உலகக் கோப்பை: ரூ.2.5 கோடி ரொக்கம், அரசு பணி, வீட்டு மனை: வறுமையைத் துரத்திய வீரம...
அதிமுக: `செங்கோட்டையன் விவகாரம்; திமுக மீது சந்தேகம்!' - பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
அ.தி.மு.க ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச பா.ஜ.க தான் என்னை அழைத்தது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``என்னை அழைத்தது பாஜக தான். அங்கே என்ன நடந்தது என்பதை நான் வெளியே சொல்ல விரும்பவில்லை.
கட்சி ஒன்றிணைக்கப்பட வேண்டும் என அவர்கள் கூறினார்கள். நானும் அதையேதான் சொன்னேன். பாஜகவை விட்டால் எங்களுக்கு வேறு வழி இல்லை.

எங்களை விட்டால் பாஜகவுக்கு வேறு வழி இல்லை எனக் கூறினேன். ஆகவே, எங்களை தமிழ்நாட்டின் அரியணையில் அமரவைக்க தயாராக இருக்க வேண்டும் எனச் சொன்னேன்.
தன்னை முதல்வர் ஆக்கிய சசிகலாவை மிக அவதூறாக எடப்பாடி பழனிசாமி பேசினார்." என்றார்.
செங்கோட்டையனின் பேட்டியைத் தொடர்ந்து, இந்த விவகாரத்துக்குப் பின்னணியில் பா.ஜ.க செயல்படுவது உறுதியாகியிருக்கிறது எனப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
செங்கோட்டையனின் பேட்டி தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ``அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்க வேண்டும் என பா.ஜ.க சொன்னதாக கேட்கிறீர்கள். அவர் அ.தி.மு.க-வில் தான் இருக்கிறார்.
அப்படி இருக்கும்போது அவர் எப்படி அதிமுக-வை ஒருங்கிணைக்க யாரிடம் சொன்னார். அவர் கொடுத்தப் பேட்டியை முழுதாகப் பார்த்தேன்.

6 பேர் ஒன்றிணைக்கச் சென்றோம் என்கிறார். யாரிடம் ஒருங்கிணைக்கச் சொன்னோம் என்பதையும் அவர் தெளிவாகச் சொல்லவில்லை.
நேற்று முன் தினம்தான் அ.தி.மு.க-வில் இருந்த மனோஜ் பாண்டியன் தி.மு.க-வில் இணைந்தார். அதற்குப் பின்னணியில் தி.மு.க இருக்கிறது.
செங்கோட்டையன் விவகாரத்துக்குப் பின்னணியிலும் திமுக இருக்குமோ எனச் சந்தேகிக்கிறோம்." எனப் பேசியிருக்கிறர்.















