செய்திகள் :

'இன்னும் 9 நாள்கள் தான்' SIR படிவத்தை உடனே சமர்ப்பியுங்கள்; அதில் சிக்கலா? யாரிடம் உதவி கேட்பது?

post image

என்ன மக்களே... இந்நேரத்திற்கு உங்கள் வீடு தேடி சிறப்பு தீவிர திருத்தப் (SIR) படிவம் வந்திருக்கும்.

சிலர் அந்தப் படிவத்தை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கொடுத்திருப்பீர்கள். சிலர் இன்னும் அந்தப் படிவத்தை பூர்த்தி செய்யாமல் கூட இருக்கலாம்.

உங்களுக்கான நினைவூட்டல் தான் இது.

வருகிற டிசம்பர் 4-ம் தேதி தான், எஸ்.ஐ.ஆர் படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி. இன்னும் 9 நாள்கள் தான் இருக்கின்றன. அதற்கு மேல், உங்களது படிவம் ஏற்றுக்கொள்ளப்படாது.

வாக்காளர் பட்டியல் திருத்தம்
வாக்காளர் பட்டியல் திருத்தம்

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று இதை தெளிவுபடுத்தியிருக்கிறார். அதாவது எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பிப்பதற்கான தேதி நீட்டிக்கப்படாது என்று கூறியுள்ளார்.

அதனால், விரைவில் சிறப்பு தீவிர திருத்தப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பியுங்கள். அந்தப் படிவத்தில் கேட்டிருக்கும் தகவல்கள் உங்களுக்கு தெரியவில்லை என்றால் வாக்குச்சாவடி அலுவலரின் உதவியை நாடலாம்.

எஸ்.ஐ.ஆர் படிவம் சம்பந்தமாக நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டிய தேதிகள் உங்கள் கவனத்திற்காக...

டிசம்பர் 4, 2025 - சிறப்பு தீவிர திருத்தப் படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி.

டிசம்பர் 9, 2025 - ஜனவரி 8, 2026 - நீங்கள் கொடுத்த தகவல்களை சரிபார்த்து ஒரு பட்டியல் தயார் செய்யப்படும். அந்தப் பட்டியல் குறிப்பிட்ட இந்தத் தேதிகளில் உங்களுக்கு கொடுக்கப்படும்.

அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால், இந்தக் காலக்கட்டத்தில் ஆட்சேபனை செய்யலாம்... மேல்முறையீடு செய்யலாம்.

வாக்காளர் பட்டியல் திருத்தம்
வாக்காளர் பட்டியல் திருத்தம்

டிசம்பர் 9, 2025 - ஜனவரி 31, 2026 - தேர்தல் ஆணையம் நீங்கள் செய்த ஆட்சேபனை மற்றும் மேல்முறையீட்டை சரிபார்க்கும்.

பிப்ரவரி 7, 2026 - இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

ஆக, மக்களே சீக்கிரம் படிவத்தை நிரப்பி, சமர்ப்பியுங்கள்.

`பிரதமர் மோடியை அன்று கடுமையாக எதிர்த்தவர், இன்று ஆதரிப்பது ஏன்?’ - பி.ஆர் பாண்டியன் எக்ஸ்க்ளூஸிவ்

`பிரதமர் நரேந்திர மோடியுடன் மேடையில் இருப்பதை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் விரும்பவில்லை. கோவை இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் மு.க ஸ்டாலினை அழைக்க முயற்சி செய்த போதும், ... மேலும் பார்க்க

`இனி இது கூடாது'- தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நாளில் சூர்யா காந்த் அதிரடி உத்தரவு

நேற்று இந்தியாவின் 53-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் நீதிபதி சூர்யா காந்த். தலைமை நீதிபதியாக பதவியேற்ற அதே நாளில் வழக்கறிஞர்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளார் சூர்யா காந்த். அந்த ... மேலும் பார்க்க

Delhi Air Pollution: அபாயகர அளவில் காற்றுமாசு; அலுவலகங்களில் 50% Work From Home - அறிவுறுத்தும் அரசு

டெல்லியில் காற்று மாசுபாடு அபாயகரமாக அதிகரித்துள்ளதால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 விழுக்காடு பணியாளர்கள் மட்டுமே நேரடியாக வந்து பணியாற்ற வேண்டும் என்றும், மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்தே வேல... மேலும் பார்க்க

'கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது, திமுகவை யாராலும் காப்பாற்ற முடியாது' - நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்கிற பிரசார பயணம் தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது, " எம்ஜிஆர், ஜெயலலிதா இரண்டு முதலமைச்ச... மேலும் பார்க்க