செய்திகள் :

இன்றைய சூழலில், தேர்தல் நேரத்தில் ரூ.50,000 ரொக்க பணம் மட்டும் அனுமதிப்பது போதுமா? - கருத்துக் களம்

post image

தமிழ்நாட்டில் தேர்தல் வர இன்னும் கிட்டத்தட்ட ஒரு மாதம் தான் இருக்கிறது.

அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் எப்படி பரபரப்பாக இருக்கிறார்களோ... ஆங்காங்கே தென்படுகிறார்களோ... அதே அளவுக்கு தினமும் பறக்கும் படையினரை சாலைகளில் சந்தித்து வருகிறோம்.

தேர்தல் தேதி அறிவித்துவிட்டால், தனிநபர் ரூ.50,000-க்கு மேல் எடுத்து செல்லக்கூடாது என்பது பொது விதி.

2014-ம் ஆண்டு முதலே, ரூ.50,000 தான் லிமிட். ஆனால், 2014-ம் ஆண்டும், 2026-ம் ஆண்டும் ஒன்றா என்கிற கேள்வி இங்கே எழுகிறது.

பணம்
பணம்

இப்போது ஒரு பவுன் தங்கத்தின் விலையே ரூ.1 லட்சத்திற்கு மேல். வீட்டில் விசேஷம் வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு முறையும் ரூ.50,000 எடுத்து சென்றா, நகை வாங்க முடியும். நகை மட்டும் அல்ல, விஷேச வீட்டுகளில் பொருள்கள் வாங்வதற்க அதிக பணம் தேவைப்படுகிறது.

அது மாதிரி, அனைத்து நேரங்களிலும் கையில் இருக்கும் பணத்திற்கு ரசீது வைத்திருக்கவும் முடியாது.

இதெல்லாம் இல்லாமல், பறக்கும் படையினர் பணத்தைப் பறிமுதல் செய்துவிட்டால், மக்கள் அடுத்து என்ன செய்வார்கள்... எங்கே போய் அலைவார்கள்?

அதனால், இன்றைய சூழலில் ரூ.50,000 என்கிற லிமிட்டை கட்டாயம் தேர்தல் ஆணையம் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வியாபாரிகள், சந்தைக்கு சென்று வரும் விவசாயிகள் என பலரும் முன்வைத்து வருகிறார்கள்.

மக்களே... இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்... அதிக பணம் எடுத்து சென்று, நீங்கள் சந்தித்த பிரச்னை என்ன... எத்தனை ரூபாய் வரை பணம் எடுத்து செல்ல அனுமதிக்கலாம்.. என்பதை கமென்டில் சொல்லுங்க மக்களே.

அண்ணாமலை கொடுத்த `லிஸ்ட்' - பரபரத்த பியூஷ் கோயல் உடனான சந்திப்பு!

அ.தி.மு.க உடனான தொகுதிப் பங்கீட்டில், பா.ஜ.க-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 'எந்தெந்த தொகுதிகளை அ.தி.மு.க-விடம் கேட்டுப் பெறுவது, அதில் யாரை வேட்பாளராக நிறுத்துவது' என்ற ஆலோசனை கமலாலயத்தில் சூ... மேலும் பார்க்க

எதிரெதிர்: திமுக வேட்பாளர்களுக்கு தண்ணீர் காட்டும் காங்கிரஸ்; புகைச்சலில் புதுச்சேரி இந்தியா கூட்டணி

தி.மு.க தொகுதிகளுக்கு அடம்பிடித்த காங்கிரஸ்புதுச்சேரி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிகிறது. என்.டி.ஏ கூட்டணிய... மேலும் பார்க்க

கூட்டணி பலத்துடன் டஃப் கொடுக்கும் திராவிட கட்சிகள்; தவெக.! - தென்காசி மாவட்டத்தில் முந்துவது யார்?

முந்துவது யார்?தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?'இன்று நாம் பார்க்கப்போவது தென்காசி மாவட்... மேலும் பார்க்க

'ஒவ்வொரு குடும்பத்துக்கும் விலையில்லா ஃபிரிட்ஜ்' - தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார். அதிமுக தேர்தல் அறிக்கையில் 297 அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. ஏற்கனவே இரண்டு கட்டங்களாக தேர்த... மேலும் பார்க்க

திமுக-விடம் டபுள் டிஜிட்டில் தொகுதி வாங்குகிறதா தேமுதிக?

கூட்டணியில் இழுபறியாக நீடித்து வந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், விசிக என எல்லாரிடமும் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிவிட்டது திமுக. பெரிய கட்சிகளில் மீதமிருப்பது மக்கள் நீதி மய்யமும் தேமுதிகவு... மேலும் பார்க்க