செய்திகள் :

'ஆபரேஷன் Toofan' - தமிழக முதல்வரை திடீரென சந்திக்கும் கேரள உள்துறை அமைச்சர்! - பின்னணி என்ன?

post image

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை கேரள உள்துறை அமைச்சர் ரமேஶ் சென்னிதலா இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசிக்கவிருக்கிறார். இந்த சந்திப்பின் மையமாக 'ஆபரேஷன் Toofan' இருக்கப்போவதாக கூறுகிறார்கள். இதன் பின்னணி என்ன?

ரமேஷ் சென்னிதலா

கேரளத்தில் காங்கிரஸ் அரசு அமைந்து வி.டி.சதீஷன் முதல்வரானவுடன், இளைஞர்கள் மத்தியில் பரவியிருக்கும் போதைப் பழக்கத்தை ஒழிக்கவும், போதைப் பொருள் நெட்வொர்க்குகளை கண்டறிந்து வீழ்த்தவும் 'ஆபரேஷன் Toofan' என்ற பெயரில் ஒரு மிஷன் தொடங்கப்பட்டது.

இதில் அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா கூடுதல் கவனம் செலுத்தி மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 'மரணத்தின் தூதுவர்களுக்கு எதிராக அரசு நிகழ்த்தும் யுத்தம் இது. போதைப்பொருள்களின் நெட்வொர்க்கை முழுமையாக அழிக்கும் வரை ஓயமாட்டோம்' என்றும் ரமேஷ் சென்னிதலா உறுதியாக பேசியிருந்தார்.

CM Vijay
CM Vijay

ஒரு மாநிலம் நினைத்தால் மட்டும் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்திவிட முடியாது. அண்டை மாநிலங்களும் கேரளத்துடன் இணைந்து பயணித்தால் மட்டுமே போதைப்பொருள் நெட்வொர்க்கை கட்டுப்படுத்த முடியுமென ரமேஷ் சென்னிதலா நினைக்கிறார். கடந்த வாரம் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்தித்தும் இதுகுறித்து ஆலோசித்திருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்களின் உயரதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் அதிகாரிகளுடனும் 'ஆபரேஷன் Toofan' குறித்து விரிவான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருந்தார். தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

இதைத்தொடர்ந்தே இன்று ரமேஷ் சென்னிதால் சென்னை வந்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்திக்கவிருக்கிறார். இந்த சந்திப்பில் முதல்வரிடம் ஆப்பரேஷன் Toofan குறித்து விளக்கி தமிழக அரசின் முழு ஆதரவையும் கோரவிருக்கிறார்.

மகாராஷ்டிரா: பாஜக கூட்டணியில் சேரும் சரத்பவார்?முதல்வருடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு

மகாராஷ்டிராவில் முன்னாள் துணை முதல்வர் அஜித்பவார் விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. 2023ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் இரண்டாக பிரிந... மேலும் பார்க்க

மகனுக்காக எத்தனால் பயன்பாட்டை அதிகரிக்க நிதின் கட்கரி முயற்சி? 4 யூடியூப்பர்கள் மீது வழக்கு

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வாகனங்களில் எரிபொருளாக எத்தனாலைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறார். பெட்ரோல் மற்றும் டீசலுடன் எத்தனாலை குறிப்பிட்ட அளவு கலந்துப் பயன்படுத்தலாம் என்று கூறி வருகிறா... மேலும் பார்க்க

சிறையில் கவுன்சிலராகப் பதவியேற்ற பா.ஜ.க பிரமுகர்; கேரள அரசியல் வரலாற்றில் முதன் முறை நிகழ்வு!

கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சி பா.ஜ.க வசம் உள்ளது. மாநகராட்சி மேயராக பா.ஜ.க-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷ் பதவியில் உள்ளார். முன்னதாக, திருவனந்தபுரம் மாநகராட்சி பா.ஜ.க கவுன்சிலர்களாகத் தேர... மேலும் பார்க்க

லாக்கப் மரணம்: 'அடித்தே கொன்ற காவல்துறையினரைப் முதல்வர் விஜய் பாதுகாக்கிறாரா?'- சீமான் கண்டனம்

நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்ட சபரிவர்மன் என்ற மாற்றுத்திறனாளி நீதிமன்றக் காவலில் சிறையிலிருக்கும்போதே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காவல் மரணம... மேலும் பார்க்க

கிண்டி: ரயில்வே நிலைய மேம்பாலம் அருகே நிலவும் சுகாதார சீர்கேடு; முகம் சுளிக்கும் மக்கள்!

சென்னையின் மையத்தில் உள்ள மிக முக்கியமான கிண்டி ரயில் நிலையத்தில், ரேஸ் கோர்ஸ் சாலை மற்றும் கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைமேடை உள்ளது.அதில் ரேஸ் கோர்ஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள இந்த... மேலும் பார்க்க