செய்திகள் :

இசை ராஜ்ஜியமும், திரை காவியமும்..! | இளையராஜா - மணிரத்னம் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

எத்தனையோ மதிப்புமிக்க ரத்தினங்களை இசைஞானி போகிறபோக்கில் நமக்கு அளித்துள்ளார். இசை மட்டும் தெரிந்த வெறும் ஞானி அல்ல... சமஸ்கிருதம், உச்சரிப்பு மற்றும் நம்மளுடைய மெல்டிங் பாயின்ட் இப்படி எல்லாம் தெரிந்தவர்  இசைஞானி 

இயக்குனர் மணிரத்தினம் ...பெயரைச்சொல்லும்போதே அழகான 'ஒற்றை வார்த்தை'யில்' நறுக்' வசனங்கள்.. இருட்டு பின்னணியில் வண்ணமயமான அழகிய ஒளிப்பதிவு.நினைவுக்கு வரும்.

சிறப்பான திரைக்கதை எழுத்தாளர், திரைக்கதையில் காதல், ரவுடியிசத்தை  படைப்புகளில் அழகாய் கையாள்பவர், எதார்த்தமான சண்டைக் காட்சிகளுக்கு சொந்தக்காரர், க்யூட்டான சுருக்கமான வசனங்கள்மூலம் மனதை ஈர்ப்பவர், எளிய தொழில்நுட்பத்தைக் கையாள்பவர், வில்லன் பாத்திரங்களுக்கு நம்பகத்தன்மையை கொண்டு வந்தவர்,  காதலுக்கு புது இலக்கணம் வகுத்தவர்... படத்தில் காதலுக்கும், இசைக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்...  

இசைஞானி+இயக்குனர் மணிரத்னம் இருவருக்கும் இன்று பிறந்தநாள்... (ஜூன் 02)மணிரத்தினம்+ இசைஞானி கூட்டணி.. வேறலெவல்..

இளையராஜா
இளையராஜா

இதயக்கோவில்

மோகன் அம்பிகாவுக்கு இடையேயான கிராமத்து காதல்... ராதாவுக்கு மோகன் மேல் வரும் நகரத்துக் காதல்... இப்படி இரண்டிலும் வித்தியாசம் ...இசையிலும்.. படத்தில் ஒவ்வொரு பாடலையும் மிகவும் வித்தியாசமான முறையில் கொடுத்திருப்பார் இசைஞானி. "ஊரோரமா ஆத்துப் பக்கம் தென்னந்தோப்பு "என்ற துள்ளல் இசை பாடல். கிராமிய பாடல் .ஆனால் கிராமிய பாடலில் மேற்கத்திய இசைக்கோர்வை "நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா"பாடலில்மென்மையான காதல் நினைவுகளை இசையின் மூலம்   பிரதிபலித்திருப்பார்   .'நம் இதயகோவிலில் மணிரத்தினத்திற்கு என்றென்றும் ஒரு இடமும் உண்டு.'

பகல் நிலவு 

இது ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் .ஒரு மாஃபியா டான்(கிராமத்து பெரியவரராய் பசுத்தோல் போர்த்திய புலியாக,,மிகைப்படுத்தப்படாத வில்லனாய் சத்யராஜ்) மீதான அவரது விசுவாசத்திற்கும் ஒரு போலீஸ்காரரின் சகோதரியின் மீதான அவரது அன்புக்கும் இடையில் சிக்கிய ஒரு கவலையற்ற/சாதாரண இளைஞனை பற்றிய கதை. கவலையற்ற இளைஞனாக முரளி , போலீஸ்காரரின் சகோதரியாக ரேவதி...

 இவர்களுக்கு இடையே ஏற்படும் 

அழகான மோதல் பிறகு காதல்... "

பகல் நிலவு! -

"பூ மாலையே தோள் சேரவா.".. இந்தப் பாடலைப்  பாடாத 80ஸ் இளைஞர் இளைஞிகள் யாராவது இருந்திருப்பார்களா? (

கல்லூரியில் படித்த பலரின் தேசிய கீதம் இந்தப் பாடல்

(பாடல் வரிகளுக்கு அப்பாடல் வரிகளாலேயே பேக்ரவுண்ட் இசைக் கொடுக்க இசைஞானியால் மட்டுமே முடியும் .)

தொடக்க இசையிலேயே அனைவரது மனத்தையும் அள்ளி சென்று விடுவார் இசை ஞானி. .  '

பகல் நிலவு...படு பிரகாசம் இன்றும்.

