`அண்ணாமலையைக் கைதுசெய்ய வேண்டும்'- தாக்கரே கட்சி போர்க்கொடி... காரணம் என்ன?
''இதுவொரு முக்கியமான மைல்கல்" - பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை தொடங்க திட்டம்!
பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ பாதைதான் சென்னையில் முதல் இரட்டை அடுக்கு மேம்பால மெட்ரோ வழித்தடம்.
போரூர், காரம்பாக்கம், ஆலப்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய ஐந்து மெட்ரோ நிலையங்கள் இந்த வழித்தடத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன.
போரூர் - வடபழனி வழித்தடத்தில் சென்னை மெட்ரோ நிர்வாகம் இன்று காலை சோதனை ஓட்டத்தை நடத்தியது.
டவுன் லைனில் இந்த சோதனை ஓட்டத்தை நடத்தியவர்கள் கூடிய விரைவில் இதேபோல அப் லைனிலும் சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவித்திருக்கிறார்கள்.
சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, அந்த வழித்தடம் திறக்கப்படும் தேதி குறித்து சென்னை மெட்ரோ மேலாண் இயக்குநர் சித்திக் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
அவர், "இன்று சோதனை ஓட்டம் நடத்தினோம். அது வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இதுவொரு முக்கியமான மைல்கல்.
கடந்த ஜூன் மாதத்தில் பூந்தமல்லியிலிருந்து போரூர் வரை சோதனை ஓட்டம் நடத்தினோம். அதன் வேலைகள் முடிவடையும் தருவாயில் இருக்கிறது.
பூந்தமல்லியிலிருந்து வடபழனி வரை மெட்ரோ இருந்தால்தான் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வடபழனி மெட்ரோவிலிருந்து போரூர் செல்லும் வழித்தடத்திற்கு லிங்க் பிரிட்ஜ் அமைத்திருக்கிறோம்.

கடந்த நான்கு மாதங்களாக போரூர் - வடபழனி வழித்தடத்தின் மின்சாரம், டிராக் ஆகியவற்றுக்காக எங்களின் சி.எம்.ஆர்.எல் ஊழியர்கள் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறோம்.
இந்த மாத முடிவிற்குள் முழுமையான வேகத்தில் சோதனை நடத்தவிருக்கிறோம். வேகத்திற்கான சான்றிதழ், வழித்தடத்தின் ஆய்வு கூடிய விரைவில் நடைபெறும்.
பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரத்தில் பூந்தமல்லி - வடபழனி இடையே சேவை தொடங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் வரையிலான பாதையின் பணிகள் ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும்." எனக் கூறினார்.




















