செய்திகள் :

`ஆபீஸ் போட்டு பிரதமர் பெயரைச் சொல்லி ஏமாத்துறாங்க; ஜஸ்ட்ல தப்பிச்சேன்' - சீரியல் நடிகர் நவீந்தர்

post image

''நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிற சைபர் மோசடிகளில் யார் வேணூம்னாலும் ஏமாந்து போகலாம்கிற சூழல் இன்னைக்கு உருவாகிடுச்சு. டெக்னாலஜி என்னதான் வளர்ந்திருந்தாலும், ஏமாத்தறவங்களுக்கும் தைரியம் எல்லை மீறி ப் போயிடுச்சு. அதனாலேயே அரசின் பெயரைச் சொல்லி சர்வசாதாரணமா ஏமாத்தறாங்க. ஏமாந்த பிறகு போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைஞ்சு புலம்பறதை விட கூடுமானவரை நாம கொஞ்சம் அலெர்ட்டா இருக்க வேண்டியதுதான் இப்போதைய அவசியத் தேவை'' என்கிறார் சீரியல் நடிகரும் சின்னத்திரை நடிகர் சங்க செயலாளருமான நவீந்தர்.

'பிரதம மந்திரி கடன் வழங்கும் திட்ட'மெனச் சொல்லி இவரிடம் ஒரு கும்பல் பணத்தைச் சுருட்ட நடந்த முயற்சியில் கடைசி நிமிடத்தில் தப்பித்து விட்ட இவரிடம் பேசினோம்.

``பிரதமர் கடன் வழங்கும் திட்டம்னு சொல்லிதான் போன் பண்ணினாங்க. நான் இந்த மாதிரி போன் கால்களை நம்பி ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டேன். ஆனா அன்னைக்கு ஏதோவொரு சிந்தனையில் அட்டென்ட் செய்துட்டேன். பத்து லட்சம் வரைக்கும் லோன் கிடைக்கும்.. அதுல எட்டு லட்சம் திரும்பச் செலுத்தினா போதும். மீதி பணம் மத்திய அரசு உங்களுக்கு வழங்குகிற மானியம்னு சொன்னாங்க.

கோயபுத்தூர்ல மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தற்துக்குன்னே ஆபீஸ் இருக்குனும் அந்த ஆபீஸ்ல இருந்துதான் பேசறோம்னு சொன்னாங்க.

பண மோசடி

பொதுவா கிரெடிட் கார்ட் மோசடிகளில் வட இந்திய நபர்கள் மோசடி செய்வாங்கனு கேள்விப்பட்டிருப்போம். ஆனா இந்த போன் கால்ல வந்தவங்க தெளிவான தமிழ்ல்ல பேசியதான் எனக்கு சந்தேகம் வர்லை. கோயம்புத்தூரில் அவங்க சொன்ன முகவரியில அப்படியொரு அலுவலகம் இயங்குதான்னு மட்டும் அங்க இருக்கிற தெரிஞ்சவங்களை வச்சு செக் பண்ணினேன். அவங்க சொன்ன இடத்துல ஒரு அலுவலகம் இருந்தது. அதனால சரி என்ன சொல்றாங்கனு கேட்டு பார்க்கலாமேனு ரெஸ்பான்ஸ் பண்ணினேன்.

என்னுடைய பான் கார்டு, ஆதார் உள்ளிட்ட விபரங்களைக் கேட்டாங்க. கொடுத்தேன். அடுத்த நாள் பத்து லட்சம் சாங்ஷன் ஆகிடுச்சுன்னு ஒரு லெட்டர் அனுப்பினாங்க. அதை டவுன்லோட் செய்துக்கோங்கனும். புராசஸ் ஃபீஸ்னு ஆறாயிரத்து ஐநூறு ரூபாய் அனுப்பக் கேட்டாங்க. செக் அனுப்பி வைப்போம்னு சொன்னாங்க.. அந்த லெட்டரைப் பார்த்தா அரசு முத்திரையெல்லாம் அச்சு அசலா இருந்தது. ஆனா பத்து லட்சம்னு எழுத்தால் எழுதிட்டு நம்பர்ல போடும் போது ஒரு லட்சம்தான் போட்டிருந்தாங்க.

'என்னங்க இப்படி இருக்கு'னு கேட்டதும், திருத்தி வேற லெட்டர் அனுப்பறோம்னு சொன்னாங்க.

அப்பதான் எனக்கு சந்தேகம் வந்தது.

நவீந்தர்

செக் வந்த பிறகு புராசஸ் ஃபீஸ் கட்டுறேனு சொன்னேன். அதை ஏத்துக்கிடல. அப்பவே இது ஒரு ஃபேக்னு முடிவுக்கு வந்துட்டேன். கடைசியா பணத்தைக் கட்டுறீங்களா லோனை கேன்சல் செய்யட்டுமானு கேட்டாங்க. லோனைக் கேன்சல் செய்துக்கோங்கனு சொன்னேன்.

