திருப்பூர்: மலை போல குவியும் குப்பைகள்; அகற்ற முடியாமல் திணறும் மாநகராட்சி - பிர...
`இனி இது கூடாது'- தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நாளில் சூர்யா காந்த் அதிரடி உத்தரவு
நேற்று இந்தியாவின் 53-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் நீதிபதி சூர்யா காந்த்.
தலைமை நீதிபதியாக பதவியேற்ற அதே நாளில் வழக்கறிஞர்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளார் சூர்யா காந்த்.
அந்த உத்தரவு படி, இனி வழக்குகளை 'அர்ஜென்ட் லிஸ்டிங்' செய்ய முடியாது.
அர்ஜென்ட் லிஸ்டிங் என்றால் என்ன?
ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்தில் எந்த வழக்குகள் விசாரிக்கப்படும் என்று பட்டியலிடப்படும். அந்தப் பட்டியலில் இல்லாத வழக்குகள் அன்று விசாரிக்கப்படாது.
ஆனால், அர்ஜென்ட் லிஸ்ட் செய்யப்படும் வழக்குகளின் விசாரணை அன்று இல்லையென்றால், பெயருக்கு ஏற்ற மாதிரி 'அவசரம்' எனக் கருதி குறிப்பிட்ட தினம் விசாரிக்கப்படும்.
இது தான் இனி கிடையாது என்று நீதிபதி சூர்யா காந்த் கூறியுள்ளார்.

விதிவிலக்கு உண்டு
ஆனால், இந்த உத்தரவிற்கும் சில விதிவிலக்குகள் உண்டு. மரணத் தண்டனை, தனிப்பட்ட சுதந்திரம் சார்ந்த வழக்குகள் போன்ற அசாதரண சூழல்களுக்கு சரியான காரணத்துடன் எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்தால் அந்த வழக்கு 'அர்ஜென்ட் லிஸ்டிங்' ஆக கருதப்படும். அன்று விசாரிக்கப்படும் என்று சூர்யா காந்த் கூறியுள்ளார்.


















