செய்திகள் :

"அன்பைப் பரப்புவதே என்னுடைய புரட்சி!" - விமர்சனங்களுக்கு பதிலடி தந்த 'சிக்மா' பட நடிகை ஃபரியா

post image

டோலிவுட்டில் 'ஜதி ரத்னாலு' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஃபரியா அப்துல்லா. தற்போது இவர் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஹைதராபாத்தில் நடந்த பாரம்பரிய போனாலு திருவிழாவில் கலந்துகொண்டதற்காகச் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுக்கும் ட்ரோல்களுக்கும் உள்ளாகியுள்ளார்.

Faria Abdulla
Faria Abdulla

கடந்த ஆகஸ்ட் 10 அன்று, ஹைதராபாத்தில் உள்ள திருக்கோயில் ஒன்றில் ஃபரியா, தலையில் 'போனம்' சுமந்து, தப்பு மேள இசைக்கு நடனமாடி நேர்த்திக்கடனைச் செலுத்தினார்.

இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், இஸ்லாமிய பின்னணியைக் கொண்ட அவர் ஒரு இந்து மதப் பண்டிகையில் கலந்துகொண்டிருக்கிறார் என விமர்சித்தனர்.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்து ஃபரியா அப்துல்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு விளக்கமளித்திருக்கிறார்.

அவர், "என் தந்தை சஞ்சய் அப்துல்லா இந்து மதத்தில் பிறந்து, இஸ்லாத்தின் கோட்பாடுகள் பிடித்துப்போய் விருப்பப்பட்டு இஸ்லாமிய மதத்திற்கு மாறினார்.

ஒரு மதத்தின் நல்ல விஷயங்களை நேசித்து அதை ஏற்றுக்கொண்ட ஒரு தந்தையின் வழிகாட்டுதலில் வளர்ந்த எனக்கு, இஸ்லாத்தின் நல்ல பக்கங்கள் மட்டுமே கற்றுத்தரப்பட்டன.

என்னை வெறுப்பவர்கள், நான் தவறான பாதையில் செல்வதாக நினைப்பவர்கள் அல்லது என்னை 'காஃபிர்' என்று அழைப்பவர்கள் எதைச் சொன்னாலும் நான் உங்களுக்காக நல்லதையே பிரார்த்திக்கிறேன்.

நான் மரங்கள், பாறைகள், வண்ணத்துப்பூச்சிகள் எனச் சுற்றியுள்ள அனைத்து உயிர்களிலும் இறைத் தன்மையைக் காண்கிறேன்.

வெறுப்புக்குப் பதிலாக அன்பைப் பரப்புவதே என்னுடைய புரட்சி. என் மீது வெறுப்பைக் கொட்டுபவர்களுக்கும் நான் அன்பை மட்டுமே திருப்பித் தருவேன்," என விளக்கமளித்திருக்கிறார்.

``நான் செல்ஃபி கூட எடுப்பதில்லை" - நடிகர் நாகர்ஜுனா ஓபன் டாக்

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் தெலங்கானா சைபர் செக்யூரிட்டி பியூரோ "சுரக்ஷா கா திரங்கா" சைபர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது. இந்த நிகழ்வில் நடிகர் நாகார்ஜுனா கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் உரைய... மேலும் பார்க்க

``சொத்துகளைப் பணிப்பெண்ணுக்கு கொடுத்துவிடுங்கள்" - மூத்த நடிகரின் ஆசையும் குடும்பத்தாரின் முடிவும்!

தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் ரங்கநாத் (66) தற்கொலையைத் தொடர்ந்து அவரின் சொத்துகள் அனைத்தும் அவரின் பணிப்பெண்ணிடம் ஒப்படைக்கப்படும் என அவரின் மகன் தெரிவித்திருக்கிறார். 1949-ல் சென்னையில் பிறந்த இ... மேலும் பார்க்க

Anupama: "என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?" - செய்தியாளரின் கேள்விக்கு அனுபாமா பதில்

தெலுங்கில் அனுபமா பரமேஸ்வரனுக்கு 'கிரேஸி கல்யாணம்' படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. அனுபமா பரமேஸ்வரன், நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரு... மேலும் பார்க்க

ராஷ்மிகா மந்தனாவுக்குப் படுகாயம்; 6 வாரங்கள் ஓய்வெடுக்க சொன்ன மருத்துவர்கள்; என்ன நடந்தது?

நடிகை ராஷ்மிகா மந்தனா, படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்திருக்கிறார். இயக்குநர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான 'மைசா' படத்த... மேலும் பார்க்க

Yash: ``எனக்கு பேய் படம்னா பயம், பார்க்கமாட்டேன்" - திரையில் மிரட்டும் ராக்கி பாய் கலகல டாக்!

KGF திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் யாஷ். இவர், பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் நிதீஷ் திவாரி, மெகா பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாண்டமான 'ராமாயணம்' திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இதில் யஷ், லங... மேலும் பார்க்க

Allu Arjun: "பிடித்த பெண்ணின் வீட்டிற்கு வெளியே காத்திருங்கள்" - சர்ச்சையான அல்லு அர்ஜுன் ஸ்பீச்

ஹைதராபாத்தில் நடைபெற்ற தனது ரசிகர் மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட அல்லு அர்ஜுன், இணையத்தில் நடக்கும் ரசிகர்கள் சண்டை மற்றும் ட்ரோல்கள் பற்றிப் பேசியிருக்கிறார். அப்போது அவர், "எனது ரசிகர்கள் மற்றும் எ... மேலும் பார்க்க