செய்திகள் :

இரண்டு மசோதாக்கள் அமல்படுத்த பாஜகவின் பிளான்; ராகுலை சந்தித்த கிரண் ரிஜிஜு - ராகுல் சொன்ன 'நோ'!

post image

தற்போது டெல்லியில் மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

இதை யாராவது சொன்னால் தான் தெரியும் போல. தினமும் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அமளி ஏற்படத் தொடங்கிய வேகத்திலேயே சபை ஒத்தி வைக்கப்பட்டு விடுகிறது.

இன்றும் இதே காட்சி தான். இன்றும் சபை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒத்திவைப்பிற்குப் பிறகு, இன்று (ஆகஸ்ட் 5) மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை அவரது அறையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சந்தித்திருக்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

ஏன் சந்திப்பு?

தொகுதி மறுவரையறை மசோதா, மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா - இந்த இரண்டு மசோதாக்களையும் கொண்டு வருவதில் பாஜக அரசு முனைப்புடன் இருக்கிறது.

இதற்காகவே கிரண் ரிஜிஜு ராகுல் காந்தியைச் சந்தித்திருக்கிறார். இந்த இரண்டு மசோதாவிற்கும் காங்கிரஸின் ஒத்துழைப்பைக் கேட்டிருக்கிறது பாஜக.

ஆனால், இந்த இரண்டிற்குமே உடனடியாகவே பெரிய 'நோ' சொல்லிவிட்டாராம் ராகுல் காந்தி.

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவில் இருந்து பிரிந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வைத்தும், காங்கிரஸின் ஒத்துழைப்பை வைத்தும் இந்தக் கூட்டத்தொடரில் இந்த இரு மசோதாக்களையும் அமல்படுத்திவிடலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறது பாஜக.

ஆனால், அது இப்போது நடக்காது போலும்.

அமளி..!

கூடவே, ராமர் கோயில் நிதி கையாடல் குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்... ஜூலை 20-ம் தேதி டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல்துறைத் தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இது இரண்டும் நடக்கவில்லை என்றால், அவையில் தொடர்ந்து அமளி ஏற்படும் என்றும் கிரண் ரிஜிஜுவிடம் தெரிவித்திருக்கிறார் ராகுல் காந்தி.

ஆக மொத்தம், இந்தக் கூட்டத்தொடரிலும் பாஜகவின் பிளான் வொர்க் அவுட் ஆகாதோ?

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள்; அரசின் ஈடு இணையற்ற சாதனை"- சீமான் கண்டனம்

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதுதான் தவெக கொடுங்கோன்மை அரசின் ஈடு இணையற்ற சாதனை" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அ... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம் குறித்த சுற்றறிக்கை: "பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்ததா தவெக அரசு?"- கனிமொழி

காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சில நிமிடங்களிலேயே இந்த ... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

`மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு டி.கே.சிவக்குமார் பேசுவதா?' - சீமான் கண்டனம்

`கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்... மேலும் பார்க்க