செய்திகள் :

உடல் எடையைக் குறைக்க பரிந்துரையின்றி நாட்டு மருந்து; 'யூடியூப்' வீடியோவால் மாணவிக்கு நேர்ந்த சோகம்

post image

மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மகள் கலையரசி (வயது 19). இவர், மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கலையரசி உடல் பருமனாக இருந்துள்ளார். இதனால் அவருடைய உடல் எடையைக் குறைப்பது தொடர்பாக யூடியூப்பில் சில வீடியோக்கள் பார்த்துவிட்டு, கீழமாசி வீதியில் உள்ள நாட்டு மருந்துகள் விற்கும் கடை ஒன்றுக்குச் சென்று பொருட்களை வாங்கி சாப்பிட்டு உள்ளார்.

சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பெற்றோர் உடனடியாக கலையரசியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

பின்னர் இரவில் மீண்டும் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே கலையரசி பரிதாபகரமாக உயிரிழந்தார்.

மாணவி கலையரசி
மாணவி கலையரசி

இது குறித்து கலையரசியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் செல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, மாணவி எந்த மாதிரியான நாட்டு மருந்தை உட்கொண்டார் என்பது பற்றி சம்பந்தப்பட்ட நாட்டு மருந்துக் கடையில் விசாரணை நடத்தி வருகின்றனர்

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "ஒவ்வொருவருடைய உடல்நிலைக்கு ஏற்றவாறுதான் மருந்துகள் உட்கொள்ள வேண்டும். யூடியூபில் வரும் வீடியோக்களைப் பார்த்துவிட்டு மருந்துகளை எடுத்துக் கொள்வது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

எந்த ஒரு மருந்தும் மருத்துவர்களின் பரிந்துரையோடு உட்கொள்வது மட்டுமே பாதுகாப்பானது" என்றனர்.

கேரளா: வீடியோ புகாரால் தற்கொலை செய்த நபர்; பெண் மீது வழக்கு; மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவு என்ன?

கேரள மாநிலம் கோழிக்கோடு வடகரா பகுதியில் வசிக்கும் ஷிம்ஜிதா முஸ்தபா(35) என்ற பெண் கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டார்.அதில், பஸ் பயணத்தின்போது ஒரு நபர் தவறான நோக்கத்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: காதலனைப் பிரிய முடியாத காதலி தற்கொலை; துக்கம் தாங்காமல் காதலனும் உயிர் துறந்த சோகம்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நாகாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகலா. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநரான பாண்டி என்பவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ள... மேலும் பார்க்க

தூத்துக்குடி: சொத்தைப் பிரித்து தர மறுத்த தாய்; கொன்று உடலை கிணற்றில் வீசிய மகன் - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள மிட்டாவடமலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசிங்கம். இவரின் மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி... மேலும் பார்க்க

சென்னை: காதலன் வீட்டில் மாணவி தற்கொலை - மருந்து பிரதிநிதி கைது!

சென்னை, நுங்கம்பாக்கம், புஷ்பா நகரைச் சேர்ந்தவர் பூஜா (24). இவர், கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஸ்குமார். இவர் மருந்து பிரதிநிதியாக வேலைப்பார்த்து வருகிற... மேலும் பார்க்க

சென்னை கள்ளச்சாராய வழக்கில் பெண்ணை சிக்கவைக்க ஸ்பெஷல் டீம் போலீஸ் போட்ட மாஸ்டர் பிளான்; திடுக் தகவல்

சென்னை, மயிலாப்பூர் பிடாரி அம்மன் கோயில் தெருவில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடந்த ஆண்டு டிசம்பர் ... மேலும் பார்க்க

`715 கோடிக்கு சொத்து; சகோதரியான மனைவி'- பெண் இன்ஜினீயரை திருமணம் செய்வதாகக் கூறி ரூ.1.53 கோடி மோசடி!

பெங்களூரைச் சேர்ந்தவர் நவ்யா ஸ்ரீ (29). சாஃப்ட்வேர் இஞ்ஜினீயரான நவ்யா தனது திருமணத்திற்கு வரன் தேடி மேட்ரிமோனியல் தளத்தில் பதிவுசெய்து வைத்திருந்தார். விஜய் ராஜ் என்பவர் நவ்யாவின் குடும்பத்தை அணுகி நவ... மேலும் பார்க்க