செய்திகள் :

உ.பி.யில் நூதன முயற்சி: நெடுஞ்சாலை ஈரத்தை காய வைக்க மின் விசிறிகளை கொண்டு வந்து வைத்த அதிகாரிகள்!

post image

வடமாநிலங்களில் இப்போது மழை அதிக அளவில் பெய்து வருகிறது. இதனால் அனைத்து சாலைகளும் சேதமடைந்த நிலையில் இருக்கிறது. எனவே வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மற்றும் லக்னோ இடையே அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை மழை நீரில் சேதம் அடைந்துள்ளது. அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்படி இருந்தும் சாலையில் உள்ள ஈரம் காயாமல் இருக்கிறது.

அதனை காயவைக்க அதிகாரிகள் செய்த நூதன முயற்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த சாலையில் வாகனங்கள் வேறு வழியில் திருப்பிவிடப்பட்டு பழுதுபார்ப்பு பணிகள் நடந்து வருகிறது. அதில் ஈரம் காய்ந்த பிறகு பழுதுபார்க்க வேண்டும் என்பதற்காக ஈரத்தை காயவைக்க மின் விசிறிகளை கொண்டு வந்து ரோட்டில் வைத்துள்ளனர்.

நெடுஞ்சாலையில் மின் விசிறி இயங்கிக்கொண்டிருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள் அதிகாரிகளின் இந்த முயற்சியை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளனர்.i

இந்த மின் விசிறிகள் குறித்து வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர். தொடர் மழையால் நடைபாதைக்கு அடியில் உள்ள அடுக்குகளில் தண்ணீர் கசிந்து, மண் வலுவிழந்துள்ளது. இதனால் சேதமடைந்த பகுதி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சாலை பழுதடைந்து இருப்பது குறித்து தங்களுக்கு தெரிவிக்காமல் டோல் கட்டணம் வசூலிப்பதாகவும் வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

சாலை பழுதாகி இருப்பது தங்களுக்குத் தெரிந்திருந்தால் மாற்று வழியைத் தேர்ந்தெடுத்திருப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர். சாலை பழுதடைந்து இருப்பது கட்டுமானத்தின் தரம் குறித்தும் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. தற்போது பழுது ஏற்பட்டிருக்கும் இடத்தில் ஒரு மாதத்திற்கு முன்பே பழுதுபார்க்க வேண்டிய நிலை இருந்தது. சமீபத்திய மழையைத் தொடர்ந்து சாலை மீண்டும் சேதம் அடைந்துள்ளது. இதனால் சாலையை பழுதுபார்க்க அச்சாலையை கட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளின் புகாரை தொடர்ந்து டோல் கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திடீரென நிரம்பி குலுங்கும் கிணற்று தண்ணீர்: குஜராத்தில் மர்ம கிணற்றை பார்க்க திரளும் மக்கள்! | Video

குஜராத் மாநிலம் மோர்பி அருகில் உள்ள விர்பர்தா என்ற கிராமத்தில் இருக்கும் கிணறு ஒன்று அங்குள்ள மக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. கடந்த 5 நாட்களாக அக்கிணற்றில் ஒரு அசாதாரண செயல்பாடு இருந்து வருகிறது.... மேலும் பார்க்க

An Ordinary Man : இயக்குநர் ரவி மோகன்; ஹீரோ யோகி பாபு - ஷூட்டிங் ஸ்பாட் ஜாலி போட்டோஷூட்!

An Ordinary Man Exclusive: “சாதாரண மனிதன் கடவுளாகுற கதைதான் An Ordinary Man” - இயக்குநர் ரவி மோகன் மேலும் பார்க்க

`எங்களுக்கு வர நேரமில்லை' - இறந்த தந்தை; இறுதிச்சடங்கை வீடியோ காலில் பார்த்த மகள்கள்

மும்பையை சேர்ந்த சிவ்சரண் ராம் ரத்தன் குப்தா. இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர். மூன்று பேருக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். அவர்கள் தங்களது குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கின்றனர... மேலும் பார்க்க

மும்பை: வேலையிலேயே இல்லாத 10 கற்பனை போலீஸார்; ரூ.6.5 கோடி சம்பளம் பட்டுவாடா செய்து மோசடி

மும்பை காவல் துறையில் இல்லாத ஒருவரை இருப்பது போன்று காட்டி மோசடி செய்யப்பட்டுள்ளது. காவல் துறையில் இல்லாத 10 பேர் உத்தியோகபூர்வ பதிவேடுகளில் ஊழியர்களாக பலமுறை காட்டப்பட்டு, அவர்களின் கணக்கில் மாதாந்தி... மேலும் பார்க்க

80 மீட்டர் தேசியக் கொடி... உலகச் சாதனை படைத்த சேலம் பள்ளி மாணவர்கள்!

பெற்றோரின் வழிகாட்டுதலுடன், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விசைத்தறியில் 80 மீட்டர் தேசியக் கொடியை நெய்து உலக அங்கீகாரம் பெற்ற அண்ணன்–தங்கையான தமிழ்ச்செல்வன் - செந்தமிழமுதுவின் சாதனை கவனம் ஈ... மேலும் பார்க்க

பகலில் படிப்பு, இரவு பெட்ரோல் பம்பில் வேலை; கல்வியைத் தொடர போராடும் மும்பை மாணவியின் நெகிழ்ச்சி கதை

மும்பையைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது படிப்புக்காக இரவு 10 மணி வரை பெட்ரோல் பம்ப் ஒன்றில் வேலை செய்வது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. மும்பையில் உள்ள ஷெல் பெட்ரோல் பம்ப் ஒன்றில் வினீத் என்பவர் தனது... மேலும் பார்க்க