செய்திகள் :

ஆட்டை தேடிவந்த மலை பாம்பு; பிடித்து கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு போதையில் விளையாடிய மதுப்பிரியர்

post image

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாரபங்கி என்ற இடத்தில் 15 அடி நீளமுள்ள பெரிய பாம்பு ஒன்று அங்கிருந்த இறைச்சிக்கடைக்குள் நுழைந்தது. அந்த பாம்பு அங்கு நின்று கொண்டிருந்த ஆடு ஒன்றை கடித்து விழுங்குவதற்காக ஆட்டை நெருங்கிக்கொண்டிருந்தது.

இதனை பார்த்து கடை உரிமையாளர் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் வெளியில் வந்து பாம்பை அடிக்க ஆட்களையும், கம்பையும் தேடிக்கொண்டிருந்தார். அந்நேரம் அங்கு சுரேஷ் என்ற நபர் வந்தார். அவர் அதிகப்படியான மது போதையில் இருந்தார்.

அவர் நான் பாம்பை பிடிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு கடைக்குள் நுழைந்தார். இதனை பார்த்து அங்கு கூடியிருந்தவர்கள் அதிர்ச்சியில் உரைந்தனர். சுரேஷ் நேரடியாக உள்ளே சென்று ஆட்டுக்கு அருகில் இருந்த பாம்பை தனது கையால் பிடித்தார்.

கழுத்தில் மாலையான பாம்பு

அந்த பாம்பை தனது கழுத்தை சுற்றி போட்டுக்கொண்டார். அங்கிருந்த அனைவரும் பாம்பை விடும்படி கூறினர். ஆனால் சுரேஷ் கேட்பதாக இல்லை. அதோடு அவர் பிடித்த பாம்பும் அவரிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள போராடியது. அதோடு அந்த பாம்பு சுரேஷை ஓரிருமுறை கடிக்கவும் செய்தது. பாம்பு தன்ன விடுவித்துக்கொள்ள எவ்வளவு போராடினாலும், போதையில் இருந்தவர் மனம் தளராமல் இறுதியாக பாம்பை பிடித்து, அதை ஒரு மாலை போல தோள்களில் சுற்றிக்கொண்டார். பின்னர் அவர் அதோடு விளையாட ஆரம்பித்தார்.

இந்த வினோத சம்பவத்தைக் காண அங்கு ஒரு பெரிய கூட்டம் கூடியது. அந்த வழியாக சென்றவர்களும், உள்ளூர் கடைக்காரர்களும் இந்த காட்சியை கண்டு அதிர்ச்சியில் நின்றனர். சிறிது நேரம் மலைப்பாம்புடன் விளையாடிய சுரேஷ், இறுதியாக ஒரு பெரிய பாத்திரம் ஒன்றில் போட்டு அதனை எடுத்துச்சென்று பத்திரமாக அங்குள்ள வாய்க்கால் ஒன்றில் விட்டார். அந்த பாம்பு மலைப்பாம்பு என்பதால் அதற்கு விஷம் இல்லை. இதனால் சுரேஷ் அதன் கடியில் இருந்து தப்பினார். சுரேஷ் பாத்திரத்தில் இருந்து திறந்துவிட்ட பிறகு மலைப்பாம்பு அதன் தலையை காற்றில் சுமார் மூன்று அடி உயர்த்தி பொதுமக்களை அச்சம் அடைய செய்தது. பின்னர் அது அங்கிருந்து தப்பிச்சென்றது. அதன் பிறகுதான் உள்ளூர்வாசிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

` திருமணம் ஆகாத இளைஞர்கள் மது குடிக்க தடை; மீறினால் அபராதம்' - நல்வழிப்படுத்தும் முன்மாதிரி கிராமம்

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் மதுக்குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகின்றனர். இதனால் அவர்களது வாழ்க்கை வளர்ச்சியடையாமல் பாதிப்பை சந்திக்கிறது. பலரது வாழ்க்கை மதுப்பழக்கத்தால் சீரழிகிறது. இப்போதுள்ள ... மேலும் பார்க்க

வீரர்கள் தற்கொலை முயற்சி; ஆபிரகாம் லிங்கனுக்கு ஓய்வு கொடுக்க வரும் ஜார்ஜ் வாஷிங்டன் போர்க்கப்பல்!

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்குதல் நடத்த தொடங்கின. இத்தாக்குதல் தொடங்கிய நாளில் இருந்து அமெரிக்காவின் அதிகமான போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு ஆசிய பகுதியில் நிறுத்தி... மேலும் பார்க்க

பெற்றோரை வீட்டை விட்டு துரத்திய மகன்: சகோதரிகளிடம் சொத்தை அபரிக்க இறந்த தந்தை கைரேகையை எடுத்த மகன்

பெற்றோர் இறந்த பிறகு குடும்ப சொத்தை பிரித்துக்கொள்வதில் சகோதரன், சகோதரிகளிடையே தொடர்ந்து மோதல் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதுவும் மகள்களுக்கும் பெற்றோரின் சொத்தில் சம பங்கு இருக்கிறது என்று அறிவித... மேலும் பார்க்க

சூரியகாந்தி மலர்களால் மிளிரும் சுந்தரபாண்டியபுரம் – தென்காசியின் புதிய செல்ஃபி சுற்றுலாத் தலம்!

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டமாகத் திகழ்கிறது தென்காசி. இயற்கையும் ஆன்மிகமும் இணைந்த சுற்றுலாத் தலங்கள் மாவட்டத்தில் நிரம்பி உள்ளன. குற்றாலம் அருவிகள், காசி விசு... மேலும் பார்க்க

கப்பலில் 250 நாள்கள் பணி: மன அழுத்தத்தில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயலும் அமெரிக்க படைவீரர்கள்?

கடந்த பிப்ரவரி மாதம் ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்கா தொடங்கியது. ஆனால் அதற்கு முன்பே அமெரிக்க போர்க்கப்பல்கள் வளைகுடா கடற்பகுதியில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுவிட்டன. தற்போது போர் நடக்கவில்லை என்றாலும... மேலும் பார்க்க

மும்பையில் உணவு கட்டுப்பாட்டு விதிகளை மீறிய டோமினோஸ் பிட்சா... சீல் வைத்த அதிகாரிகள்

மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் கமிஷனராக இருக்கும் துகாராம் முண்டே என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மாநிலம் முழுவதும் பால் கலப்படத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். தற்போது மாநிலம் முழுவதும் உள... மேலும் பார்க்க