செய்திகள் :

உலகளாவிய வங்கிக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்த உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி!

post image

புதுதில்லி: உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி இன்று உலகளாவிய வங்கி உரிமத்திற்கான விண்ணப்பத்தை இந்திய ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை வங்கியின் நீண்டகால பார்வையுடன் ஒத்துப்போகிறது என்று உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விண்ணப்பத்திற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்தால் வங்கியின் பரிணாம வளர்ச்சியில் இது மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படும். யுனிவர்சல் பேங்கிங் உரிமம் அங்கீகரிக்கப்பட்டால், தனது வாடிக்கையாளர்களுக்கு முழுமையான நிதி சேவைகளை வழங்குவதற்கான முயற்சிகளை வலுப்படுத்தி, தீர்வுகளை வழங்கும் அதே வேளையில் யுனிவர்சல் வங்கிகளின் வரிசையில் அடி எடுத்து வைக்க தயாராக உள்ளது.

கடந்த ஆண்டு, ஏயூ ஸ்மால் பைனான்ஸ் வங்கியானது, யுனிவர்சல் வங்கி உரிமம் கோரி, ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்தது.

ரிசர்வ் வங்கியானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உலகளாவிய வங்கிகளாக மாற குறைந்தபட்ச நிகர மதிப்பு ரூ.1,000 கோடி உள்ளிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் சிறு நிதி வங்கிகளிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றது.

இதையும் படிக்க: அண்டை நாடுகள் மீதான வரிகளை டிரம்ப் தாமதப்படுத்தியதால், மீண்ட பங்குச் சந்தைகள்!

போர்போன் விஸ்கி மீதான சுங்க வரி 50% குறைப்பு!

புதுதில்லி: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தீவிரமடைந்துள்ளதால், போர்பன் விஸ்கி மீதான இறக்குமதி வரியை சுமார் 50 சதவிகிதமாக இந்தியா குறைத்துள்ளது.அமெரிக்க அதிபர் ... மேலும் பார்க்க

விதிமுறைகளை மீறியதாக வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

மும்பை: ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதற்காக, நைனிடால் மற்றும் உஜ்ஜீவன் சிறு நிதி ஆகிய இரண்டு வங்கிகளுக்கு மொத்தமாக ரூ.68.1 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது.முன்பணங்களு... மேலும் பார்க்க

ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.86.81-ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.86.81 ஆக முடிந்தது.ஏப்ரல் 1 முதல் பரஸ்பர கட்டணங்களை அமல்படுத்துவதாக அமெரிக்க அரசு அறிவித்த நிலையில், தற்போது நிறுத்திவ... மேலும் பார்க்க

8வது நாளாக இன்றும் சென்செக்ஸ், நிஃப்டி சரிந்து முடிந்தது!

மும்பை: நிம்பிக்கையின் அடிப்படையில் இன்றைய பங்குச் சந்தை வர்த்தகமான நிலையில், முதலீட்டாளர்கள் இன்று லாபத்தை பதிவு செய்ய தொடங்கியதால் மீண்டும் சரிந்து முடிந்த இந்திய பங்குச் சந்தை.இன்றைய காலை நேர வர்த... மேலும் பார்க்க

சரிவில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 600 புள்ளிகள் குறைந்தது!

வாரத்தின் கடைசி நாளான இன்று (பிப். 14) பங்குச் சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. இந்த வாரத்தில் 3 நாள்கள் பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்த நிலையில் நேற்று(பிப். 13) ஏற்றத்துடன் வர்க்கமானது. வர்த... மேலும் பார்க்க

தொடா்ந்து சரியும் சா்க்கரை உற்பத்தி

2024-25-ஆம் சந்தைப் பருவத்தில் இந்திய சா்க்கரை உற்பத்தி தொடா்ந்து சரிவைக் கண்டுவருகிறது. அந்த சந்தைப் பருவத்தின் ஜன. 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அது 13.62 சதவீத சரிவைக் கண்டுள்ளது. இது குறித்து... மேலும் பார்க்க