செய்திகள் :

"'ஆபரேஷன் சிந்தூர் 2.0' -க்கு இந்திய ராணுவம் தயாராகி வருகிறது!" - ராணுவத் தளபதி ஜெனரல் திவேதி

post image

தேவை ஏற்பட்டால் 'ஆபரேஷன் சிந்தூர் 2.0’ நடவடிக்கையைத் தொடங்குவதற்கு இந்திய ஆயுதப் படைகள் முழுத் தயார் நிலையில் இருப்பதாக ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியப் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளும் தங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பைத் தீவிரமாக மேம்படுத்தி வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.

operation sindoor
Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர்

கடந்தாண்டு பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் பலியானதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானில் இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

புனேயில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு அகாடமியின் (NDA) 150-வது பயிற்சிப் படிப்பின் நிறைவு நாள் அணிவகுப்பு விழாவில்செய்தியாளர்களைச் சந்தித்த ஜெனரல் உபேந்திர திவேதி, "ஆபரேஷன் சிந்தூர் பொறுத்தவரை, அது இன்னும் முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

தற்போது தற்காலிகப் போர் நிறுத்தம் மட்டுமே நிலவுகிறது. எனவே, ஒருவேளை அடுத்த கட்டப் போர் மூண்டால், 'ஆபரேஷன் சிந்தூர் 2.0’ நடவடிக்கையை எதிர்கொள்ள இந்திய ராணுவமும், மற்ற இரு படைகளும் மிகச் சிறப்பான முறையில் தயாராகி வருகின்றன.

Upendra Dwivedi
Upendra Dwivedi

தற்போது போர்க்களங்கள் வெளிப்படையாக மாறிவிட்டன. நமது ஒவ்வொரு அசைவும் அடுத்த தரப்பிற்கு எளிதில் தெரிந்துவிடுகிறது.

எனவே, எல்லையோரப் பகுதிகளில் நமது படைகளை நிலைநிறுத்துவது, கையாள்வது மற்றும் நமது வீரர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவற்றில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்." எனக் கூறியிருக்கிறார்.

இனி ரூபாய் நோட்டு பேப்பரில் வராது; 'பிளாஸ்டிக்கில்' வரப்போகிறது? - RBI-க்கு ஏன் இந்த யோசனை?

இதுவரை இந்திய ரூபாய் நோட்டுகளைத் தாள்களில் தானே பார்த்திருக்கிறோம். இனி பிளாஸ்டிக்கில் பார்த்தாலும் பார்ப்போம். இந்திய ரிசர்வ் வங்கி இதற்கான யோசனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது புழக்கத்... மேலும் பார்க்க

22 வயதில் ஐபிஎஸ்; `தமிழ்நாட்டின் புதிய டிஜிபி' - மகேஷ்குமார் அகர்வால் நியமனம்!

தமிழகத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவாக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவி இருந்து வருகிறது. இந்தப் பதவிக்கு தகுதியான சீனியர் டி.ஜி.பி-க்களில் மூன்று அல்லது 5 பேரை மத்திய அரசின் யு.பி.எஸ... மேலும் பார்க்க

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை தொடக்க விழா தொடர்ந்து தள்ளிப் போவது ஏன்?

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க, 108 இடங்களில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட்கள், ஐ.யு.எம்.எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு விஜய் புதிய ஆட்சியை அமைத்தார். முதல்வரா... மேலும் பார்க்க

பத்திரிகையாளர்களை தவிர்த்த முதல்வர் விஜய்! - முன்னாள் முதல்வர்கள் பின்பற்றிய மரபை உடைப்பது முறையா?

முதல்வர் விஜய் அவர்கள் டெல்லியில் பத்திரிக்கையாளர்கள் கூப்பிட கூப்பிட, எந்த பதிலும் சொல்லாமல் போன அந்த வீடியோ தான் இணையதளங்களில் மிக வைரலாக பரவி வருகிறது.ஏன் முதல்வர் விஜய் பத்திரிகையாளர்களை தவிர்க்கி... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: `சுவாமி தரிசனமா, ரூ.4,000 ஜிபே.!' - அமைச்சரிடமே வசூல் வேட்டை நடத்திய அர்ச்சகர்கள்!

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குவது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாட்களில் ஆயிரக்கணக்கான ... மேலும் பார்க்க

ஆதார் அப்டேட்டுகளை 'முற்றிலும் இலவசமாக' செய்துகொள்ளலாம்; இதற்கு UIDAI சொல்லும் சூப்பர் வழி!

இந்தியாவில் எங்கேயும், எப்போதும் கேட்கப்படும் முக்கியமான ஆவணங்களில் ஒன்று - ஆதார் கார்டு. அந்த ஆதார் கார்டை அப்-டு-டேட்டாக வைத்திருப்பது மிக மிக அவசியம். ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு மாறியி... மேலும் பார்க்க