`ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை' - விஜய் உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை ...
'இனி ஆதார் கார்டில் புகைப்படம், QR Code மட்டும் தானா?' - மத்திய அரசின் தெளிவான விளக்கம்
இனி ஆதார் கார்டில் புகைப்படம் மற்றும் கியூ.ஆர் கோடு மட்டும் தான் இடம்பெறும். இப்போது இருக்கும் பெர்சனல் தகவல்கள் இடம்பெறாது. தரவுகள் திருட்டு மற்றும் கசிவைத் தடுக்கவே இந்த முன்னெடுப்பு. இந்த ஆதார் கார்டு இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகமாகும்.
இப்படி ஆதார் கார்டு குறித்த தகவல்கள் சமீபத்தில் வைரலானது.
இந்தத் தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்து மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...

"இந்த ஆண்டு இறுதிக்குள் ஆதார் அட்டை மாற்றப்பட உள்ளதாகவும், அதில் இனி புகைப்படமும் கியூஆர் (QR) கோடும் மட்டுமே இருக்கும் என்றும் சில செய்திகளும் சமூக வலைத்தளப் பதிவுகளும் அவ்வப்போது உலா வருகின்றன.
இது முற்றிலும் தவறான தகவல். ஆதார் அட்டையில் அத்தகைய மாற்றங்களைச் செய்யும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை.
இப்படிப்பட்ட செய்திகளும் சமூக வலைத்தளப் பதிவுகளும் பொதுமக்களிடையே தேவையற்ற குழப்பத்தை உண்டாக்குகின்றன.
எனவே, பொதுமக்கள் இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு UIDAI-ன் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்கள் மற்றும் PIB மூலம் வெளியிடப்படும் செய்திக்குறிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இத்தகைய தவறான தகவல்களை ஊக்குவிக்க வேண்டாம் என ஊடகங்களும் அறிவுறுத்தப்படுகின்றன"

