அத்தோட விட்டுடுவாங்கனு பார்த்தா, அதுக்குப் பிறகுதான் அவங்க வாய்ஸ் வேற மாதிரி இருந்திச்சு. கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டுறாங்க. உங்க பான், ஆதார் உள்ளிட்ட டீடெய்ல் எங்ககிட்ட இருக்கு. உங்களை என்ன செய்யறோம் பாருங்கனு சொன்னாங்க.

நானும் பதிலுக்கு போலீஸ்ல புகார் தர்றேன்னு சொல்லிட்டு புகாரும் கொடுத்துட்டேன்.

போலீஸ் தரப்பிலோ அந்த டீடெய்லை வச்சுகிட்டு அவங்களால் வேற ஒண்ணும் பண்ண முடியாது. நீங்க இனிமே அந்த எண்ணில் இருந்து மெசேஜ், அழைப்பு வந்தா ரெஸ்பான்ஸ் செய்யாதீங்க'னு சொல்லியிருக்காங்க.

நாம எவ்வளவுதான் அலெர்ட்டா இருந்தாலும் ஒருகட்டத்துல ஏமாந்திடுறோம். அதனால இதே மாதிரி லோன் கால் வந்தா வேற யாராவது ஏமாந்துட வேண்டாம்கிறதுக்காகவே நானும் கூச்சப்படாம சொல்ல நினைச்சேன்' என்றார் நவீந்தர்.

முன்கூட்டியே வருகிறது பிக் பாஸ் சீசன் 10 ; தேதி விவரம்? - Bigg Boss Updates

விஜய் டிவியின் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சிக்கு இது பத்தாவது ஆண்டு.முதல் மூன்று சீசன்கள் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பரில் நிறைவடைந்து வந்த‌ன.... மேலும் பார்க்க

Tv update: 'செகண்ட் லவ்' ஷூட்டிங்கை மும்பைக்கு கொண்டு போனது ஏன்?

மறுபடியும் ஹீரோ.. நெகிழும் காமெடியன்!காமெடி மற்றும் சப்போர்ட் கேரக்டர்கள் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் அழகப்பன். சன் டிவியில் ஒளிபரப்பான 'ஆனந்த ராகம்' தொடர் இவரை ஹீரோ ஆக்கியது.அந்த தொடர் ஆயிரம் எப... மேலும் பார்க்க

"`எந்த நிகழ்ச்சிக்கும் போறதில்ல‌; தந்த வாக்குக்காக வர்றேன்'னு வந்தார் சாலமன் பாப்பையா"- மதுரை முத்து

மதுரை திருநகரில் இரண்டாவது நூலகத்தைத் திறந்துள்ளார், மதுரை முத்து. தன்னுடைய பூர்வீக கிராமத்தில் ஏற்கெனவே ஒரு நூலகத்தை நடத்தி வரும் நிலையில், இரண்டாவது நூலகத்தை சாலமன் பாப்பையாவை வைத்து திறந்து வைத்திர... மேலும் பார்க்க

`அப்பாவை ரஜினி சார் கூட்டி வரச் சொன்னார், அதுக்குள்ள...' - மனம் கலங்கும் `லொள்ளு சபா' ஜீவா

'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜீவா. அடிப்படையில் நடிகர் ரஜினி காந்தின் தீவிரமான ரசிகர். ரஜினி ரசிகர் மன்றத்திலும் தன்னை இணைத்துக் கொண்டு இயங்கி வந்தவர். சின்னத்திரையைத் தாண்டி சினிமா பக... மேலும் பார்க்க

’பிக்பாஸ் காமன்மேன்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகும் அந்த இருவர் யார் யார்?

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 10 துவங்க இன்னும் ஓரிரு மாதங்கள் இருக்கும் சூழலில், இந்த வருடம் புது முயற்சியாக ’பிக்பாஸ் காமன் மேன்’ என்ற நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்த... மேலும் பார்க்க

Bigg Boss: இந்த வருஷம் இதெல்லாம் புதுசு! - `காமன்மேன்' பிக் பாஸ் ஷோவுக்கு யார் பாஸ்?

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 இன்னும் ஓரிரு மாதங்களில் துவங்க இருக்கிறது. விஜய் சேதுபதியே இந்த சீசனையும் தொகுத்து வழங்கவிருக்கிறார்.வழக்கமான பிக்பாஸ் போல இல்லாமல் இந்த வருடம் நிகழ்ச்சியில் 0... மேலும் பார்க்க