செய்திகள் :

இரண்டு சம்பளம் வாங்கும் கணவன்-மனைவியா? 45 வயதில் ரிட்டைர்மென்ட் பெறுவது எப்படி?

post image

இரண்டு சம்பளம், கேட்கவே நல்லா இருக்குல்ல! 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரும்பாலும் இந்தியக் குடும்பங்களில் கணவர் மட்டுமே வேலைக்குச் செல்வார். மனைவி வீட்டு  வேலைகளை கவனித்துக்கொள்வார். இன்று பெண்களும் வேலைக்குச் செல்கின்றனர். ஆண்களும் வீட்டு வேலைகளில் பங்கேற்கின்றனர்.

இந்தியாவின் ஜி.டி.பி-யில் பெண்களின் பங்களிப்பு மட்டுமே இன்று 67 லட்சம் கோடியாகும்! இந்தியாவின் ஒட்டுமொத்த பெண்கள் கூட வேண்டாம், வெறும் 10% பெண்கள் மேலும் வேலைக்குச் சென்றாலே, நம் நாடு 16% வளர்ச்சியை அடுத்த 10 ஆண்டுகளில் எட்டிவிடும்!

கணவன்-மனைவி ரெண்டு பேருமே சம்பாதிக்கிறீங்களா? #LabhamWebinar
கணவன்-மனைவி ரெண்டு பேருமே சம்பாதிக்கிறீங்களா? #LabhamWebinar

மகிழ்ச்சியை நோக்கிய பயணம்

2047-ல் இந்தியா - மேலை நாடுகள் போல வளர்ந்து விடும் என்பது நிதி நிபுணர்களின் ஜாதகக் கணிப்பாக இருக்கிறது! அதை உங்கள் வீடுகளிலும் இப்போதே உணர்ந்து இருக்கலாம்.

கணவன், மனைவி - இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் முதலில் கடன் சுமை குறையும். வீட்டின் தேவைகள் கண்டிப்பாக பூர்த்தி ஆகும். சரியான பொருளாதார அறிவு இருக்கும் வீடுகள் மளமளவென வளர்ச்சியைக் காணும்.

நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் தம்பதியர் தேவைகளைத் தாண்டி இன்று மகிழ்ச்சியை நோக்கிய பயணத்தில் இருக்கின்றனர்.

சொந்த வீடு, கார், இன்பச் சுற்றுலா, மனத்துக்குப் பிடித்த வேலைக்கு மாறுதல் என்று இரட்டைச் சம்பளம் செய்துள்ள மாறுதல்கள் வரவேற்புக்குரியது.

இரண்டு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மனிதர்கள் திருமணம் ஆனபின்பு, ஒன்றிணைந்த சம்பளங்களால், பொருளாதாரத்தில் முன்னேறி மகிழ்ச்சியான வாழ்வை ஈட்டும் சூழல் இன்று ஏற்பட்டுள்ளது...

ஓய்வூதியம் - பென்ஷன்

இனியும் 60 வயது வரை உழைக்க வேண்டுமா?

தரவுகளின்படி, தமிழக நகர்ப்புறங்களில், கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் சராசரி வருமானம் ரூபாய் 75000 - 150000 ஆக இருக்கின்றது.

தேவையெல்லாம் பூர்த்தி ஆன பின்பு, குறைந்தபட்சம் 30 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 75 ஆயிரம் ரூபாய் வரை இவர்களின் கையில் உபரியாக பணம் இருக்கிறது.

இந்த உபரிப்பணம், சரியான இடங்களில் முதலீடு செய்யப்படும்போது, 10-15 வருடங்களில் ரிட்டையர் ஆகும் வாய்ப்பை கணவன் மனைவிக்கு கொடுக்கிறது என்பது ஆச்சரியமான விஷயம்.

