செய்திகள் :

ஊட்டி: ஆராய்ச்சியாளனின் 200 ஆண்டுகளுக்கு முந்தைய டைரி குறிப்புகள்! - நிரூபணமாகும் வாய்ப்பு?

post image

பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த உயிரியல் ஆராய்ச்சியாளரான பியர் சோனெராட் என்பவர் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய துணைக்கண்டத்தில் தென்பட்ட பல அரிய உயிரினங்களை தனது டைரி குறிப்புகள் மூலம் பதிவு செய்தவர். புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான இவர் தன் கண்களால் பார்த்த உயிரினங்களை தத்ரூபமாக வரையும் அசாத்திய திறனையும் கொண்டிருந்தார்.

அரிய வகை மூஞ்சுறு

1813 - ம் ஆண்டு புதுச்சேரி பகுதியில் வித்தியாசமான மூஞ்சுறு ( Shrew) ஒன்றைப் பார்த்திருக்கிறார். சின்னஞ்சிறிய பாலூட்டி இனமான அதன் உடலின் நடுப்பகுதியில் வெள்ளை‌‌ நிற‌ பட்டையுடன் காணப்பட்ட அந்த மூஞ்சுறு குறித்து தன்னுடைய டைரி குறிப்புகளில் விரிவாக எழுதியதுடன் அதன் உருவத்தையும் தெள்ளத்தெளிவாக வரைந்திருக்கிறார். அவரின் மறைவுக்குப் பிறகு டைரிக்குறிப்புகளில் சில புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன.

பியர் சோனெராட் கண்டறியப்பட்டு பெயர் குறிப்பிடப்படாத இந்த மூஞ்சுறு குறித்து 2011 ம் ஆண்டுகளில் ஆய்வில் இறங்கிய ஆன்டனி செக்கே என்கிற உயிரின ஆராய்ச்சியாளர், அதன் கண்டுபிடிப்பாளரின்‌ பெயரையே 'சோனெராட் ஷ்ரூ' ( டிப்ளோமசோடன் சோனெராட்) என‌ 2018 - ம் ஆண்டு பெயர் சூட்டியிருக்கிறார்.

அரிய வகை மூஞ்சுறு

பியர் சோனெராட்டிற்கு பிறகு வேறு யாரும் இந்த மூஞ்சுறுவை பார்த்தாகவோ பதிவு செய்ததாகவோ ஆராய்ச்சி உலகில் தரவுகள் இல்லை. டைரி குறிப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒரு உயிரினம் பூமியில் வாழ்ந்திருக்கலாம் என்ற‌ தீர்க்கமான முடிவுக்கு வர ஆராய்ச்சியாளர்கள் தயக்கம் காட்டி வந்தனர். அதேவேளையில் இந்த உயிரினம்‌ பூமியிலிருந்தே முற்றாக அழிந்த உயிரினமாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏரிக்கு அருகில் வித்தியாசமான மூஞ்சுறு ஒன்று இறந்துக் கிடப்பதை மொய்னுதின், சாம்சன், முகது சாஹிர், அபினேஷ், பிரவீன் அடங்கிய வன உயிரின ஆராய்ச்சி குழுவினர் 2022- ம் ஆண்டு கண்டறிந்துள்ளனர். பின்னர் பியர் சோனெராட்டால் குறிப்பிட்ட பட்ட மூஞ்சுறு குறித்து தெரிய வந்ததும், அது குறுத்த தகவல்களை தேடி இருக்கிறார்கள். இது அதே மூஞ்சுறு வகையை சேர்ந்ததாக இருக்கலாம் என அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

அரிய வகை மூஞ்சுறு

ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த உயிரினம் வாழ்ந்து வருவதாகவும் ஆராய்ச்சி குழுவினர் நம்புகின்றனர். அரசு தரப்பில் அனுமதி, நிதியுதவி போன்றவை கிடைத்தால் அதன் தற்போதைய வாழ்நிலை, சூழலியல் முக்கியத்துவம் போன்றவற்றை கண்டறிய ஏதுவாக இருக்கும் என்கிறார்கள் நீலகிரியைச் சேர்ந்த இந்த ஆராய்ச்சி குழுவினர்.

உலகிலேயே மிகப்பெரிய கரப்பான் பூச்சி இதுதான்; இறக்கையின் அகலம் மட்டும் இவ்வளவா?

கரப்பான் பூச்சி என்றாலே பலருக்கு பயம் ஏற்படும். நம் வீடுகளில் சாதாரணமாகக் காணப்படும் கரப்பான் பூச்சிகள் சிறிய அளவில் இருப்பதே நமக்கு பயமாக இருக்கும். ஆனால் உள்ளங்கையையே மறைக்கும் அளவுக்கு ஒரு கரப்பான்... மேலும் பார்க்க

சிலரை 'அவன் ஒரு புள்ளப்பூச்சி மாதிரி' என்பது ஏன்? பிள்ளைப்பூச்சிப்பற்றிய இன்ட்ரஸ்டிங் தகவல்கள்

இன்றைக்கு நடுத்தர வயதில் இருப்பவர்களுக்குத்தான் இந்தப் பூச்சியைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. தார் ரோடும், சிமெண்ட் ரோடும் பார்த்துக்கொண்டிருக்கிற இன்றைய தலைமுறையினருக்கு இந்தப் பூச்சியின் ... மேலும் பார்க்க

Karnataka:‌ 16 குட்டிகள் உட்பட 23 புலிகளைப் பிடித்த கர்நாடக வனத்துறை; என்ன நடக்கிறது?

கண்மூடித்தனமான தொடர் வேட்டையின் காரணமாக கிட்டத்தட்ட அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்ட வங்கப் புலிகளின் எண்ணிக்கை தென்னிந்திய காடுகளில் தற்போது மெல்ல மீண்டெழுந்து வருகின்றன. உலகில் வங்கப் புலிகள் அதிகம் ... மேலும் பார்க்க

புதுச்சேரி: நகரப் பகுதியில் ஓய்வெடுக்கும் பழம்தின்னி வவ்வால்கள்! | Photo Album

மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள்மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள்மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள்மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள்மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால்கள்மரங்களில் ஓய்வெடுக்கும் வவ்வால... மேலும் பார்க்க