செய்திகள் :

``இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும்" - ஐரோப்பிய ஆணையத் தலைவர் நெகிழ்ச்சி

post image

இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. செங்கோட்டையில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்றி மரியாதை செய்தார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் பங்கேற்றனர்.

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள உர்சுலா வான் டெர் லேயன், குடியரசு நிகழ்வின் அரச விருந்தினராக கலந்துகொண்டார்.

உர்சுலா வான் டெர் லேயன் - மோடி
உர்சுலா வான் டெர் லேயன் - மோடி

மேலும், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

எனவே, இது குறித்து தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் உர்சுலா வான் டெர் லேயன், ``குடியரசு தின கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினர்களாகப் பங்கேற்பது எங்கள் வாழ்நாள் பெருமை. வெற்றிகரமான இந்தியா உலகை மேலும் நிலையானதாகவும், செழிப்பானதாகவும், பாதுகாப்பானதாகவும் ஆக்குகிறது. இதனால் நாம் அனைவரும் பயனடைகிறோம்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு முன்னதாக டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் பேசிய டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய உர்சுலா வான் டெர் லேயன், ``வெற்றியடையும் இந்தியா மூலம் ஒட்டுமொத்த உலகமும் பயனடையும். உலக உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் கால் பங்கைக் கொண்ட, 200 கோடி மக்களை உள்ளடக்கிய ஒரு பிரம்மாண்ட சந்தையை இந்த வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கும்" என்று தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் காலமானார்: பா.சிதம்பரம் இரங்கல்

காரைக்குடி தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் சுந்தரம் (1996-2001, 2006-2011) கடந்த சில மாதங்களாகவே உடல்நலமில்லாமல் இருந்தார். இந்த நிலையில், சுந்தரம் தனியார் மருத்துவமனைக்கு மருத்துவ... மேலும் பார்க்க

திமுக மகளிர் அணி மாநாடு: `ஹாட்பாக்ஸில் பிரியாணி முதல் கூல்ட்ரிங்ஸ் வரை' - பையில் இருந்தது என்ன?

தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகே வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் டெல்டா மண்டல தி.மு.க மகளிர் அணி மாநாடு இன்று நடைபெற்றுவருகிறது. இதற்கான ஏற்பாடுகள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் செய்யப்பட்டது. சும... மேலும் பார்க்க

`சுய மரியாதை முக்கியம்; லேட்டாக வந்தாலும், லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறார் வைத்திலிங்கம்' - ஸ்டாலின்

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த வார... மேலும் பார்க்க

``விஜய் ஜீரோ மாதிரி... எப்படி அந்த கார்-னு ஒரு கேள்வி இருக்கு" - தமிழிசை சௌந்தராஜன்

இந்தியாவின் 77-வது குடியரசு தினம் நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தேசிய கொடி... மேலும் பார்க்க

”காளை மாடுகூட கன்று போடலாம்; ஆனால், பா.ஜ.க தமிழகத்தில் காலூன்றாது” - கருணாஸ் காட்டம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் சமத்துவம் பழகு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “விஜய் ஒரு நடி... மேலும் பார்க்க

"சீனாவுடன் 'இந்த' ஒப்பந்தம் இல்லை" - கார்னி விளக்கம்; ட்ரம்பிற்கு அஞ்சுகிறதா கனடா?

சமீபத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார் கனடாவின் பிரதமர் மார்க் கார்னி. இந்தச் சந்திப்பிற்கு பிறகு, "கனடா மற்றும் சீனா - இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தக தடை, வரிப் பிரச்னை ஆகியவைகளைக் குறைக... மேலும் பார்க்க