செய்திகள் :

இந்தியாவின் ரயில் பாதைகள், சாலைகளில் சோலார் பேனல்! - இங்கு வொர்க்-அவுட் ஆகுமா?

post image

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பசுமை எரிசக்தியை நோக்கி உலகம் நகர்ந்துகொண்டிருக்கிறது. இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. குறிப்பாக, போக்குவரத்துத் துறையில் எலெக்ட்ரிக் வாகனங்கள், பசுமை எரிசக்தி பயன்பாடு எனப் பல புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில், இப்போது ஒரு புதிய கான்செப்ட் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. அதுதான் ரயில் பாதைகள் மற்றும் சாலைகளில் சோலார் பேனல்களைப் பொருத்துவது!

ஐரோப்பிய நாடுகளில் ஏற்கெனவே இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தியாவிலும் இதற்கான முயற்சித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தத் திட்டம் உண்மையிலேயே நடைமுறைக்குச் சாத்தியமா? இதன் ப்ளஸ், மைனஸ் என்ன?

சோலார்

இந்தத் தொழில்நுட்பத்தை ‘ரயில்/ரோடு-இன்டகிரேட்டட் போட்டோவோல்டாயிக்ஸ்’ (RIPV) என்று அழைக்கிறார்கள். சிம்பிளாகச் சொல்ல வேண்டுமென்றால், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்களை, ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் ரயில் பாதைகள், தேசிய நெடுஞ்சாலைகள் போன்ற போக்குவரத்து உள்கட்டமைப்புகளிலேயே பொருத்துவதுதான் இது. பொதுவாக சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க ஏக்கர் கணக்கில் நிலம் தேவைப்படும். ஆனால் இந்த RIPV முறையில், ரயில் பாதைகளுக்கு நடுவே, சாலைகளின் தடுப்புகளில், மேம்பாலங்களில் என ஏற்கெனவே இருக்கும் இடங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால், நிலம் கையகப்படுத்தும் பெரிய சிக்கல் இல்லை. இதுதான் இந்த டெக்னாலஜியில் இருக்கும் மிகப்பெரிய ப்ளஸ் பாயின்ட்!

நமக்கு இது புதுசாகத் தெரிந்தாலும், ஐரோப்பிய நாடுகள் இதில் பல அடிகள் முன்னேறிவிட்டன. உதாரணமாக, நெதர்லாந்தில் மோட்டார்வேயில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்ட ஒலித் தடுப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 40 முதல் 60 வீடுகளுக்குத் தேவையான பசுமை மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.

ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளும் தங்களது நெடுஞ்சாலைகளில் சோலார் பேனல்களைப் பொருத்தி வருகின்றன. சுவிட்சர்லாந்தில், ரயில் பாதைகளுக்கு நடுவே சோலார் பேனல்களைப் பொருத்தி ஆண்டுக்கு 16,000 கிலோவாட்-மணி (kWh) மின்சாரத்தை உற்பத்தி செய்கிறார்கள்.

இந்த உலகளாவிய உத்வேகத்தைப் பின்பற்றி, இந்தியாவிலும் இப்போது மெல்ல அடி எடுத்து வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். டெல்லி மெட்ரோவின் ஓக்லா விஹார் நிலையத்தில், மேம்பாலத்தில் இந்தியாவின் முதல் செங்குத்து சோலார் பேனல் (50 kWp) நிறுவப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், இது இருபுறமும் மின்சாரத்தை உருவாக்கும் பைஃபேஷியல் பேனல்களைக் கொண்டது. இதேபோல, நமோ பாரத் நெட்வொர்க் மற்றும் வாரணாசியில் உள்ள பனாரஸ் லோகோமோட்டிவ் வொர்க்ஸ் ஆகியவற்றிலும் இந்திய ரயில்வே ‘சோலார்-ஆன்-ட்ராக்’ அமைப்புகளைப் பரிசோதித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் (NHAI) டெல்லி-டேராடூன் விரைவுச்சாலையின் மேம்பாலங்களில் சோலார் பேனல்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது. இந்தச் சின்ன சின்ன முயற்சிகள், இந்திய சூழலிலும் RIPV தொழில்நுட்பம் சாத்தியம்தான் என்பதை நிரூபித்துள்ளன.

இந்தியாவின் சாலை மற்றும் ரயில்வே நெட்வொர்க் மிகப் பெரியது. நம் நாட்டில் 1.4 லட்சம் கி.மீ நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகளும், 99,000 கி.மீ நீளத்திற்கு ரயில் பாதைகளும் உள்ளன. சரக்கு போக்குவரத்து மற்றும் மின்மயமாக்கல் அதிகரிக்கும்போது, இந்தப் போக்குவரத்துத் துறையின் மின்சாரத் தேவையும் விண்ணை முட்டும். இந்தத் தேவையை பசுமை எரிசக்தி மூலம்தான் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது அரசின் இலக்கு. ஆனால், நிலப் பற்றாக்குறை இருக்கும் நம் நாட்டில், வழக்கமான சோலார் பூங்காக்களை அமைப்பது ஒரு பெரிய சவால்.

