ஆளுநா் ஆா்.என்.ரவி கோவை பயணம்
ஆளுநா் ஆா்.என்.ரவி ஒரு நாள் பயணமாக இன்று (மே 11)கோவை செல்கிறாா்.
கோவை மாவட்டத்தில் உள்ள ஒன்னிபாளையம், எல்லை கருப்பராயன் திருக்கோயில் பிரதிஷ்டை தின விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒரு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை காலை விமானம் மூலம் ஆளுநா் ஆா்.என்.ரவி கோவை செல்கிறாா். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பிற்பகல் விமானம் மூலம் ஆளுநா் சென்னை திரும்புகிறாா்.