செய்திகள் :

அழைப்பு விடுத்த ஸ்டாலின்... திமுகவில் இணையும் விசிக பனையூர் பாபு?

post image

'ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளையை தத்தெடுத்துக் கொண்டாரா திருமாவளவன்?' என விஜய் அமைச்சரவைக்கு வி.சி.க சென்றதை விமர்சித்து, அக்கட்சியிலிருந்து விலகிய ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பனையூர் பாபு விரைவில் தி.மு.க-வில் இணைய இருப்பதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

விஜய் - திருமாவளவன்
விஜய் - திருமாவளவன்

நம்மிடம் பேசியவர்கள், "கடந்த ஆறு மாதங்களாக செய்யூர் தொகுதியை தயார் செய்து வைத்திருந்தார் பனையூர் பாபு. எந்த ஆலோசனையுமின்றி செய்யூர் தொகுதியை சிந்தனைச் செல்வனுக்கு கொடுத்துவிட்டார். இதனால் கடும் அப்செட்டான பாபு, வி.சி.க-விலிருந்து ஒதுங்கியிருந்தார்.

சீட் கிடைக்காத விரக்தி, கட்சியில் முக்கியத்துவம் இல்லை உள்ளிட்ட காரணங்களுடன் அவர் விலகலாம் என கிசுகிசுக்கப்பட்டன. இந்த சூழலில், விஜய் அமைச்சரவையில் வி.சி.க பங்கேற்றதையும் பனையூர் பாபு துளியும் விரும்பாத நிலையில் மே 24-ம் தேதி மாலை விலகினார். அவருக்கு தி.மு.க தரப்பிலிருந்து அழைப்பு வந்திருக்கும் நிலையில் அதையேற்று அவர் விரைவிலேயே தி.மு.க-வில் இணையலாம்" என்றனர்.

இதுகுறித்து தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம், "வி.சி.க, த.வெ.க அமைச்சரவையில் பங்கேற்றதை எங்கள் கட்சித் தலைமைக்கு விரும்பவில்லை. எனவே வி.சி.க-வில் அப்செட்டாக இருப்போரை கட்சிக்குள் இழுக்க முடிவெடுத்து சம்பந்தப்பட்ட நபர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது.

விசிக பனையூர் பாபு

அதனடிப்படையில், பனையூர் பாபுவை அழைத்து பேசியது தி.மு.க தலைமை. அப்போது பிடி கொடுக்காத பாபு, தற்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். வரும் ஜூன் 7-ம் தேதி அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கத்தில் ஆயிரக் கணக்கான வி.சி.க-வினருடன் பனையூர் பாபு இணைய அதிக வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு இணைந்தால் மதுராந்தகம், செய்யூர் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படலாம்" என்றனர்.

`வங்கிகளில் மக்கள் பணம் வைக்கும் விதத்தில் மாற்றம் ; RBI தங்கத்தை விற்கிறதா?' - அறிக்கை சொல்வதென்ன?

சர்வதேச அளவில் புகழ்பெற்ற புளூம்பெர்க் ஊடகம், தனது பொருளாதார நிபுணர் அபிஷேக் குப்தாவின் ஆய்வை மேற்கோள்காட்டி ஒரு செய்தியை வெளியிட்டது. அதன்படி, மே 22-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு வாரங்களில், இந்திய... மேலும் பார்க்க

`இந்திய வீடுகளில் உறங்கும் 35,000 டன் தங்கம்' - மோடி சொல்லும் `மறுசுழற்சி'; மாறுகிறதா மக்கள் மனநிலை?

இந்திய வீடுகளின் லாக்கர்களிலும், பீரோக்களிலும், கோயில் கருவறைகளிலும் சுமார் 35,000 டன் தங்கம் உறங்கிக் கொண்டிருக்கிறது. இதன் மதிப்பு கற்பனைக்கு எட்டாதது; சுமார் 3.8 டிரில்லியன் டாலர்கள்! இது நாட்டின் ... மேலும் பார்க்க

விஜய்யின் பத்திரிகையாளர் தவிர்ப்பு யுக்தி எப்படி உருவாக்கப்பட்டது? - களத்திலிருந்து ஓர் அலசல்!

முதல்வர் விஜய் அரசுமுறை பயணமாக கடந்த வாரம் டெல்லிக்கு சென்று வந்திருக்கிறார். பிரதமர் மோடியையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்திருக்கிறார். இந்தப் பயணத்தில் முதல்வர் பத்திரிகையாளர்களை சந்... மேலும் பார்க்க

இன்றும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம்; ஏற்கெனவே ரூ.7 உயர்வு; இன்னும் எவ்வளவு உயரலாம்?

ஈரான் போர் காரணமாக, இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.ஈரான் போர் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்கு, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றாமல் மத்திய ... மேலும் பார்க்க

"'ஆபரேஷன் சிந்தூர் 2.0' -க்கு இந்திய ராணுவம் தயாராகி வருகிறது!" - ராணுவத் தளபதி ஜெனரல் திவேதி

தேவை ஏற்பட்டால் 'ஆபரேஷன் சிந்தூர் 2.0’ நடவடிக்கையைத் தொடங்குவதற்கு இந்திய ஆயுதப் படைகள் முழுத் தயார் நிலையில் இருப்பதாக ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். மேலும், இந்தியப் ராணுவம்,... மேலும் பார்க்க

இனி ரூபாய் நோட்டு பேப்பரில் வராது; 'பிளாஸ்டிக்கில்' வரப்போகிறது? - RBI-க்கு ஏன் இந்த யோசனை?

இதுவரை இந்திய ரூபாய் நோட்டுகளைத் தாள்களில் தானே பார்த்திருக்கிறோம். இனி பிளாஸ்டிக்கில் பார்த்தாலும் பார்ப்போம். இந்திய ரிசர்வ் வங்கி இதற்கான யோசனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது புழக்கத்... மேலும் பார்க்க