செய்திகள் :

'சின்ன கல்லு பெத்த லாபம்' 30 வயதிற்குள் 2 நிதி திட்டங்கள் - வாழ்க்கை நிதி பிளானிங்| பணம் வளர்ப்போம்

post image

நாள் - 2

21 - 30 வயது வரை மிக முக்கிய காலக்கட்டம். அந்த நேரத்தில் எமெர்ஜென்சி ஃபண்டுடன் இன்னும் சில நிதி விஷயங்களையும் 30 வயதிற்குள் தொடங்க வேண்டுமாம்.

அவற்றைக் குறித்து நமக்கு விரிவாகக் கூறுகிறார் நிதி நிபுணர் சுந்தரி ஜகதீசன்.

"30 வயதிற்குள் ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீட்டைத் தொடங்கிவிட வேண்டும்.

ஆயுள் காப்பீடு என்பது நமக்குப் பிறகு நம் குடும்பத்திற்கு ஓடி வந்து உதவும் நிதி.

 சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

மருத்துவக் காப்பீடு என்பது நாம் உட்பட நம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் உடல்நிலை கோளாறுகளின் போது உதவும் நிதி.

மருத்துவக் காப்பீட்டில் அம்மா, அப்பாவை சேர்த்துக்கொள்வது மிக மிக அவசியம். நம்முடைய இந்தக் காலகட்டத்தில் அம்மா, அப்பாவிற்கு வயதாகி இருக்கும்.

அவர்களுக்கு அப்போது உடல்நிலை கோளாறு வருவது இயல்பே.

அது வந்த பின், 'செலவுக்கு பணம் இல்லையே' என்று தவிப்பதை தவிர்க்கவும், 'கடன் வாங்குவதை' தவிர்க்கவும் அவர்களுக்கும் மருத்துவக் காப்பீடு எடுத்துவிடுவது நல்லது.

மருத்துவக் காப்பீடு

ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக எடுக்க முடியவில்லை என்றாலும், ஃபேமிலி ஃப்ளோட்டர் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் எடுத்துவிடுவது நல்லது.

அலுவலகங்களில் நமக்கு தனி மருத்துவக் காப்பீடு கொடுத்தாலும், வெளியில் கட்டாயம் பெற்றோர்களுக்கு மருத்துவக் காப்பீடு எடுத்துவிட வேண்டும்.

30 வயதிற்குள் காப்பீடு கட்டாயம் எடுத்துவிட வேண்டும் என்று சொல்வதற்குப் பின்னால், அதற்குள் எடுத்துவிட்டால் பிரீமியம் தொகை குறையும் என்பது முக்கிய காரணம்.

மருத்துவக் காப்பீடு
மருத்துவக் காப்பீடு

தனியாரில் மருத்துவக் காப்பீடு எடுக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. மாநில அரசு, மத்திய அரசு என இரண்டும் பல மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை வைத்திருக்கின்றன.

அதிலாவது காப்பீட்டை தொடங்க வேண்டும்.

தங்கம் எவ்வளவு, எதில் எவ்வளவு முதலீடு என்று இப்போதே அசட் அலோகேஷனைத் தொடங்கிவிட வேண்டும்.

SIP, PPF, NPS ஆகியவற்றையும் 25 வயதிற்குள் தொடங்குகள். ஒவ்வொரு வருசமும் இவற்றை ஸ்டெப் அப் செய்யுங்கள்.

முடிந்தளவு பெரும்பாலான கடனை 30 வயதிற்குள் முடித்துவிடுங்கள்.

30 வயதிற்குள் இவ்வளவற்றையும் செய்துவிடுங்கள் என்று கூறுவதற்கு காரணம் - மனிதன் வாழ்க்கையில் 21 - 30 வயதைக் 'கோல்டன் காலம்' என்றே கூறலாம்.

எவ்வளவு சின்ன வயதில் முதலீடு, சேமிப்பைத் தொடங்குகிறோமோ, அந்த அளவிற்கும் நமக்கு தேவைப்படும் காலத்தில் அதிக பணம்... லாபம் கையில் கிடைக்கும்.

சின்ன கல்லு... பெத்த லாபம் மக்களே".

Labham - 1: குறைந்த ஆண்டில் அதிக பணத்தை சேர்க்க உதவும் Stepup முதலீடு... எப்படி?

நம்மில் பலருக்கும் எதிர்காலத்துக்கான பணத்தை அதிலும் குறிப்பாக, ஓய்வுக் காலத்துக்குத் தேவையான பணத்தைக் கட்டாயம் சேர்த்தாக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. இன்றைய நிலையில், நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு... மேலும் பார்க்க

NRI Corner-6: முதலீட்டில் வெளிநாடு வாழ் தமிழர்கள் செய்யும் 3 முக்கியத் தவறுகள்! எப்படி சரிசெய்யலாம்?

இன்றைய தேதியில் உலகத்தின் பல நாடுகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள். தாயகத்தை விட்டு பல ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் புதிய மொழி, புதிய கலாசாரம், புதிய உணவு, புதிய சுற்றுச்சூழல் என எல்லா விதத்திலும் ... மேலும் பார்க்க

Investment: என்ன பண்ணனும்னு ஓரளவு தெரியும்; ஆனா பண்ணல - இது நீங்களா?

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பெருக்கெடுத்து ஓடிய காவிரி நதியின் குறுக்கே சோழ மன்னன் கரிகாலன் கல்லணையைக் காட்டினார். வெள்ளநீரைத் தடுத்து ஒரு மாபெரும் அணையைக் கட்டும் தொழில்நுட்ப அறிவும், புத... மேலும் பார்க்க

அம்மா சேர்த்து வெச்ச கடுகு டப்பா காசு தான் இப்போது 'இது': வாழ்க்கை நிதி பிளானிங்| பணம் வளர்ப்போம்

பணம் வளர்ப்போம் - ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பது தான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும். அப்படி இ... மேலும் பார்க்க

NRI Corner - வரிக்கு பயந்து முதலீடு செய்யாமல் இருப்பது வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு சரியா?

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ( NRI - Non-Resident Indian) மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்போது எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்கிற கேள்விக்கான பதிலை அவசியம் தெரிந்துகொள்ள நினைப்பார்க... மேலும் பார்க்க

11 நாளில் பணம் டபுளாகும்; மோசடி கும்பலிடம் 12 கோடி இழந்த டாக்டர்; அவசியம் அறிய வேண்டிய CAGR

யாரெல்லாம் அதிகப் பணம் சம்பாதிக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் பணம் செயல்படும் விதம் பற்றி ஓரளவுக்கே தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்கிற உண்மை மீண்டும் மீண்டும் நிருபிக்கிற மாதிரி பல சம்பவங்கள் நடந்துகொண்... மேலும் பார்க்க