வேலூரில், மினி டைடல் பார்க்; திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் - 600 பேருக்கு வேலை...
உங்களுடன் ஸ்டாலின்: சிவகாசியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு? ஆட்சியரிடம் ஆவேசப்பட்ட பெண்; பின்னணி என்ன?
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பாக, அரசு புறம்போக்கு நிலம் அ.தி.மு.க பிரமுகர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நதிக்குடி வருவாய் கிராமத்தில் உள்ள நத்தம் சர்வே எண் 1706/1, அரசு புறம்போக்கு காலியிடத்தில், அந்தப் பிரமுகர் சட்டவிரோதமாக வீடுகள் கட்டி, வாடகைக்கு விட்டுவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அத்துடன், அந்த நிலத்தை மீட்டெடுத்து ஊராட்சி கனிம வள நிதியின் மூலம் கல்யாண மண்டபம், கழிவறை உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டு கட்டிடங்கள் அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்டோரிடம் பலமுறை மனுக்கள் அளித்துள்ளனர்.

ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனக் கூறி, இன்று வெம்பக்கோட்டை வட்டம் கொங்கன்குளம் கிராமத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நிகழ்ச்சியில், நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆட்சியர் சுகபுத்திராவிடம் நேரடியாக ஆவேசமாகப் பேசியுள்ளார்.
அந்தப் பெண் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், மனு தொடர்பாக நீண்ட நாள் நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசும் அந்தப் பெண்ணின் பேச்சு பொதுமக்களிடம் பேசுபொருளாகியுள்ளது.



















