கரூர்: மது அருந்தும் போது தகராறு; நண்பரை பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்த இள...
US: இனி பாஸ்போட்ர்டில் இரண்டு பாலினம் மட்டுமே - ட்ரம்ப்பின் கட்டுப்பாட்டுக்கு நீதிமன்றம் அனுமதி!
அமெரிக்க பாஸ்போர்ட்களில் குறிப்பிடப்படும் பயணியின் பாலினம் அவர்களது பிறப்பு பாலினத்துடன் (அதாவது ஆண் அல்லது பெண்) ஒத்துப்போக வேண்டும் என்ற ட்ரம்ப் அரசின் நிபந்தனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது அமெரிக்க உச்ச நீதிமன்றம். இது திருநங்கையர் மற்றும் இதர பாலினத்தவர்களுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ட்ரம்ப் நிர்வாகம் LGBTQ+ சமூகத்துக்கு இடையிலான மோதலில் ட்ரம்ப்புக்கு இது மற்றொரு வெற்றி, LGBTQ+ அடையாளங்களைக் கொண்டிருப்பவர்களுக்கு பெரும் தோல்வி.

ட்ரம்ப் இந்தப் பாஸ்போர்ட் பாலினக் கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தும்போது, இது அரசியலமைப்புக்கு எதிரானது என பாலின செயல்பாட்டாளர்கள் வாதாடினர்.
ஆனால் உச்ச நீதிமன்றம், "பாஸ்போர்டில் பிறப்பின்போதான பாலினத்தைக் காண்பிப்பது, எந்த நாட்டைச் சேர்ந்தவர் எனக் காண்பிப்பதைப் போல சாதாரணமானதுதான். சம பாதுகாப்புக் கொள்கையை அது மீறவில்லை. இரண்டிலும் அரசு யாரையும் வித்தியாசமாக நடத்தாமல் ஒரு வரலாற்று உண்மைக்கு சான்றளிக்கிறது." எனக் கூறியிருக்கிறது.

இதன் மூலம் ஜோ பைடன் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஆண், பெண், இரட்டைத் தன்மை இல்லை ஆகிய மூன்று தேர்வுகளுக்குப் பதில், இனி ஆண் / பெண் என்ற இரண்டு தேர்வுகள் மட்டுமே வழங்கப்படும்.
















