செய்திகள் :

``உக்ரைனுக்கு வழங்கிய ராணுவ உதவிகள் செலவை ஐரோப்பிய நாடுகள் வழங்க வேண்டும்" - அதிபர் ட்ரம்ப்

post image

உக்ரைனுக்கு அமெரிக்கா இதுவரை வழங்கிய ராணுவ உதவிகள் மற்றும் வெடிமருந்துகளுக்கான செலவை ஐரோப்பிய நாடுகள் திரும்பச் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``உக்ரைனுக்கு அமெரிகக அளித்து வரும் ஆதரவிற்கான செலவை யார் ஏற்பது என்ற கேள்வி மீண்டும் வலுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டமைப்பு இணைந்து உருவாக்கிய புதிய திட்டத்தின் கீழ், உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் ஆயுதங்களுக்கான தொகையை ஐரோப்பிய நாடுகளே செலுத்தி வருகின்றன.

ட்ரம்ப்

அமெரிக்காவின் சொந்த ஆயுதக் கையிருப்பு குறைந்துள்ளதால், பிற நட்பு நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். ஈரான் உடனான போரின் காரணமாக அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆயுத விற்பனை விரைவில் மீண்டும் தொடங்கும். அமெரிக்காவின் வெடிமருந்து உற்பத்தியை அதிகரித்து கையிருப்பை உயர்த்தி வருகிறோம்.

உக்ரைன் மற்றும் நேட்டோ அமைப்பிற்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் ஜோ பைடன் ஆட்சியில் இலவசமாக வழங்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளிடம் கோரியிருந்தால் அவர்களே இந்தச் செலவை ஏற்றிருப்பார்கள். தாமதமாக இருந்தாலும் அந்தத் தொகையை அமெரிக்கா மீண்டும் கேட்டுப் பெறும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார். உக்ரைன் மற்றும் ஈரான் போர்கள் காரணமாக அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தங்கள், அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ட்ரம்பிற்கும் அவரது குடியரசுத் கட்சிக்கும் அரசியல் சவாலாக மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

``தமிழ்நாட்டு மீனவர்கள் என்பதாலா இந்த அப்பட்டமான பாராமுகமும் ஓரவஞ்சனையும்?" - மாணிக்கம் தாகூர்

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 22-ம் தேதி மீன்பிடிக்க சென்ற அந்தோணி பிரசாத் விசைப்படகையும், அதிலிருந்த மீனவர்கள் 9 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தொடர்ந்து தலைமன்னார் ... மேலும் பார்க்க

TATA: ``எங்களுக்கு எந்தப் பயனுமில்லை..." - டாடா நிறுவனத்தை மூட கென்யா அதிபர் முடிவு!

கென்யாவில் இயங்கி வரும் இந்தியாவின் டாடா கெமிக்கல்ஸ் (Tata Chemicals) நிறுவனம் தனது அனைத்து செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ உத்தரவிட்டுள்ளார்.தெற்கு ... மேலும் பார்க்க

திமுக: அன்பில் மகேஸைக் கைவிட்ட உதயநிதி? திருச்சி அரசியலில் திருப்பம்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் நண்பரும் முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஸுக்கு மாவட்ட அரசியலில் முக்கியத்துவம் குறைந்து வருவதாக வருந்துகிறார்கள் திருச்சி தி.மு.க-வினர். கட்சி மறுசீரமைப்புக்க... மேலும் பார்க்க

தெலங்கானா காங்கிரஸ்: உட்கட்சிப் பூசல்; அமைச்சரவையிலிருந்து சுரேகா வெளியேற்றம்; என்ன நடக்கிறது?

தெலங்கானா காங்கிரஸ் மூத்த தலைவர் கொண்டா சுரேகா. இவர் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில், வனத்துறை மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், சுரேகா-வின் மகள் க... மேலும் பார்க்க

பஸ்ஸை முத்தமிட்டு, டயரை தொட்டு வணங்கி.. 18 ஆண்டுக்கால பணி, நிறைவு - கண்ணீர் பெருக நெகிழ்ந்த ஒட்டுநர்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனை பகுதியைச் சேர்ந்தவர் பால் குரியன் (56). இவர் கேரளா அரசுப் போக்குவரத்துக் கழகமான கே.எஸ்.ஆர்.டி.சி-யில் இடுக்கி மற்றும் கட்டப்பனை பணிமனைகளில் ஓட்டுநராகத் தனது ச... மேலும் பார்க்க