செய்திகள் :

அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டரை வீழ்த்திய ஈரான்; 'தற்காப்புத் தாக்குதல்' நடத்திய அமெரிக்கா

post image

ஈரான் மீது தாக்குதலை நடத்தியுள்ளது அமெரிக்கா.

நேற்று ஈரான், அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டரைச் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதற்கு எதிராகத் தற்காப்புத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது அமெரிக்க ராணுவம்.

இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் மத்திய கட்டளையகம் (CENTCOM) தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது...
ட்ரம்ப்
ட்ரம்ப்

"அமெரிக்க ராணுவத்தின் 'அப்பாச்சி' (Apache) ரக ஹெலிகாப்டர் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, அமெரிக்க அதிபரின் உத்தரவின் பேரில், அமெரிக்க மத்திய கட்டளையக (CENTCOM) படைகள் இன்று மாலை 5 மணி (ET) அளவில் ஈரானுக்கு எதிராகத் தற்காப்புத் தாக்குதல்களைத் தொடங்கின.

ஈரானின் அநியாயமான ஆக்கிரமிப்புக்கு இணையாகக் கொடுக்கப்பட்ட தகுந்த பதிலடியே இந்த ராணுவ நடவடிக்கையாகும்".

இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பதாவது...

"நேற்று இரவு ஹார்முஸ் நீர்ச்சந்திப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நம்முடைய அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர் ஒன்றை ஈரானியர்கள் சுட்டு வீழ்த்தியதாக நமது பெருமைமிகு ராணுவம் தற்போது எனக்குத் தகவல் தெரிவித்துள்ளது.

அதில் இரண்டு பைலட்டுகள் இருந்தனர், நல்லவேளையாக அவர்கள் இருவரும் எந்தக் காயமும் இன்றி பாதுகாப்பாக உள்ளனர்.

இருப்பினும், இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா தகுந்த முறையில், கண்டிப்பாகப் பதிலடி கொடுத்தே தீர வேண்டும்".

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க

"திமுக நம்முடன் இணைந்து செயல்படும்; பினராயி விஜயனை என்னால் கட்டிப்பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி

கடந்த திங்கட்கிழமை (ஜூன் 8), டெல்லியில் இந்தியாக் கூட்டணி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாக் கூட்டணி கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலை... மேலும் பார்க்க

கொல்லூரில் முதல்வர் விஜய்: "எந்த விசேஷ கோரிக்கையும் அம்மனிடம் வைக்கவில்லை" - கோயில் கமிட்டி தலைவர்

கர்நாடகா மாநிலம் கொல்லூரில் இருக்கும் மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரபலம் ஆகும். இக்கோயிலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா பல முறை சென்று இருக்கிறார். இக்கோயிலுக்கு தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் வருக... மேலும் பார்க்க