மௌனராகம் 

பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு ஏற்ப மோகனை மணந்து கொள்ளும் ரேவதி தனது காதலன் கார்த்திக்ஐ இழந்த பழைய நினைவுகளை மறக்க முடியாது தனது கணவனிடம் இருந்து விலகிச் செல்ல டைவர்ஸ் கேட்க அவளின் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் விவாகரத்து பெற.. நீதிமன்றத்தின் தீர்ப்பின் பேரில் ஒரு ஆண்டு காலத்திற்கு ஒன்றாக வாழும் இவர்களுக்கு இடையே ஏற்படும் காதலை மிகவும் மென்மையாகவும் அழகாகவும் இயக்குனர் பதிவு செய்ய அதற்கேற்றாற்போல் இசையிலும் மேஜிக் செய்திருப்பார் இசைஞானி.

மௌனராகம்

"மன்றம் வந்த தென்றலுக்கு 

மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ

அன்பு...என் அன்பே..

தொட்டவுடன் சுட்டதென்ன

கட்டழகு வட்ட நிலவு 

கண்ணே என் கண்ணே 

 எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். 

காதல் மட்டுமே வாழ்க்கை அல்ல .வாழ்க்கையின் ஒரு பகுதி காதல் அவ்வளவுதான். ஒவ்வொரு மனிதனுக்கும் சில வகை காதல் உண்டு எல்லாமே நிறைவேறும் என்பதும் சாத்தியமில்லை என்பதை அழகாய் உணர்த்தும் வகையில் இசையில் புரட்சி செய்திருப்பார் இசைஞானி.

நாயகன்.

கமலஹாசன் வேலு நாயக்கராகவே வாழ்ந்திருப்பார் நாலு விதமான தோற்றத்தில் சிறப்பாக நடித்திருந்தாலும் வேலு நாயக்கராக மாறும்பொழுது அந்த பாடி லாங்குவேஜ்  மேனரிசம்..சான்சே இல்ல 

கதையின் ஓட்டத்திற்கு எந்த விதத்திலும் இடைஞ்சலாக அமையாத காதல் பகுதி 

.இப்பகுதி தான் வேலு நாயக்கரை பண்பட வைக்கிறது. 

படத்தின் இசை ..

காட்சிக்கு இசையா?

 இசைக்கு காட்சியா? 

பிரமாதப்படுத்திருப்பார் இசைஞானி.

ஒரே ஒரு வரியை மீட்டுவதன் மூலம் படத்தின் சாராம்சத்தை நமக்குள் கடத்தி விடும் மாயம் இசைஞானியால்மட்டுமே சாத்தியம்.

அதற்கேற்ற காட்சி மொழியை திரையில் எழுதுவது மணிரத்தினத்திற்கு மட்டுமே சாத்தியம்.

 உதாரணம்' தென்பாண்டி சீமையிலே' பாடல்.இந்தப் பாடலின் பல்லவியை படம் முழுவதும் பின்னணி இசையாக மிக அழகாக கையாண்டிருப்பார் இயக்குனர்.

"நாயகன் "என்றென்றும்... நம் மனதில்.இளமையாக..

அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம்.

நேர்மையான அரசு அதிகாரி.. அவருக்கு இரண்டு மனைவிகள் அவர்களின் பிள்ளைகள்.. அவர்களுக்கு இடையே விரோதமும் குரோதமும்.. எப்பப் பாரு முறைத்துக் கொண்டே...   

துள்ளலான/இயல்பான இரண்டு கதாநாயகிகள்.

"என்ன அசிஸ்டன்ட் கமிஷனர்ஸார் தள்ளிவிட்டு வந்துட்டீங்களா?"என்ற அமலாவின் குறும்பு ஒரு பக்கம் என்றால் 

செருப்பிற்கு தரையில் அழுத்தம்கொடுத்து ஸ்டைலாக நடந்து முடியை பின்னுக்குத் தள்ளி

கார்த்திக்கின் வீட்டிற்குள் நுழைந்து ,'நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்னை கைவிட்டு விடாதே'

 என்று சொல்லிவிட்டு அதே வேக நடையில் வெளியேறும் நிரோஷாவின்‌திமிரான அழகு காதல் மறு பக்கம்.

படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட்.

" ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா" என்ற அட்டகாசமான பாடல் ரயில்வே ஸ்டேஷனில் அதகளமான இசையில்  காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்...(

"நின்னுக்கோரி வர்ணம்' பாடலின் இடையில் அழகாய் ட்ரம் பீட்... மனதை கொள்ளை கொள்ளும்.

வா வா.. அன்பே அன்பே... கார்த்திக் நிரோஷாவின் நெருக்கத்தை இசையின் மூலம் உணர்த்துவார் இசைஞானி.. 

. மணிரத்தினம் அவர்களின் ஸ்டைல் 

படம் முழுவதும் நிரம்பி வழியும்.

