செய்திகள் :

அதிகாலையிலேயே உக்ரைன் நகரங்களைத் தாக்கிய ரஷியா! 2 பேர் பலி!

post image

உக்ரைன் மீதான ரஷியாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

உக்ரைன் தலைநகரான கீவ் மற்றும் கடலோர ஒடெசா ஆகிய 2 நகரங்களின் மீது இன்று (ஜூன் 10) அதிகாலை ரஷியா, ட்ரோன் மற்றும் ஏவுகணைகளின் மூலம் தொடர் தாக்குதல்கள் நடத்தியது. இதில், 2 பேர் பலியான நிலையில் 13 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒடெசா நகரத்தின் மீதான தாக்குதலில், அங்கு அமைந்திருந்த பெண்கள் மருத்துவமனை மற்றும் குடியிருப்புக் கட்டடங்கள் பலத்த சேதமைந்ததுடன், 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நகர ஆளுநர் ஒலேஹ் கிப்லர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் தலைநகரான கீவ் மீதான தாக்குதல்களில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இத்துடன், நகரத்தின் பல இடங்களில் வெடிகுண்டுகள் வீசப்பட்ட நிலையில் பல மணி நேரமாக ஏராளமான ட்ரோன்கள் அங்கு தாக்குதலில் ஈடுபட்டதை உள்ளூர் மக்கள் உறுதி செய்துள்ளனர்.

கடந்த ஜூன் 1 ஆம் தேதி ரஷியாவின் விமானப் படைத் தளங்களின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு, ரஷியா பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ட்ரோன்களைக் கொண்டு உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஒடெசா மற்றும் கீவ் நகரங்களில் ரஷியா அதன் தாக்குதல்களைத் தொடர்ந்துள்ளது.

இருநாடுகளுக்கும் இடையில் போர்க் கைதிகளின் பரிமாற்றம் மேற்கொள்ளப்படும் சூழலில் நடைபெறும் இந்தத் தாக்குதல்களினால், உக்ரைன் மக்கள் பெரும்பாலானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பதுங்கு குழிகள் மற்றும் மெட்ரோ நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதையும் படிக்க: தென் ஆப்பிரிக்காவில் மாயமான சிறிய ரக விமானம்! பயணிகள் 3 பேரும் பலியானதாக அறிவிப்பு!

போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டோம்; மீறினால் தக்க பதிலடி கொடுப்போம்! - இஸ்ரேல் பிரதமர்

ஈரானுடனான போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாகவும் ஈரானுக்கு எதிராக அனைத்து போர் இலக்குகளையும் அடைந்துவிட்டதாகவும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நோக்கில் ஈரா... மேலும் பார்க்க

கண்ணாமூச்சி ஆடும் ஈரான்-இஸ்ரேல்! இறங்கி அடித்துவிட்டு போர் நிறுத்தமா?

ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் முடிவாகியிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேலின் சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்டுள்ளன.இஸ்ரேல் -... மேலும் பார்க்க

போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்! - டிரம்ப்புக்கு நெதன்யாகு நன்றி

ஈரானுடனான போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் தெரிவித்துள்ளது.இருநாடுகளும் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டிருந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் பி... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்து: ஈரானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 2,200-ஐ கடந்தது!

ஆபரேஷன் சிந்து மீட்புத் திட்டத்தின் மூலம் ஈரான் நாட்டில் சிக்கியிருந்த 292 இந்தியர்கள் இன்று (ஜூன் 24) காலை தாயகம் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரால், இருநாடுக... மேலும் பார்க்க

ஈரான் தாக்குதல் எதிரொலி: இஸ்ரேல் வான்வழித் தடம் மூடல்!

இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தி வருவதால் அந்நாட்டின் வான்வழிப் பாதை முழுவதுமாக மூடப்பட்டு அனைத்து வகையான பயணிகள் விமானங்களின் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஈ... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் அமல்; தயவு செய்து மீறாதீர்கள்! - டிரம்ப் எச்சரிக்கை!

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் அமலுக்கு வந்துள்ளதாகவும் அதை தயவுசெய்து மீறவேண்டாம் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர... மேலும் பார்க்க