செய்திகள் :

`இனி பெட்ரோல் பங்க்கில் ஆன்லைன் பரிவர்த்தனை கிடையாது?' - TNPDA எச்சரிக்கையின் பின்னணி என்ன?

post image

சைபர் குற்ற வழக்குகள் தொடர்பான ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் சுட்டிக்காட்டி, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகளை வங்கிகள் முடக்கி வருகின்றன.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 830 பேருடன் சில பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த நடவடிக்கை தொடர்ந்தால், தமிழ்நாடு முழுவதும் எரிபொருள் விநியோகமும் பெட்ரோல் பங்குகளின் அன்றாடச் செயல்பாடுகளும் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளதாகத் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் (TNPDA) எச்சரித்துள்ளது.

பெட்ரோல்
பெட்ரோல்

இந்த விவகாரம் குறித்து பேசிய TNPDA தலைவர் கே.பி. முரளி, ``ஒரு வணிகத்தின் முதன்மை வங்கிக் கணக்கை முழுமையாக முடக்குவதால், எண்ணெய் நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய பணம், ஊழியர்களின் சம்பளம் மற்றும் அன்றாடச் செலவுகளைச் செய்ய முடியாமல் டீலர்கள் தவிக்கின்றனர்.

இதனால் வழக்கமான எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டால், அதன் நேரடிப் பாதிப்பை வாகன ஓட்டிகளே சந்திக்க நேரிடும். பெட்ரோல் பங்குகளில் தினமும் 200 முதல் 500 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடக்கின்றன.

மொத்த வருவாயில் பாதியளவு கிரெடிட் கார்டு, யுபிஐ (UPI) போன்ற ஆன்லைன் முறைகளிலேயே வருகிறது. பெட்ரோல் போட வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பின்னணியையோ அல்லது அவர் தரும் பணத்தின் ஆதாரத்தையோ சரிபார்க்க உரிமையாளர்களுக்கு எந்த வழியும் இல்லை.

ஆனால், ஏதேனும் ஒரு பரிவர்த்தனை சைபர் குற்ற வழக்கில் சந்தேகத்திற்குரியதாக மாறும்போது, வங்கிகள் எந்த முன்னறிவிப்பும் இன்றி பெட்ரோல் பங்க்கின் முழு வங்கிக் கணக்கையும் முடக்கி விடுகின்றனர். அதோடு, வழக்கு பற்றிய முழு விவரமும் தெரியாமல் உரிமையாளர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரிப்பதும், அடைத்து வைப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது" என்றார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தொடர்ந்து சைபர் குற்ற விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகக் கூறியுள்ள உரிமையாளர்கள், ''டிஜிட்டல் முறையில் பணம் பெற்றதற்காகத் தங்களைக் குற்றவாளிகளைப் போல நடத்துவதை ஏற்க முடியாது. ஒருவேளை இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் பங்க்களில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளைப் பெறுவதைத் தற்காலிகமாக நிறுத்துவோம்'' என TNPDA சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

மேலும், முழு வங்கிக் கணக்கையும் முடக்குவதற்குப் பதிலாகச் சந்தேகத்திற்குரிய குறிப்பிட்டத் தொகையை மட்டும் கட்டுப்படுத்த வேண்டும். நேரடி ஆதாரங்கள் இன்றி கைது நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பெட்ரோல் பங்க்குகளில் இதுபோன்ற ஆன்லைன் சிக்கல்களைக் கையாள முறையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) அரசு உருவாக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக முதல்வர் விஜய்க்குப் புகார் மனு ஒன்றை ஆன்லைனில் அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

வாழ்நாள் சேமிப்பு ரூ.60 லட்சம்; மொத்தமாக ராணுவத்துக்கு உயில் எழுதி நெகிழும் மதுரை முதியவர்!

மதுரை ஹார்விபட்டி பகுதியை சேர்ந்தவர், சுப்பையா. 82 வயதான இவர், மதுரா கோட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து ஒய்வுபெற்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மனைவி உயிரிழந்த நிலையில், பிள்ளைகள் மற்றும் உறவின... மேலும் பார்க்க

Kanimozhi: "காவிரிப் பிரச்னையைத் திசைதிருப்பத் த.வெ.க அரசு நடத்தும் நாடகம்தான் இது!" - கனிமொழி

தொகுதி மறுவரையறை மசோதா குறித்துப் பேச அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது தவெக அரசு. ஆனால், இதில் திமுக எம்.பி-க்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இத... மேலும் பார்க்க

தவெக வைத்த பொறியில் சிக்கியதா திமுக? தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜகவை நெருங்கும் திமுக!

தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், முதல்வர் விஜய் ஏற்பாடு செய்த அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை திமுகவும் அதிமுகவும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. இத... மேலும் பார்க்க

ராஞ்சி தேர்வு முறைகேடு: ``கோரிக்கைகள் ஏற்கும் வரை போராட்டம் தொடரும்" - மாணவர்கள் அமைப்பு உறுதி

டெல்லியில் ஜந்தர் மந்தரில் அரசுத் தேர்வுகளின் குளறுபடிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியது போல, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில், JPSC, JSSC தேர்வு முறைகேடுகளு... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: கட்டுமானப் பணிகள் தீவிரம் - 8 மாதங்களில் முடிக்க திட்டம்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற... மேலும் பார்க்க

பழனி நில மோசடி விவகாரம்: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஜாமீனை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான,1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6 ஆம் தேதி தனி நபர்கள் இருவரது பெயரில் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன... மேலும் பார்க்க