செய்திகள் :

`உங்கள் AI அசிஸ்டன்ட் என்ன செய்கிறது? இனி எல்லாமே தெரியும்!'- வருகிறது கூகுளின் 'Android Halo'

post image

கூகுள் நிறுவனம் தனது ஜெமினி (Gemini) AI மாடலை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில், 'ஏஜென்டிக் AI' (Agentic AI) மென்பொருட்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த சூழலில், பயனர்கள் தங்கள் AI அசிஸ்டன்ட்களின் செயல்பாடுகளை எளிதாகக் கண்காணிக்க உதவும் வகையில், 'ஆண்ட்ராய்டு ஹாலோ' (Android Halo) என்ற புதிய அம்சத்தை அதிரடியாக அறிவித்துள்ளது. இனி உங்கள் போனில் AI என்ன வேலை செய்கிறது என்பதை நீங்கள் மறைவாக அல்ல, வெளிப்படையாகவே பார்க்கலாம்!

AI

சரி, இந்த ஆண்ட்ராய்டு ஹாலோ எப்படி வேலை செய்கிறது?

இது அடிப்படையில் ஒரு மேம்பட்ட நோட்டிஃபிகேஷன் சிஸ்டம் போலவே செயல்படும். உங்கள் AI ஏஜென்ட் ஒரு பணியில் ஈடுபட்டிருக்கும்போது, லைவ் மோடில் செயல்படும்போது அல்லது உங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பும்போது, உங்கள் போனின் டிஸ்ப்ளேவின் மேற்புறத்தில் ஒரு சின்னம் மாதிரி தோன்றி அதன் நிலையைத் தெரிவிக்கும்.

கூகுள் இதை 'சப்ட்டில் கம்யூனிகேஷன்' (subtle communication) என்று குறிப்பிடுகிறது. இதன் மூலம், உங்கள் AI அசிஸ்டன்ட் என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை ஒரே பார்வையில் நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ள முடியும். இது ரொம்பவே பிராக்டிக்கலான ஒரு விஷயம்.

இந்த வசதி எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு, இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆண்ட்ராய்டு ஹாலோ வெளியிடப்படும் என்று கூகுள் கூறியுள்ளது. முதற்கட்டமாக, இது கூகுளின் ஜெமினி ஸ்பார்க் (Gemini Spark) மற்றும் பிற AI ஏஜென்ட்களுடன் இணக்கமாகச் செயல்படும். ஆனால், எந்தெந்த நிறுவனங்களின் போன்களில் இந்த அம்சம் சப்போர்ட் செய்யப்படும் என்பது பற்றி கூகுள் இன்னும் எதுவும் சொல்லவில்லை. வரும் மாதங்களில் இது குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். பிக்சல் போன்களுக்கு மட்டும் பிரத்யேகமாக இருக்குமா அல்லது எல்லா ஆண்ட்ராய்டு போன்களுக்கும் கிடைக்குமா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

கூகுள்
கூகுள்

மொத்தத்தில், ஆண்ட்ராய்டு ஹாலோ என்பது வெறும் ஒரு நோட்டிஃபிகேஷன் அம்சம் மட்டுமல்ல. AI தொழில்நுட்பம் மனிதர்களின் தலையீடு இல்லாமல் சுயமாகச் செயல்படத் தொடங்கும் காலத்தில், அதன் செயல்பாடுகளை வெளிப்படைத்தன்மையுடன் பயனர்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு முக்கியமான படியாகவே இது பார்க்கப்படுகிறது. இது பயனர்களுக்கும் AI-க்கும் இடையே ஒரு நம்பிக்கையான உறவை உருவாக்க உதவும் என டெக் உலகில் நம்புக்கிறார்கள்.!

மூளையின் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் 'டெம்பிள்' புரட்சி - ஜொமாட்டோ CEO தீபிந்தர் கோயலின் புது முயற்சி

ஜொமாட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் தீபிந்தர் கோயல் உணவு விநியோகத் துறையில் ஏற்படுத்திய தாக்கத்தைத் தொடர்ந்து, தற்போது தொழில்நுட்ப உலகில் 'டெம்பிள்' (Temple) என்ற பெயரில் ஒரு புதிய புரட்சியைத் தொடங்கிய... மேலும் பார்க்க

AI-யின் மேஜிக்: கிபி 79-ல் இத்தாலியில் எரிமலை வெடித்த போது ஓடிய நபர்; கண்முன்னே கொண்டு வந்த AI

வளர்ந்து வரும் இந்த நவீன யுகத்தில் ஏஐ என்கிற செயற்கை நுண்ணறிவு நினைத்துப் பார்க்காதவற்றையும் நிகழ்த்திக் காட்டி வருகிறது. தற்போது மீண்டும் அதை நிரூபிக்கும் வகையில் இத்தாலிய நாட்டு பாம்பே நகரில் கிபி 7... மேலும் பார்க்க

Whatsapp-க்கு செக்?! 'டிராக்கிங் இல்லை, விளம்பரம் இல்லை' - எலான் மஸ்கின் XChat; அப்படி என்ன ஸ்பெஷல்?

'XChat' என்ற புதிய செயலிமெசேஜிங் செயலிகள் உலகில் முடிசூடா மன்னனாக வலம்வரும் வாட்ஸ்அப்பிற்கு நேரடிப் போட்டியாக, எலான் மஸ்கின் X நிறுவனம் 'XChat' என்ற புதிய செயலியை களமிறக்கியுள்ளது. பயனர்களின் தனியுரிம... மேலும் பார்க்க

ஆன்லைன் கேம்களுக்கு மே 1-ம் தேதி முதல் செக்; வயது, பதிவு வங்கி - எல்லா பக்கமுமே 'கேட்' |Full Summary

பணம் இழப்பு, கடன், தற்கொலை என இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்ந்து பெரும் தொல்லையாகவும், பிரச்னையாகவும் இருந்தது... இருந்து வருகிறது. 'சரி... பிரச்னையாகத்தான் இருக்கிறதே... அப்போது அந்த விளையாட... மேலும் பார்க்க

Meta: 8000 பேரைப் பணிநீக்கம் செய்யும் மெட்டா; விருப்ப ஓய்வு தரும் மைக்ரோசாஃப்ட்; காரணம் என்ன?

தனது நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மொத்த பணியாளர்களில் 10 சதவிகித ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக மெட்டா நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதே சமயம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தனது நிறுவனத்தின் ஊழியர்கள் ஆயி... மேலும் பார்க்க

John Ternus: ஆப்பிள் சிஇஓ பதவியிலிருந்து விலகும் டிம் குக்; புதிய தலைவராக ஜான் டெர்னஸ் நியமனம்!

டிம் குக் ஓய்வுஆப்பிள் நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாகத் தலைமைச் செயலதிகாரியாகப் பணியாற்றி வரும் டிம் குக், வரும் செப்டம்பர் 1, 2026 அன்று அப்பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ளார். அவருக்குப் பதிலாக, நிறுவ... மேலும் பார்க்க