செய்திகள் :

அமெரிக்காவிற்கு ஜாக்பாட்: 'செலவே இல்லாமல் 6,500 கோடி பேரல் எண்ணெய்' வெனிசுலாவின் சூப்பர் பரிசு!

post image

கடந்த ஜனவரி மாதம், வெனிசுலாவின் அப்போதைய அதிபர் மதுரோவைக் கைது செய்து, அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

இந்தச் சம்பவத்திற்குப் பின், ட்ரம்பின் டார்கெட் முழுவதும் வெனிசுலாவின் எண்ணெய் மீது இருந்தது.

அமெரிக்கா - வெனிசுலா ஒப்பந்தம்

அதற்கேற்ற மாதிரி, கடந்த 29-ம் தேதி, வெனிசுலாவுடன் எண்ணெய் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுள்ளது அமெரிக்கா. இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...

“அமெரிக்கா வெனிசுலா நாட்டுடன் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தத்தை இப்போது செய்துள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

எனது வழிகாட்டுதலின்படி, வெளியுறவுத் துறைச் செயலர் மார்கோ ரூபியோவும் பாதுகாப்புத் துறைச் செயலர் பீட் ஹெக்சேத்தும் இதில் இணைந்து செயல்பட்டனர்.

அவர்கள் வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் மற்றும் தனியார்த் துறையுடன் இணைந்து இந்த ஒப்பந்தத்தை முடித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தம் அமெரிக்கர்களுக்கு ஒரு பைசா கூட செலவில்லாமல், வெனிசுலாவில் உள்ள 6,500 கோடி பேரலுக்கும் அதிகமான எண்ணெயின் பெரும் பகுதியை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தமானது அமெரிக்காவின் எண்ணெய் இருப்பை இரட்டிப்பிற்கும் மேலாக அதிகரிக்கும்.

அமெரிக்காவின் எண்ணெய் விநியோகத்தைப் பெருமளவில் உயர்த்தும்.

மேலும் இன்னும் பல காலத்திற்கு அனைத்து அமெரிக்கர்களுக்குமான எரிபொருள் விலையைக் கணிசமாகக் குறைக்கும்.

அதே வேளையில், வெனிசுலாவை மிகப்பெரிய வெற்றி மற்றும் பெரும் செழிப்பை நோக்கிய பாதையில் தொடர்ந்து கொண்டு செல்லவும் இது உதவும்.

இந்த ஒப்பந்தம் வெனிசுலாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஏற்கனவே வளர்ந்து வரும் உறவை மேலும் வலுப்படுத்தும்!” என்று தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

இந்த எண்ணெய் எதற்கு பயன்படப் போகிறது?

தற்போது அந்த எண்ணெய் எதற்காக அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் என்று தனது ட்ரூத் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ட்ரம்ப்.

“வெனிசுலா எண்ணெயைக் கொண்டு நான் செய்யப்போகும் முக்கியமான காரியங்களில் ஒன்று, நமது நாட்டின் மூலோபாய எண்ணெய் இருப்பை (Strategic Petroleum Reserve) நிரப்புவதுதான்.

தூங்குமூஞ்சி ஜோ பைடனின் ஆட்சியால் அது கிட்டத்தட்ட முழுமையாகக் காலியாகிவிட்டது.

இந்த இருப்பை நிரப்பும் பணி மிக விரைவில் தொடங்க உள்ளது. இது வெனிசுலா நாட்டு மக்களிடமிருந்து அமெரிக்க மக்களுக்குக் கிடைக்கும் ஒரு பரிசாகும்.”

ட்ரம்ப் மதுரோவைக் கைது செய்த நோக்கங்களில் மிக முக்கியமான ஒன்று - வெனிசுலாவின் எண்ணெய் வளம். தற்போது இந்த ஒப்பந்தம் மூலம் ட்ரம்ப் இந்த விஷயத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க