செய்திகள் :

சென்னை: "இது நாலு பேரை இன்ஸ்பயர் பண்ணலாம்" - கண்ணகி நகர் கார்த்திகாவை வாழ்த்திய லோகேஷ் கனகராஜ்

post image

சமீபத்தில் பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் மகளிர் கபடி போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. அணியின் முக்கிய வீரரான சென்னை, கண்ணகி நகரைச் சேர்ந்த கார்த்திகா இந்தச் சாதனைக்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.

திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் கண்ணகி நகர் கார்த்திகாவை வாழ்த்தியும் பரிசுகளை வழங்கியும் வருகின்றனர்.

கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா
கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா

அந்த வகையில் நேற்றைய தினம் (நவம்பர் 6) இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கண்ணகி நகர் சென்று கார்த்திகா மற்றும் குழுவினரை வாழ்த்தியுள்ளார். ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

Lokesh Kanagaraj என்ன கூறினார்

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் கார்த்திகாவின் வெற்றி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "ரொம்ப சந்தோஷமா இருந்தது. அட் த சேம் டைம் ரொம்ப பெருமையாவும் இருந்தது, அதுக்கு ஒரு வாழ்த்து தெரிவிக்கதான் வந்தேன்.

லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்

ஏன்னா நான் இந்த ஏரியாக்கு பல முறை வந்துருக்கேன். ரொம்ப பழக்கப்பட்ட ஏரியா, மாநகரம் சூட்டிங்கும் இந்த இடத்துல பண்ணிருக்கேன், மாஸ்டர் படத்துல இங்க இருந்து நிறைய பேரை நடிக்க வச்சிருக்கேன்.

சோ எனக்கு இங்க இருந்து சாம்பியனா வந்ததுல இன்னும் பெருமை. அவங்க இன்னும் மேல சக்சஸ் ஆகணும். அதுக்கு வேண்டிய ஒரு வாழ்த்துதான் இது.

எவ்வளவு தூரம் நம்மளால போக முடியுமோ அதுக்கு ட்ரை பண்ணணும். அதுக்கு முடிஞ்ச அளவுக்கு சப்போர்ட் இப்படிதான் காட்ட முடியும். இன்னும் இது நாலு பேரை இன்ஸ்பயர் பண்ணலாம்" எனப் பேசினார்.

HBD Kamal : எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு டான்ஸ் மாஸ்டர் டு டெக்னாலஜி! - கமல் சில சுவாரஸ்யங்கள்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 71-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிறந்... மேலும் பார்க்க

``நாயகன் படத்தை நான் 16 முறை பார்த்திருக்கிறேன்; ரீ-ரிலீஸுக்கு தடையில்லை'' - உயர்நீதிமன்ற நீதிபதி

தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு முன்னோடி, 1987ல் வெளியான 'நாயகன்' படம் தான். மணிரத்னம்-கமல், பி.சி.ஶ்ரீராம் கூட்டாண்மையில் மூன்று தேசிய விருதுகளை வென்ற படம். வேலு நாயக்கர் கதாபாத்திரமாகவே கமல் வாழ்ந்த... மேலும் பார்க்க

What to watch: `நாயகன்', `ஆரோமலே', `கிஸ்' - இந்த வாரம் வெளியாகியுள்ள சீரிஸ் மற்றும் படங்கள் லிஸ்ட்!

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியுள்ள படங்கள் மற்றும் சீரிஸ் இவைதான்!நாயகன்:1987-ம் ஆண்டு, நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளிவந்த படம் `நாயகன்'. க... மேலும் பார்க்க

Aaromaley Review: 90ஸ் கிட்ஸின் காதலும், மேட்ரிமோனியின் மறுபக்கமும்! எமோஷன் எடுபடுகிறதா?

கௌதம் மேனன் படங்களின் மீது கொண்ட மோகத்தில் காதலித்தே தீர வேண்டும் என்று பதின்ம பருவத்திலேயே முடிவெடுக்கிறான் அஜித் (கிஷன் தாஸ்). ஆனால் பள்ளி, கல்லூரி என ஒவ்வொரு காலகட்டத்திலும் காதல்கள் சொதப்புகின்றன.... மேலும் பார்க்க

``சிங்கம் ஒன்று புறப்பட்டதே" -`அருணாச்சலம்' பட ஸ்டில்ஸ் | Photo Album

அருணாச்சலம் படத்தின் புகைப்படங்கள்அருணாச்சலம் படத்தின் புகைப்படங்கள்அருணாச்சலம் படத்தின் புகைப்படங்கள்அருணாச்சலம் படத்தின் புகைப்படங்கள்அருணாச்சலம் படத்தின் புகைப்படங்கள்அருணாச்சலம் படத்தின் புகைப்படங... மேலும் பார்க்க