செய்திகள் :

ஆண்டிப்பட்டி: மூன்றாவது முறையும் தம்பியை வென்ற அண்ணன்! - காரணம் என்ன?

post image

ஆண்டிப்பட்டி தொகுதி ‘மூன்று முன்னாள் முதல்வர்கள் களம் கண்ட தொகுதி’ என பெயர் பெற்ற நிலையில் தற்போது மூன்று முறை அண்ணன், தம்பி போட்டியிட்ட தொகுதி என புதிய பெயர் கிடைத்திருக்கிறது.

திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ மகராஜனும், அதிமுக சார்பில் அவருடைய தம்பி லோகிராஜனும் போட்டியிட்டனர். 2019 இடைத் தேர்தலின் போது முதன் முதலாக மோதி கொண்ட அண்ணன், தம்பி போட்டியில் மகராஜன் வெற்றி பெற்றார்.

அதை தொடர்ந்து வந்த 2021 தேர்தலிலும் மீண்டும் அண்ணன், தம்பியே போட்டியிட்டு மீண்டும் மகராஜனே வெற்றி பெற்றார்.

 ’அ.தி.மு.க, தி.மு.க போட்டியை தாண்டி அண்ணனுக்கும் தம்பிக்குமான போட்டியாகவே இருக்கிறது, அதனால் மீண்டும் லோகிராஜனுக்கு சீட் கொடுக்க கூடாது’ என அ.தி.மு.க -வினர் போர்கொடி உயர்த்த தொடங்கினார்.

ஆண்டிப்பட்டி

மறுபுறம் 7 வருடங்கள் சிட்டிங் எம்.எல்.ஏவாக இருந்த மகாராஜன் தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை, குறிப்பாக வருஷநாடு பகுதிகளில் சாலை அமைப்பதற்கு வனத்துறை முட்டுக்கட்டை போட்டு வருவதால் அந்த பகுதி மக்கள் தி.மு.க மீது கடும் அதிருப்தியில் இருந்தனர்.

கூடுதலாக தங்கதமிழ்செல்வனுடன், மகாராஜனுக்கு ஏற்பட்ட மோதலால் அவருக்கு எதிராக தி.மு.க.வினரும் உட்கட்சி பூசலில் ஈடுபட்டதால் இந்த முறை அதிமுக வென்று விட வாய்ப்புள்ளது என்கிற நிலைமை இருந்தது. ஆனால் மீண்டும் லோகிராஜனுக்கே சீட் கொடுத்தது அ.தி.மு.க -விற்குள் சலசலப்பை உருவாக்கியது.

ஆனாலும் அ.தி.மு.க -வினர் கடுமையாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். ’இரண்டு முறை அண்ணனுக்கு வாய்ப்பு கொடுத்து விட்டீர்கள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ என லோகிராஜன் வெளிப்படையாகவே மக்களிடம் பிரச்சாரம் செய்து வந்தார்.

தேனி தவெக தெற்கு மாவட்ட செயலாளார் லெஃப்ட் பாண்டி

வாக்கு எண்ணிக்கையின் போது மதியம் வரை லீடிங்கில் இருந்த லோகிராஜன் அதற்கு பிறகு இறங்குமுகம் காணத் தொடங்கினார். தொடர்ந்து லீடிங்கில் வந்த மகாராஜன் இறுதியாக 8,944 வாக்குகள் வித்தியாசத்தில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்

தவெக சார்பில் போட்டியிட்ட பாண்டி என்பவர் மீது நிறைய புகார்கள் வரிசை கட்டியதால் தொகுதி மக்கள் தி.மு.க, அ.தி.மு.க -வினருக்கே வாக்களித்தனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் வீசிய த.வெ.க அலை ஆண்டிபட்டி தொகுதியில் வலுவிழந்தது.

அவிநாசி: இ-சேவை மையம் நடத்தும் கணவர்; எல்.முருகனை வீழ்த்தி வாகை சூடிய இல்லத்தரசி! யார் இந்த கமலி?

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலா மணி, அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ... மேலும் பார்க்க

ஈரோட்டில் வாஷ் அவுட்டான திமுக கூட்டணி; அமைச்சர் உட்பட 8 பேரை வீழ்த்திய த.வெ.க!

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கோபிச்செட்டிப்பாளையம், மொடக்குறிச்சி, பவானி, பவானிசாகர் தனி, அந்தியூர், பெருந்துறை என மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஈரோடு மேற்கு, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்ப... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம்: சோபிக்காத த.மா.கா; சம்பவம் செய்த சக்கரபாணி - 7வது முறை வெற்றி சாத்தியமானது எப்படி?

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார், சக்கரபாணி. தொகுதி முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் என எல்லாவற்றையும் செய்து தொகுதியைத் தன் கன்ட்ரோலி... மேலும் பார்க்க

ஓ.பி.எஸ்ஸிற்கு ’கிலி’யை ஏற்படுத்திய த.வெ.க; திக் திக் வாக்கு எண்ணிக்கை; போராடி கரை சேர்ந்த தி.மு.க!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க -வில் இணைந்து போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார் எனும்போது வெல்வாரா? தோற்பாரா? என்ற எதிர்பார்ப்புகள் எகிறியது. அ.தி.மு.க-வால் இவ்வளவு காலமும் வெற... மேலும் பார்க்க

TVK: சீட் தராத திமுக; பழி தீர்த்த கட்சித்தாவல்; சூலூரை வென்ற தவெக சுகுமாரின் பின்னணி என்ன?

சூலூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 616 வாக்காளர்கள் உள்ள நிலையில்,2 லட்சத்து 71 ஆயிரத்து 567 பேர் வாக்களித்தனர். இதில் 90 ஆயிரத்து 531 வாக்குகள் பெற்ற த.வெ.க. வேட்பாளர் சுகுமார... மேலும் பார்க்க

TVK: 'சென்னைவாசி, சிபி சத்யராஜின் ஆதரவு' - சிங்காநல்லூரை வென்ற ஸ்ரீ கிரி பிரசாத்தின் பின்னணி என்ன?

சிங்காநல்லூர் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 69 ஆயிரத்து 941 வாக்காளர்களில், தேர்தலில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 746 பேர் வாக்களித்தனர். இதில் த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீ கிரி பிரசாத் 84 ஆயிரத்து 163 வாக்... மேலும் பார்க்க