`உலகக்கோப்பை நாயகன் சூர்யா...' பேட்டிங்கில் தடுமாற்றம்; ஒலிம்பிக் அணியில் இடத்த...
ஆடம்பர கார் தாராளமாக வாங்குங்க; எப்போ தெரியுமா? - வாழ்க்கை நிதி பிளானிங்| பணம் வளர்ப்போம் -3
நாள் - 3
30-களில் ஆரம்பத்தில் அனைவரும் வாங்க நினைப்பது... செய்யத் துடிப்பது - கார், வீடு, டிராவல்.
அந்த ஆசைகளை எப்படி பிளான் செய்வது என்று ஐடியா கொடுக்கிறார் நிதி நிபுணர் சுந்தரி ஜகதீசன்.
"இந்தியர்களுக்கு வீடு என்பது பெரும் கனவு. கார் மற்றும் டிராவல் ஆசை. இவற்றை வாங்குவதும், செய்வதும் தவறு இல்லை.
ஆனால், அதை எப்படி செய்கிறோம் என்பதில் தான் நாம் சிக்கலில் இருந்து தப்பிப்பதற்கான வழி.
வீடு, கார், டிராவல் மூன்றையும் 'மேலே இருக்கிறவன் பாத்துப்பான்' என்பதுபோல, கடன் பார்த்துகொள்ளும் என்று நினைக்கக்கூடாது.

எப்படியாவது கடனைத் தவிர்த்து, இவற்றைச் செய்துவிட முயல வேண்டும்.
அதனால், எந்த வயதிற்குள் இவற்றைச் செய்யப் போகிறோம் என்பதை பிளான் செய்து, 30 வயதிற்குள்ளேயே அதற்கான திட்டமிடலை தொடங்கிவிட வேண்டும்.
வீடு, கார் ஆகியவற்றை வாங்க குறைந்தபட்சம் 20 சதவிகித டவுன்பேமென்டையாவது ரெடி செய்து கடன் வாங்குங்கள். மாதா மாதம் கட்ட வேண்டிய இ.எம்.ஐ மற்றும் எவ்வளவு காலம் கட்ட வேண்டும் என்பதையும் சரியாகத் திட்டமிட்டு கடன் வாங்குங்கள்.
ஆன்லைனில் இருக்கும் கடன் கால்குலேட்டர்களில் கணக்குப் போட்டு பாருங்கள்.
நீண்ட காலக் கடனை தேர்ந்தெடுத்துவிடாதீர்கள். முடிந்தளவு குறைந்த ஆண்டுக் கடனையே தேர்ந்தெடுங்கள்.
கடன் காலத்தின் இடையில் லம்சம் தொகை கிடைத்தால், அதை கடனில் கட்டி, கடன் காலத்தையும், மாதா மாதம் கட்ட வேண்டிய இ.எம்.ஐ தொகையையும் குறைக்க பாருங்கள்.
கையில் பணம் இருந்து கார் வாங்குகிறீர்கள் என்றால் எவ்வளவு பெரிய ஆடம்பர காரை வேண்டுமானாலும் வாங்குங்கள். ஆனால், கடனில் கார் வாங்கும்போது, தேவையையொட்டி வாங்குங்கள்.

டிராவலுக்கு கடன் வாங்கவே வாங்காதீர்கள். அதற்காக பணத்தை சேமித்து வையுங்கள் அல்லது முன்பே திட்டமிட்டு அதற்கு முதலீட்டைத் தொடங்குங்கள்.
டிராவல் செலவுகளைக் குறைக்க வார நாள்களில் ட்ரிப் பிளான் செய்யுங்கள். கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துங்கள். இந்த மாதிரி சின்ன சின்ன ட்ரிக்ஸ்களைப் பயன்படுத்துங்கள்.
கடனிலேயே நல்ல கடன், கெட்ட கடன் என்று இரண்டு வகை உண்டு. அந்த வகையைப் பொறுத்து கடன் வாங்கும் முடிவுகளை எடுங்கள்".



















