செய்திகள் :

'அதிமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்'- வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிக்கை

post image

"அதிமுக எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் என்றென்றும் ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்போம். இதில் மாறுபட்ட கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்றாலும், வேறு மாவட்டங்களில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க முடியாது" என்று எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.கழகத்தின் சார்பில் கர்நாடக அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாதுவில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் அணை கட்ட தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதைக் கண்டித்தும், தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தப்படி விவசாயிகள் பயிர்கடனை முழுமையாக ரத்து செய்யாமல் சில விதிமுறைகள் விதித்துள்ளதை கண்டித்தும், அ.இ.அ.தி.மு.கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நாங்கள் எங்கள் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

இருப்பினும், கழகப் பொதுச் செயலாளர் அவர்கள், வருவாய் மாவட்டங்களில் தலைமையேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்த அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் இராமநாதபுரம் மாவட்டம் நத்தம் விஸ்வநாதன், தேனி மாவட்டம் எஸ்.பி.வேலுமணி, சேலம் மாவட்டம் பி.தங்கமணி, ராணிப்பேட்டை மாவட்டம் கே.பி.அன்பழகன் என அவரவர் சொந்த மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னின்று தலைமை ஏற்று நடத்துவதை தவிர்த்து, வேண்டுமென்றே வேறு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, இது முற்றிலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை.

ஏற்கனவே, கருத்து வேறுபாடு காரணமாக கழக பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்ட அனைவருக்கும் அவரவர் வகித்த மாநில, மாவட்ட உள்ளிட்ட கழக பொறுப்புகளை மீண்டும் திரும்ப வழங்கப்படும் என கழக பொதுச் செயலாளர் அவர்கள் உறுதியளித்தார்கள். ஆனால் அதன்படி மீண்டும் கழக பொறுப்புகள் வழங்கப்படவில்லை, புதிய கழக பொறுப்புகளில் நியமனம் செய்து கழக பொதுச் செயலாளராகிய தாங்கள் வெளியிட்ட அறிவிப்பை, நாங்கள் யாரும் ஏற்றுக்கொள்ள இயலாது. எங்களுக்கு நாங்கள் ஏற்கனவே, வகித்து வந்த கழக பதவிகள் திரும்ப வழங்க வேண்டும், என எழுத்து மூலம் எங்கள் நிலைபாட்டினை தங்களுக்கு தெரிவித்தும், அதற்கு தாங்கள் எந்த பதிலும் இல்லாமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகின்றீர்கள்.

இந்த சூழ்நிலையில் தாங்கள் தற்போது, கழகத்தின் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று நடத்த எங்களது சொந்த மாவட்டத்தை விடுத்து, வேறு மாவட்டங்களுக்கு நியமித்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளீர்கள். மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், மாண்புமிகு புரட்சிதலைவி அம்மா ஆகியோர்களின் விசுவாசிகளை புறக்கணிக்கும் வகையில் இது போன்று அறிவிப்பு வெளியிடப்படுவதாக உள்ளது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில், 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ரூ.75,000/- வரையிலான வங்கி கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் எனவும், ரூ.75,000/-க்குமேல் கடன் பெற்ற விவசாயிகளின் வங்கி கடனில் 50% அதாவது ரூ.35,000/- மட்டுமே தள்ளுபடி செய்ய த.வெ.க அரசின் அறிவிப்பு, ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல, பாகுபாடின்றி அனைத்து விவசாயிகள் பயிர்கடனை தள்ளுபடி செய்ய த.வெ.க அரசு முன் வரவேண்டும்.

மேலும் கர்நாடகா, மேகதாதுவில் அணை கட்டும் பிரச்சனை மற்றும் காவிரியில் நமக்குரிய பங்கு நீரை பெற்றிடவும், அது மட்டுமின்றி, தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை காக்க மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், மாண்புமிகு புரட்சிதலைவி அம்மா ஆகியோர்களின் வழியில் அ.இ.அ.தி.மு.கழகம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் என்றென்றும் ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்போம். இதில் மாறுபட்ட கருத்து வேறுபாடு வேறு எதுவுமில்லை. எனவே, அ.இ.அ.தி.மு.கழகம் சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு எங்கள் முழு ஆதரவு அளிக்கின்றோம், வேறு மாவட்டங்களில் சென்று கலந்து கொள்ள இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

''என்னிடம் ஆலோசிக்காமல் அதிகாரிகளே சொத்து வரியை மாற்றிவிட்டார்கள்'' - மேயர் பிரியா கடும் தாக்கு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டிருப்பதாக மக்கள் கொந்தளிக்கின்றனர். இது சம்பந்தமாக விளக்கம் அளித்திருக்கும் சென்னை மாநகராட்சி, ''சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது என்க... மேலும் பார்க்க

ஈரோடு: எரிசாராய ஆலை அனுமதிக்கு எதிர்ப்பு; மேளதாளத்துடன் சீர்வரிசையில் புகார் மனு! | Photo Album

ஈரோடு எரிசாராய ஆலைக்கு எதிர்ப்புஈரோடு எரிசாராய ஆலைக்கு எதிர்ப்புஈரோடு எரிசாராய ஆலைக்கு எதிர்ப்புஈரோடு எரிசாராய ஆலைக்கு எதிர்ப்புஈரோடு எரிசாராய ஆலைக்கு எதிர்ப்புஈரோடு எரிசாராய ஆலைக்கு எதிர்ப்புஈரோடு எர... மேலும் பார்க்க

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026: ரூ.1 லட்சம் கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து

‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ சென்னையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் நோக்கில... மேலும் பார்க்க

'ஷாநவாஸை நீக்குக' - திருமாவை அழுத்தும் சிறுத்தைகள் டு ஜெகதீஸை தூண்டிவிடும் கும்பல் |கழுகார்

திருமாவை அழுத்தும் சிறுத்தைகள்!ஷாநவாஸை நீக்குங்க...த.வெ.க அமைச்சரவையில் வி.சி.க பங்கேற்றிருக்கும் நிலையில், 'தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் மறைமுக ஆட்சி நடக்கிறது' எனப் பேசி வருகிறார், வி.சி.க-வின் முதன்மை... மேலும் பார்க்க

FCRA மசோதா: மீண்டும் கையில் எடுத்த மத்திய அரசு! எதிர்ப்பு எழுவது ஏன்?

ஆகஸ்ட் 12 ஆம் நாள் விரிவான ஆலோசனைகளை மேற்கொள்ளும் வகையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களையும் உள்ளடக்கிய 'கூட்டு நாடாளுமன்றக் குழுவிடம்' FCRA சோதாவை ஒப்படைப்பதற்கான தீர்மானத்தை உள்துறை இ... மேலும் பார்க்க

'சிங்கப்பூர் பயணத்துக்க அப்புறம்தான்..!' அவையில் பம்மும் எ.வ.வேலு; அதிருப்தியில் திமுக MLA க்கள்?

சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. செப்டம்பர் 8 வரை அவை நடக்கவிருக்கிறது. பட்ஜெட் மீதான விவாதம் முடிந்திருக்கும் நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் அக்கட்சியின் சீனியரும் கொறடாவுமான எ.வ.வ... மேலும் பார்க்க