செய்திகள் :

"இந்தப் பயணத்தில் நிறைய கஷ்டங்கள், தோல்விகள் இருக்கும், ஆனால்..!"- சினிமா குறித்து சிவகார்த்திகேயன்

post image

'பராசக்தி' படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து ராதிகா நடிப்பில் வெளியாக இருக்கும் 'தாய் கிழவி' படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

திருச்செந்தூரில் சிவகார்த்திகேயன்....
திருச்செந்தூரில் சிவகார்த்திகேயன்....

இதனிடையே திரைப்பயணத்தில் 14 ஆண்டுகளை சிவகார்த்திகேயன் நிறைவு செய்திருக்கிறார்.

இந்நிலையில் இன்று (பிப்.5) திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன், செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

"சினிமாவில் நான் 14 ஆண்டுகள் நிறைவு செய்ததை எல்லோரும் கொண்டாடுகிறார்கள்.

ஒவ்வொரு வருஷம் எனக்கு பொறுப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.

உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி. இந்தப் பயணத்தில் நிறைய கஷ்டங்கள், தோல்விகள் இருக்கும்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

ஆனால் அதைத் தாண்டி மக்கள் கொடுக்கும் அன்பை மட்டும் பார்க்க வேண்டும்.

அடுத்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். எல்லோரும் என்னிடம் இருந்து எந்த மாதிரியானப் படத்தை எதிர்பார்க்கிறார்களோ... அந்த மாதிரியான படமாக அது இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.

காதலர் தினம்: புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீரிலீஸ் படங்கள்! - ஷார்ட் & ஸ்வீட் லுக்

காதலர் தினமான பிப்ரவரி 14, சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே கொண்டாட்டமான நாளாக மலர்கிறது. ஒரு நாள் முன்னதாக, பிப்ரவரி 13ல் அரை டஜன் நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகிறது. அதற்கு சவால் விடும் வகையில் ரீ ரிலீஸ்... மேலும் பார்க்க

மௌனம் பேசியதே: "என்னோட ஹீரோ சூர்யா சார் கூட நடிச்சது சந்தோஷமா இருந்துச்சு" - நடிகை லைலா

இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா, லைலா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'மௌனம் பேசியதே'. காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் வரும் பிப். 13 ஆம் தேதி ரீ... மேலும் பார்க்க

Kadhalar Dhinam: பரபரப்பான மும்பை ஸ்டேஷனில் ஷூட்; 1 கோடிக்கு செட் - 'காதலர் தினம்' பட சுவாரஸ்யங்கள்!

காதலர் தினத்தை முன்னிட்டு 'உயிருள்ளவரை உஷா', 'மௌனம் பேசியதே', 'மின்னலே', 'காதலர் தினம்' ஆகிய திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின்றன. இதில் இயக்குநர் கதிர் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளிவந்த 'காதலர் தினம்' 90... மேலும் பார்க்க

Ponnambalam: "ஷூட்டிங் ஸ்பாட்ல குடிப்பேன்னு கதை சொல்லிட்டு இருக்காங்க!" - பொன்னம்பலம் பேட்டி

‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’ போன்ற படங்களின் மூலம் ஸ்டண்ட்மேனாக சினிமாவுக்குள் வந்த நடிகர் பொன்னம்பலம், பல்வேறு வில்லன் கேரக்டர்களில் நடித்து மக்களுக்கு பரிச்சயமானார்.கடந்த சில வருடங்க... மேலும் பார்க்க