செய்திகள் :

"அம்பேத்கரின் படைப்புகளை‌ தமிழுக்குக் கொண்டுவந்த பெருமை நல்லகண்ணுவிற்கே உரியது" - எஸ்.வி.ஆர்

post image

கம்யூனிஸ்ட், சுதந்திரப் போராட்ட வீரர், மிக மூத்த அரசியல் தலைவர், வாழ்நாள் போராளி என ஒட்டுமொத்த மக்களாலும் போற்றிப் புகழப்படும் நல்லகண்ணு தனது 101 வயதில் இயற்கை எய்தியிருக்கிறார்.

கம்யூனிஸ்டுகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் நல்லகண்ணு இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட தன் வாழ்நாள் முழுவதையும் பொது வாழ்விற்காக அர்ப்பணித்துக் கொண்ட இந்த மாமனிதரின் அசாத்தியமான சாதனைகளைப் பலரும் நினைவுக்கூர்ந்து வருகின்றனர்.

நல்லகண்ணு
நல்லகண்ணு

தெற்காசியாவின் மிக மூத்த மார்க்ஸிய, பெரியாரிய, அம்பேத்கரிய பேரறிஞர்களில் ஒருவரான தோழர் எஸ்.வி. ராஜதுரை, நல்லகண்ணு குறித்து பகிர்கையில், "1980- களில் இருந்தே தோழர் நல்லகண்ணு எனக்கு நல்ல பரிச்சயம். தமிழில் நான் மொழிபெயர்த்த 'கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை' நூலினை தோழர் நல்லகண்ணு தலைமையில் 2013-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வெளியிட்டோம்.

அந்த நிகழ்வில் பங்கேற்ற அவர், நீண்ட சிறப்புரையை நிகழ்த்தினார். பெரியார் மீதும் அம்பேத்கர் மீதும் நல்ல மதிப்பும் பற்றுக் கொண்டவர் தோழர் நல்லகண்ணு. இருவரையும் விலக்கி வைத்துவிட்டு கம்யூனிஸத்தை இங்கு வளர்க்க முடியாது என்பதை மிக உறுதியாக நம்பினார். அதேபோல், மஹாராஷ்டிரா மாநில அரசு வெளியிட்ட அம்பேத்கரின் படைப்புகளை தமிழில் கொண்டுவந்து சேர்த்த பெருமை தோழர் நல்லகண்ணுவிற்கே உரியது.

நல்லகண்ணுவுடன் எஸ்.வி.ஆர்
நல்லகண்ணுவுடன் எஸ்.வி.ஆர்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் சேர்மனாகப் பொறுப்பு வகித்த காலத்தில் இந்த முயற்சியில் தீவிரமாக இறங்கிய அவர், அம்பேத்கர் அறக்கட்டளை மூலம் நிதியைப் பெற்று இதைச் சாத்தியமாக்கினார். 37 பாகங்களாக வெளிவந்துள்ள அம்பேத்கரின் படைப்புகளை மலிவு விலையில் தமிழ் வாசகர்களின் கைகளுக்குக் கொண்டு வந்து சேர்த்ததைப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவரின் இந்த முன்னெடுப்பு மிகவும் போற்றுதலுக்குரியது" என்றார்.

பத்மஸ்ரீ வென்ற பழங்குடி ஓவியர்; மனைவிக்கு குடியிருப்புடன் அரசு பணி வழங்கிய நீலகிரி மாவட்ட நிர்வாகம்!

தொல்குடிகளின் தொட்டில் என அழைக்கப்படும் நீலகிரி மலையில் வாழ்ந்து வரும் பண்டைய பழங்குடி இன மக்கள் தங்களுக்கே உரிய தனித்துவமான பாரம்பர்யங்களைப் பின்பற்றி வருகின்றனர். குறிப்பிட்ட சில பழங்குடி இன மக்கள் ... மேலும் பார்க்க

நீலகிரி: மார்க் டவிடார் என்ற மனிதரும் ரிவால்டோ யானையும்... பாசப் பிணைப்பின் கதை - கலங்கும் மக்கள்!

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி பகுதியின் அடையாளமாக திகழ்ந்து வந்த ரிவால்டோ என பெயரிடப்பட்ட ஆண் யானை, காயம் காரணமாக நேற்று பரிதாபமாக உயிரிழந்து. மனிதர்களுடனான பிணைப்ப... மேலும் பார்க்க

பத்மா: 'அதே யூனிஃபார்ம்ல வர சொல்லிதான் மரியாதை செய்யணுமா?' - நெட்டிசன் கேள்விக்கு பார்த்திபன் பதில்

கீழே கிடந்த 360 கிராம் தங்கத்தை உரியவர்களிடம் எடுத்துக்கொடுத்த தூய்மைப் பணியாளர் பத்மா தான் கடந்த சில நாள்களாக வைரல். அவரை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் பாராட்டி வருகின்றனர். பத்மாவை நட... மேலும் பார்க்க

`தன் உயிரை தியாகம் செய்து..' - தேனீக்களிடமிருந்து 20 குழந்தைகளை காப்பாற்றிய அங்கன்வாடி பெண் ஊழியர்

மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் உள்ள மாதவாடா என்ற கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் கஞ்சன் பாய் என்ற பெண், சமையல் வேலை செய்து வந்தார். அவர் அங்கன்வாடியில் சமைத்துக் கொண்டிருந்தபோது அங்கு 20 கு... மேலும் பார்க்க

`குழந்தைங்க பசிக்கும், கல்விக்கும் முன்னாடி பயம் பெருசில்ல...' - ஊக்கமூட்டும் கேப் ஓட்டுநர் நந்தினி

வாழ்க்கை நமக்குச் சவால்களைத் தரும்போது, அதைக் கண்டு அஞ்சி ஓடாமல், அந்தச் சவால்களையே ஏணியாக மாற்றி முன்னேறுபவர்கள் மிகச் சிலரே. அந்த வகையில், ஹைதராபாத் நகரின் பரபரப்பான சாலைகளில் தன்னுடைய மூன்று குழந்த... மேலும் பார்க்க

`பசிக்கு மதம் தெரியாது’- 25 ஆண்டுகளாக வடலூர் சபை அன்னதானத்திற்கு அரிசி, காய்கறி அனுப்பும் இஸ்லாமியர்

`இதைவிட கொடுப்பினை வேறு என்ன இருக்க முடியும் ?’கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்திருக்கும் வள்ளலாரின் சத்தியஞான சபையில், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் உலகம் முழு... மேலும் பார்க்க