'அக்னி நட்சத்திரம் ...எப்பவும் குளிர்ச்சி.

தளபதி

இந்தப் படத்தை எப்போது பார்த்தாலும் ஒரு புதிய படத்தை பார்த்து ரசிப்பது போலவே இருக்கும்.. நட்புக்கு புது இலக்கண வகுத்த திரைப்படம்.."

 நண்பேண்டா" என்ற வார்த்தையைச் சொல்லும்போது(தே) ஒரு தனி கம்பீரம் வரும்.

". யமுனை ஆற்றிலே பாடல்"... தனித்துவம் பெற்றது. இந்தப் பாடலை பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? பாடலின் லொகேஷன் ,சூப்பர் ஸ்டாரின் மாஸ் ரியாக்ஷன், ஷோபனாவின் வாயசைப்பு மிக நேர்த்தியான இசை.,எளிமையான பாடல் வரிகள்..

சூப்பர் ஸ்டாருக்கும் ஷோபனாவுக்கும் இடையேயான  காதலை... ஒரு பட்டாம்பூச்சி பறப்பது போல் மிக அழகாக கையாண்டிருப்பார் இயக்குனர்.

எத்தனை வருடங்கள் கடந்தாலும் எத்தனை படங்கள் வந்தாலும்... தளபதி படத்தின்...காதல்...அழகியல்.

இசைஞானி+மணிரத்னம்.இருவரும் 

நீள்ஆயுளும்,நிறை செல்வமுமாய் 

பல்லாண்டு வாழி.

இருவருக்கும் 

அன்பான அழகான இனிப்பான 

பிறந்தநாள் நல்வாழ்த்துகள் . ..

என்றென்றும் அன்புடன்

ஆதிரைவேணுகோபால்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

ராம் சரண் Bodyguard சம்பளம் ஒரு நாளுக்கு 4 லட்சமா? - யார் இந்த கெவின் குண்டா?

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தொழில்முறை தற்காப்புக் கலை (MMA) வீரரான கெவின் குண்டா (Kevin Kunta) என்பவரைத் தனது தனிப்பட்ட பாதுகாவலராக நியமித்துள்ளார்.ராம் சர... மேலும் பார்க்க

அஜித்தை நேரில் சந்தித்து, கட்டி அணைத்து ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய், நடிகை த்ரிஷா

சென்னையில் அஜித் குமாருடன் வசித்து வந்த அவருடைய அம்மா மோகினி மணி உடல்நலக் குறைபாடு காரணமாகவும், வயது முதிர்வு காரணமாகவும் காலமானார்.திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் என பலரும் அஜித் குமாரின் தாயாரின... மேலும் பார்க்க

அனிருத்தின் `DC' இசை சாதனை: உலக அளவில் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த தமிழ்ப் பாடல்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகத் திகழ்கிறார், ‘ராக்ஸ்டார்’ அனிருத். தனது துள்ளலான இசையாலும், புதுமையான இசைக்கோப்புகளாலும் தொடர்ந்து உலக அளவில் கவனத்தை ஈர்த்துவருகிறார். அந்த வரிசையில், சமீபத்... மேலும் பார்க்க

ஊட்டி: 7 லட்சம் பூக்களில் சென்னை சென்ட்ரல், மகாபலிபுரம்! - 10 நாள்கள் நடைபெற இருக்கும் ஃபிளவர் ஷோ

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள நூற்றாண்டு பழைமை வாய்ந்த அரசு தாவரவியல் பூங்காவில் 128- வது மலர் கண்காட்சி இன்று தொடங்கியது.‌ உள்ளூர் அரசு விடுமுறையுடன் தொடங்கிய இந்த மலர் கண்காட்சி தொடர்ந்து 10 நாள்க... மேலும் பார்க்க

Ooty Rose Show: ஹார்ன் பில் முதல் ஹம்மிங் பறவை வரை; 2 லட்சம் ரோஜாக்களால் களைகட்டும் ஊட்டி!

சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வரும் நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். நறுமணப் பொருட்கள் கண்காட்சியில் தொடங்கி நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி... மேலும் பார்க்க

`ஆச்சி’ மனோரமா: அண்ணா முதல் விஜய் வரை - 6 முதல்வர்களுடன் நடித்த ஒரே சாதனை நாயகி!

இந்தியத் திரையுலகில் ஈடு இணையற்ற குணச்சித்திர, நகைச்சுவை நடிகையாக விளங்கியவர் ‘ஆச்சி’ மனோரமா. ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பெருமை பெற்றவர். மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். தமிழ் சினிமாவில் இவ... மேலும் பார்க்க