செய்திகள் :

ஆதவ் டேபிள் ஃபேன்; ஆனந்த் எலெக்ட்ரிக் குக்கர்! - போட்டி போட்டு பரிசுப் பொருட்களை இறக்கும் தவெக-வினர்

post image

தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் உறுதி செய்திருக்கும் நிலையில், சென்னைக்குள் போட்டி போடும் தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் ஆதவ் அர்ஜூனாவும் போட்டிப் போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பரிசுப்பொருட்களை வழங்கி வருகின்றனர்.

ஆதவ்
ஆதவ்

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தவெகவின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்துக்கு தி.நகர் தொகுதியையும் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனாவுக்கு வில்லிவாக்கம் தொகுதியையும் விஜய் இறுதி செய்திருப்பதாக கட்சி வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர். இந்நிலையில், இருவரும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தொடர்ந்து நிர்வாகிகள் சந்திப்புகளையும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தில் வில்லிவாக்கத்தில் மாவட்டச் செயலாளர் பூக்கடை குமார் தலைமையில் ஆதவ் அர்ஜூனா நிர்வாகிகள் சந்திப்பை நடத்தியிருந்தார். அந்த நிகழ்வில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான பெண் நிர்வாகிகளுக்கு ஆதவ் படமும் விசில் சின்னமும் பொறிக்கப்பட்ட டேபிள் ஃபேன்கள் பரிசுப்பொருட்களாக வழங்கப்பட்டது.

ஆனந்த்
ஆனந்த்

தி.நகர் தொகுதியில் போட்டியிடும் ஆனந்தும் தன் பங்குக்கு தொகுதிக்குள் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மாவட்டச் செயலாளர் அப்புனு தலைமையில் நேற்று ஒரு செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தியிருந்தார். 'தி.நகர் தொகுதி மட்டுமல்ல 234 தொகுதிகளும் நமக்கு சாதகமாக இருக்கிறது. தளபதி முதலமைச்சர் ஆவது உறுதி!' எனப் பேசிய ஆனந்த் 1000 பேருக்கு சூழலுக்கு ஏற்ற பரிசாக 'எலெக்ட்ரிக் குக்கர்' யைப் பரிசாக வழங்கியிருந்தார். நாளையும் இதே மாதிரியாக ஒரு கூட்டத்தை நடத்தி 400 பேருக்கு எலெக்ட்ரிக் குக்கர்களை வழங்கவிருப்பதாக கூறுகிறார் மாவட்டச் செயலாளர் அப்புனு.

தவெகவின் முக்கியஸ்தர்கள் நிற்கும் தொகுதிகளில் எதிர்க்கட்சிகள்தான் பரிசு மழையை பொழிவார்கள் என எதிர்பார்க்க, தவெகவினரே கிஃப்ட் பாக்ஸ்களை இறக்குவதில் வாக்காளர்கள் டபுள் ஹேப்பி ஆகியிருக்கின்றனர்.

ராஜீவ் காந்தி பதவிக்கு வேட்டு! - `டெண்டர் முதல் இன்ஸ்டா வரை...' - வெடித்துக் கிளம்பிய விவகாரம்!

தி.மு.க வின் மாணவர் அணிச் செயலாளராகச் செயல்பட்டு வந்த ராஜீவ் காந்தியை தீடிரென அந்தப் பதவியிலிருந்து நீக்கியுள்ளது தி.மு.க தலைமை. அவருக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் என்ற பதவியைக் கொடுத்துள்ளது. பெண்... மேலும் பார்க்க

ஈரான் தாக்குகிறதுதான்; ஆனாலும், மோதாமல் 'சைலன்ட்டாக' இருக்கும் வளைகுடா நாடுகள் - என்ன காரணம்?

ஈரான் மீது போர் தொடுத்தது என்னவோ அமெரிக்காவும், இஸ்ரேலும் தான். ஆனால், ஈரான் வளைகுடா நாடுகளையும் சேர்த்துக் குறி வைக்கின்றது. 'அமெரிக்காவை எங்களால் நேரடியாகத் தாக்க முடியாது. அதனால், வளைகுடா நாடுகளில்... மேலும் பார்க்க

'கூட்டணிக்கு போகலாமா?'- அவசர மா.செக்கள் மீட்டிங்கில் ஆனந்த் கேட்ட கேள்வி; ட்விஸ்ட் கொடுக்கும் விஜய்?

தவெக சார்பில் திடீரென அவசர அவசரமாக கூட்டப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த், 'நாம் கூட்டணிக்கு போகலாமா? உங்களுடைய விருப்பம் என்ன?' என நிர்வாகிகள் மத்தியில் கேட்டது அரசியல் வட... மேலும் பார்க்க

ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து மும்பை வந்தடைந்த கச்சா எண்ணெய் கப்பல் - கைகொடுத்த `Dark Mode' டெக்னிக்!

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக ஹார்முஸ் ஜலசந்தியில் பல பில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் கொண்ட கப்பல்கள் நின்று கொண்டிருக்கின்றன. இதற்கு ஈரான் போர் தான் காரணம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஹார்முஸ் ஜலச... மேலும் பார்க்க

திருத்தணி: திமுக-வில் கோஷ்டி பூசல்; சசிகலா ஆதரவாளரால் நெருக்கடியில் அதிமுக -கட்சிகளில் நிலவரம் என்ன?

திருவள்ளூர் மாவட்டத்தில் முருகனின் அறுபடை வீடு அமைந்துள்ள திருத்தணி தொகுதியில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகளவில் உள்ளனர். தொகுதியில் வன்னியர் சமூகத்தினரும் முதலியார் சமூகத்தினரும் மெஜாரிட்டியாக இருக்கி... மேலும் பார்க்க

'புறக்கணித்த விஜய் தரப்பு; முயன்று பார்த்த திமுக!' - காளியம்மாள் அதிமுகவில் இணைந்த பின்னணி!

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள் இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருக்கிறார். கடந்த ஓராண்டாக தவெக, திமுக, சசிகலா என பலரும் காளியம்மாளுடன் பேசி வந்தனர். அப்படிய... மேலும் பார்க்க