செய்திகள் :

அவிநாசி: இ-சேவை மையம் நடத்தும் கணவர்; எல்.முருகனை வீழ்த்தி வாகை சூடிய இல்லத்தரசி! யார் இந்த கமலி?

post image

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலா மணி, அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இடையே தான் கடுமையான போட்டி நிலவுவதாக நம்பப்பட்டது.

இந்த இரண்டு வேட்பாளர்களுக்கு மத்தியில் தான் நீயா நானா என்கிற போட்டி என்று யூகித்து வந்த நிலையில், சத்தமே இல்லாமல் மூன்றாவதாக நின்ற த.வெ.க வேட்பாளர் கமலி, இருவரையும் பின்னுக்குத் தள்ளி அவிநாசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு வாகை சூடி அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார் கமலி.

கமலி

யார் இந்த கமலி?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் கமலி. 28 வயதான இவரின் கணவர் இ- சேவை மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இலத்தரசியாக குடும்பத்தை கவனத்து வந்திருக்கிறார் கமலி.

முதுகலை பட்டதாரியான இவருக்கு ஏற்பட்ட அரசியல் ஆர்வம் காரணமாக த.வெ.க- வில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

அவிநாசி தொகுதியில் த‌.வெ.க சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார். 15,373 வாக்குகள் வித்தியாசத்தில் எல்.முருகனை தோற்கடித்ததுடன், மருத்துவர் கோகிலாமணியை மூன்றாவது இடத்திற்கு தள்ளி கவனத்தை ஈர்த்து வருகிறார் கமலி.

ஈரோட்டில் வாஷ் அவுட்டான திமுக கூட்டணி; அமைச்சர் உட்பட 8 பேரை வீழ்த்திய த.வெ.க!

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கோபிச்செட்டிப்பாளையம், மொடக்குறிச்சி, பவானி, பவானிசாகர் தனி, அந்தியூர், பெருந்துறை என மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஈரோடு மேற்கு, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்ப... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம்: சோபிக்காத த.மா.கா; சம்பவம் செய்த சக்கரபாணி - 7வது முறை வெற்றி சாத்தியமானது எப்படி?

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார், சக்கரபாணி. தொகுதி முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் என எல்லாவற்றையும் செய்து தொகுதியைத் தன் கன்ட்ரோலி... மேலும் பார்க்க

ஓ.பி.எஸ்ஸிற்கு ’கிலி’யை ஏற்படுத்திய த.வெ.க; திக் திக் வாக்கு எண்ணிக்கை; போராடி கரை சேர்ந்த தி.மு.க!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க -வில் இணைந்து போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார் எனும்போது வெல்வாரா? தோற்பாரா? என்ற எதிர்பார்ப்புகள் எகிறியது. அ.தி.மு.க-வால் இவ்வளவு காலமும் வெற... மேலும் பார்க்க

TVK: சீட் தராத திமுக; பழி தீர்த்த கட்சித்தாவல்; சூலூரை வென்ற தவெக சுகுமாரின் பின்னணி என்ன?

சூலூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 616 வாக்காளர்கள் உள்ள நிலையில்,2 லட்சத்து 71 ஆயிரத்து 567 பேர் வாக்களித்தனர். இதில் 90 ஆயிரத்து 531 வாக்குகள் பெற்ற த.வெ.க. வேட்பாளர் சுகுமார... மேலும் பார்க்க

TVK: 'சென்னைவாசி, சிபி சத்யராஜின் ஆதரவு' - சிங்காநல்லூரை வென்ற ஸ்ரீ கிரி பிரசாத்தின் பின்னணி என்ன?

சிங்காநல்லூர் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 69 ஆயிரத்து 941 வாக்காளர்களில், தேர்தலில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 746 பேர் வாக்களித்தனர். இதில் த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீ கிரி பிரசாத் 84 ஆயிரத்து 163 வாக்... மேலும் பார்க்க

ஆண்டிப்பட்டி: மூன்றாவது முறையும் தம்பியை வென்ற அண்ணன்! - காரணம் என்ன?

ஆண்டிப்பட்டி தொகுதி ‘மூன்று முன்னாள் முதல்வர்கள் களம் கண்ட தொகுதி’ என பெயர் பெற்ற நிலையில் தற்போது மூன்று முறை அண்ணன், தம்பி போட்டியிட்ட தொகுதி என புதிய பெயர் கிடைத்திருக்கிறது. திமுக சார்பில் சிட்டிங... மேலும் பார்க்க