இதற்கான புதிய விதிமுறைகளை பிறப்பித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. எங்கெல்லாம் இந்தக் கடன் கிடைக்கும்?இ... மேலும் பார்க்க

திருவள்ளூர்: 'Asset Allocation சூப்பர் ஃபார்முலா' நிகழ்ச்சி; சோம. வள்ளியப்பன் சிறப்புரை; முழு விவரம்

சொத்து ஒதுக்கீடு: சிறந்த முதலீட்டு உத்தி..!சொத்து ஒதுக்கீடு (Asset allocation) என்பது ஒரு சிறந்த முதலீட்டு உத்தியாகும், இது நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் லிக்விட் ஃபண்ட் போன்ற பல்வேறு சொ... மேலும் பார்க்க