முந்தைய தலைமுறைக்கு வேலை என்பது மிக முக்கியமாக இருந்தது. கூட ஒரு வீடு இருந்தால் வாழ்க்கை செட்டில்டு. 60 வயது வரை அமைதியாக வேலைப் பார்த்து ஓய்வு பெற்றார்கள்.

ஆனால் இன்றைய தலைமுறை நன்றாக சம்பாதிக்கும்போது, ஏன் 60 வயது வயது வரை ரிட்டைர்மென்டுக்காக காத்திருக்க வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது. 30 வயதில் திருமணம் ஆன ஒரு தம்பதி 45 வயதில், நிம்மதியாக ரிட்டைர்மென்ட் பெறும் வாய்ப்பு உள்ளது.

நிதிச் சுதந்திரம்

நீங்கள் 15 ஆண்டுகளில் எப்படி நிதிச் சுதந்திரம் அடையலாம்?

உங்களின் மாதச் செலவுகள் 50000 ரூபாய் என்றால், வருடத்திற்கு 6 லட்சம் தேவை. வருடச் செலவை 25-ஆல் பெருக்கினால் கிடைப்பது 1.5 கோடி ரூபாய்.

இன்றைக்கு உங்களிடம் ஒன்றரை கோடி ரூபாய் இருந்து, அதனை 12% வளர்ச்சி தரக்கூடிய பங்கு சார்ந்த ஃபண்டுகளில் (Equity Mutual Funds) முதலீடு செய்தால் உங்களால் மாதம் 50000 ஆயிரம் வருமானமாக பெற முடியும்!

இன்று இந்தத் தொகை கையில் இல்லாதவர்கள், இன்னும் 15 ஆண்டுகளில் நிதி சுதந்திரம் அடைய ஆண்டு செலவை 51 மடங்காக பெருக்கிக்கொள்ள வேண்டும். அப்போது 3.6 கோடி ரூபாய் தேவைப்படும். இதிலிலிருந்து வாழ்நாள் முழுக்க தேவையான தொகையை மாதாமாதம் வருமானம் போல் பெற்றுக்கொள்ள முடியும்!

நிதி சுதந்திரத்துக்கான தொகை = ஆண்டு செலவுகள் x 51 (15 ஆண்டுகளில் ஓய்வு பெற)

Early Retirement

இதனைச் சாத்தியமாக்குவது எப்படி? 

3.6 கோடி ரூபாய் சேர்க்க, 15 ஆண்டுகளுக்கு மாதம் முதலீடு செய்ய வேண்டிய தொகை என்ன தெரியுமா? ரூ. 75000 (12% ஆண்டு வருமானம்).

இதுவே உங்களால் ஆண்டுக்கு 8% வரை மாத முதலீட்டை அதிகரிக்க முடிந்தால், நீங்கள் தொடங்க வேண்டிய மாத முதலீடு வெறும் ரூ. 460000 மட்டுமே!

நகரங்களில் சராசரியாக ஒருவருக்கு 8-10% வரை ஆண்டுச் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. இதனைப் பயன்படுத்தி ஆண்டுக்காண்டு முதலீட்டைக் கூட்டி, தங்களின் 30 வயதில் ஆரம்பித்து 45-வது வயதில் நிதிச் சுதந்திரம் அடைய முடியும்! 3.6 கோடி ரூபாய் நிதித் தொகுப்பில் இருந்து மாதம் 1.20 லட்சம் ரூபாயை எடுத்து தங்களின் தேவைகளையும் ஆசைகளையும் பூர்த்தி செய்துகொள்ளலாம்!

முன்பே சொன்னது போல அடுத்த 20 ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கப்போகிறது. மக்களின் தேவை கண்டிப்பாக அதிகரிக்கும் என்பதால் நிறுவனங்களின் வளர்ச்சியும் அதிகரிக்கும். இந்த நேரத்தில் நாம் செய்யும் முதலீடு செய்யும்போது, நம் செல்வம் சிறப்பாக வளரும்!

சரி, நீங்கள் நிதி சுதந்திரம் அடைய வேண்டுமா?