இங்குதான் RIPV ஒரு தீர்வாக உருவெடுக்கிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, இந்தியாவில் ரயில்வே வழித்தடங்கள் மூலம் சுமார் 79 ஜிகாவாட் (GW) மற்றும் நெடுஞ்சாலைகள் மூலம் 75 ஜிகாவாட் என மொத்தமாக 150 ஜிகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது. இதில் ஒரு சிறிய பகுதியை நாம் பயன்படுத்தினால்கூட, அது இந்தியாவின் பசுமை எரிசக்தி இலக்கை எட்டுவதில் ஒரு மைல்கல்லாக அமையும்.

சிக்கல்களும் சவால்களும்

எல்லாம் சரி, ஆனால் இதை செயல்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமா என்றால், ‘இல்லை’ என்பதுதான் பதில். இங்கு தொழில்நுட்பத்தை விட, நிர்வாகம், விதிமுறைகள் மற்றும் நிதி சார்ந்த சிக்கல்கள்தான் அதிகம். வடிவமைப்புத் தரநிலைகள், பாதுகாப்பு அம்சங்கள், பராமரிப்பு நடைமுறைகள், நிதி திரட்டும் வழிமுறைகள் எனப் பல விஷயங்களில் இன்னும் தெளிவான வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன. வழக்கமான சோலார் பேனல்களை விட, இவற்றை நிறுவும் செலவும் சற்று அதிகம். ஆனாலும், நிலம் வாங்கும் செலவு மிச்சமாவதால் இது ஒரு சிறந்த தேர்வாகவே பார்க்கப்படுகிறது.

அடுத்து என்ன?

தற்போது பைலட் திட்டங்களாக இருக்கும் இந்த RIPV முறையை நாடு தழுவிய தீர்வாக மாற்ற வேண்டுமென்றால், அரசின் கொள்கை ஆதரவு மிக அவசியம். ஏற்கெனவே ‘பிஎம் சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனா’ (கூரை மேல் சோலார்) மற்றும் ‘பிஎம்-குசும்’ (விவசாய சோலார்) போன்ற திட்டங்களை அரசு வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. அதேபோன்ற ஒரு உந்துதல் இந்தத் திட்டத்திற்கும் கிடைத்தால், RIPV வெறும் பரீட்சார்த்த முயற்சியாக இல்லாமல், இந்தியாவின் பசுமை எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறையின் மாற்றத்திற்கு ஒரு பெரிய ஊக்கமாக அமையும். !

ஆகாஷ் டெலிசன் காவல் மரணம்: "உடலை அரசே கண்ணியமான முறையில் அடக்கம் செய்யலாம்" - நீதிமன்றம் உத்தரவு

சிவகங்கை அருகேயுள்ள மானாமதுரையில் கொலை செய்ய முயற்சித்த வழக்கு ஒன்றில் ஆகாஷ் டெலிசன் என்ற இளைஞரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர்.போலீஸ் காவலில் இருந்த ஆகாஷ் டெலிசன் கைதான இரண்டாவது நாளே மூச்சு திணறல்... மேலும் பார்க்க

"தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால் உயிராய் நேசித்த..." - அதிமுக-விலிருந்து விலகிய விஜயபாஸ்கர்

அதிமுக சார்பில் ஐந்து முறை போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் அதிமுகவிலிருந்து இன்று விலகினார். அதிமுகவிலிருந்து விலகியது தொடர்பாக அறிக்கை ஒன்ற... மேலும் பார்க்க

பயிர்க்கடன் தள்ளுபடி: "ரூ.75,000 வரை கடன் தள்ளுபடி" - முதல்வர் அறிவிப்பின் முழு விவரம்

கடந்த மே 25-ம் தேதி ரூ. 50,000 வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாக முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.பல்வேறு பக்கங்களிலிருந்தும் விவசாயக் கடன் தள்ளுபடி பற்றி மற... மேலும் பார்க்க

பயிர்க்கடன் தள்ளுபடி: ரூ.75,000 வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழு தள்ளுபடி | Live Updates

பயிர்க்கடன் தள்ளுபடி - முதல்வர் அதிரடி அறிவிப்புகடந்த மே 25-ம் தேதி ரூ. 50,000 வரை பயிர் கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதாக முதல்வர் அறிவித்திருந்தார். பல்வேறு பக்கங்களி... மேலும் பார்க்க

`56' ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு அதிரடி!

தமிழகக் காவல்துறையில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் எஸ்.பி அந்தஸ்திலான 56 உயர் அதிகாரிகளை அதிரடியாக பணி இடமாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை இன்று (15.06.2026) உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அரச... மேலும் பார்க்க

``6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு: பெரியார் பிறந்தநாளில் அமல்" – முதல்வர் விஜய்!

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் இன்று (15.06.2026) முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற... மேலும் பார்க்க