NRI Corner 12 : இந்தியா திரும்பும் முன் மாதம் ₹100000 'பாஸிவ் இன்கம்' உருவாக்குவ...
'உங்கள் லட்சியங்களுக்கு 100% நேர்மையாக இருங்கள்; எனக்கு 8 வயது இருக்கும்போதே.!'- கோலி அறிவுரை
நட்சத்திர வீரரான விராட் கோலி டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் இன்று (ஏப்ரல். 28) கிரிக்கெட் அகாடமியை திறந்து வைத்திருக்கிறார்.
திறப்பு விழாவில் கலந்துகொண்ட கோலி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.

"நீங்கள் தற்போது கடக்கும் இந்த பள்ளி காலத்தை நானும் கடந்திருக்கிறேன். நான் எனது வாழ்க்கையின் ஆரம்ப காலக்கட்டத்திலேயே விளையாட்டைத் தேர்ந்தெடுத்தேன்.
நான் கிரிக்கெட்டைத் தொடர விரும்புகிறேன் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன்.
நான் தேர்ந்தெடுக்கும் பாதை இதுதான் என்பதை என் குடும்பத்தினரிடமும், எனது ஆசிரியர்களிடமும் நேர்மையாகத் தெரிவித்தேன்.
நீங்களும் உங்கள் லட்சியங்களுக்கு நேர்மையாக இருங்கள். அந்த லட்சியத்திற்காக முழுமையான அர்ப்பணிப்புடன் உழைப்பினைக் கொடுங்கள்.
.jpg)
நீங்கள் உங்கள் கனவினை அடைய 100 சதவிகிதம் உண்மையாக இருக்கிறீர்களா? என்பது உங்களுக்கு மட்டும்தான் தெரியும்.
எனக்கு 8 வயது இருக்கும்போது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினேன். எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அகாடமிக்கு செல்வேன்.
என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் அகாடமியும் பெரிய அங்கமாக இருந்தது" என்று பேசியிருக்கிறார்.


