இரட்டைச் சம்பளம் வாங்கும் கணவன்-மனைவிக்கான சிறப்பு நிதி வழிகாட்டல், வரும் ஞாயிறு (மே 24) காலை 11 மணிக்கு ஆன்லைனில் நடைபெறுகிறது. நிதி சுதந்திரம் அடைவது எப்படி என்பதனை அறிய கலந்துகொள்ளுங்கள்!

அனுமதி இலவசம். முன்பதிவு கட்டாயம். ஞாயிறு காலை 11 மணிக்கு கலந்துகொள்ள விருப்பப்படுவோர், இந்த லிங்க் பயன்படுத்தி பெயரை முன்பதிவு செய்யவும் -https://labham.money/events/webinar-may24-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_may24_2026

சொந்த வீடு: வங்கியில் கடன் வாங்கும் முன் இதைக் கவனிக்காவிட்டால் மிகவும் கஷ்டப்படுவீர்கள்!

வங்கியில் கடன் வாங்கி சொந்த வீடு கட்ட நினைக்கிறவர்கள் பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்றாலும், ஒரே ஒரு விஷயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். அது, எந்த வயதில் நாம் முழுமையாகக் கடனைக் கட்டி ம... மேலும் பார்க்க

8 ஆண்டுகளுக்குப் பிறகு, "வருமான வரி தாக்கல் செய்தீர்களா?" என்று அரசாங்கம் கேட்டால்?| பணம் வளர்ப்போம்

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது அவசியம் என்பது கடந்த அத்தியாயத்தில் நமக்குத் தெரிந்திருக்கும். ஒருவேளை, வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யாவிட்டால் என்னென்ன நடக்கும் என்பதை விளக்குகிறார் ஆடிட்டர்... மேலும் பார்க்க

'குறைஞ்ச சம்பளம் தானே'னு வருமானம் கணக்குத் தாக்கல் செய்யாமல் இருந்தா, கடன்.? | பணம் வளர்ப்போம்

'குறைவாக தான் வருமானம் வாங்குகிறேன்... நான் ஏன் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்? செய்யாமல் போனால் என்ன தவறு?' - இப்படி பல கேள்விகள் நம்மிடையே இருக்கிறது. நம்முடைய கேள்விகளுக்கு பதிலும், வ... மேலும் பார்க்க

100%, 50%, 25%, 10%... முதலீட்டில் உங்கள் லாபத்தை எப்படி கணக்கிடுவது என்று தெரியுமா?

''லாபத்தை சரியாகக் கணக்கிடுவது எப்படி என்று கற்றுக்கொள்ளவா வேண்டும்? அதுகூடவா நாங்கள் தெரியாமல் இருக்கிறோம்...'' இந்தக் கட்டுரையின் தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு இப்படி கேட்கத் தோன்றும்.''ஒரு முதல... மேலும் பார்க்க

Retirement: அரசு ஊழியர்களே! ஓய்வுக்காலத்துக்குப் பின் உங்களை யார் காப்பாற்றுவார்கள்?

நீங்கள் அரசு ஊழியரா?பணி ஒய்வு பெறப்போகும் அந்தக் கடைசி நாளை என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?கடந்த முப்பது வருடங்களாக உங்கள் வாழ்க்கை ஒரு அழகான தாள லயத்தில் இயங்கி இருக்கும். ஒவ்வொரு மாதமும் ... மேலும் பார்க்க

வருமான வரித் தாக்கல் செய்யும் போது, Form 16 மட்டுமல்ல; Form 26AS ரொம்ப முக்கியம் | பணம் வளர்ப்போம்

இப்போது எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. அதனால், பலர் ஆடிட்டர்களைத் தேடி ஓடுவதில்லை. அவர்களாகவே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிடுகின்றனர். அதனால், அனைவரும் வருமான வரிக் கணக்குத் தாக்கல் குறித்த... மேலும் பார்க்க