செய்திகள் :

ஊட்டி: ’இதுக்கு முன்பு இப்படி கேள்விபட்டதே இல்ல’ –யானை நடமாட்டத்தால் ஆச்சர்யத்தில் மக்கள்!

post image

200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஆங்கிலேயர்கள்‌ பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பூர்வீக சோலை மரக்காடுகளையும் புல்வெளிகளையும் அழித்து தேயிலை, காபி பயிர்களை அதிகளவில் பயிரிட்டனர். கண்மூடித்தனமான காடழிப்பு மற்றும் வனவிலங்கு வேட்டையின் காரணமாக பல்வேறு உயிரினங்கள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன.

முதல் முறையாக தென்பட்ட யானை

தற்போதைய வன பாதுகாப்பு சட்டங்கள் காரணமாக வனவிலங்குகளின் எண்ணிக்கை மெல்ல மீண்டெழுந்து வருகின்றன. அதேவேளையில் வனவிலங்குகளின் வாழிட, வழித்தட சிதைப்பு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு புதிய பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஊட்டி அருகில் உள்ள நுந்தளா பகுதியில் யானை ஒன்று நடமாடி வருவதை மக்கள் நேற்று கண்டுள்ளனர். யானை நடமாட்டம் குறித்த கடந்த 200 ஆண்டு தரவுகளின் படி இந்த பகுதிக்கு யானை வந்திருப்பது இதுவே முதல் முறை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

முதல் முறையாக தென்பட்ட யானை

இது குறித்து கிராம மக்கள், " பல தலைமுறைகளாக இந்த கிராமத்தில் வாழ்ந்து வருகிறோம். சுற்றிலும் தேயிலை மற்றும் மலை காய்கறி தோட்டங்கள் உள்ளன. காட்டு மாடுகளின் நடமாட்டம் தான் அதிகம் இருந்தது. ஆனால், தற்போது முதல் முறையாக ஆண் யானை ஒன்று வந்திருக்கிறது. எங்கள் கிராமத்திற்கு இதற்கு முன்பாக யானை வந்ததாக முன்னோர்கள் சொன்னதாக கேள்விப்பட்டதில்லை" என்றனர்.

பாழாகும் பொருநை ஆறு; வரி செலுத்தாத பெரு நிறுவனங்கள்... கடிவாளம் போடப்படுமா?! | Thamirabarai River

பொருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு, பொதிகை மலையில் தோன்றிப் பாய்ந்து பல கிளை ஆறுகளைக் கொண்டது. சில மாதங்களுக்கு முன் சில தொழில் நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் இருக்கும் நீரைப் பயன்படுத்திக்கொண்டு... மேலும் பார்க்க

`பிளாஸ்டிக்குக்கு நோ; பப்பாளி தண்டில் ஸ்ட்ரா'- இளநீர் வியாபாரியின் Eco Friendly முன்னெடுப்பு

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்தவர்‌ இளங்கலை பட்டதாரியான செந்தில். கடந்த பன்னிரெண்டு வருடங்களாக இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்.இதில் கடந்த ஏழு வருடங்களாக இயற... மேலும் பார்க்க

மாதவ் காட்கில்: ``வேள்பாரிக்கு பிறகு மேற்கு தொடர்ச்சி மலையை அதிகம் நேசித்தவர்"- பூவுலகின் நண்பர்கள்

மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறித்த சிந்தனையைத் தூண்டும் வகையில் அறிக்கை தயாரித்த மூத்த சூழலியல் அறிஞர், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளரான மாதவ் காட்கில் (83) நேற்று இரவு (7.1.2026) புனேயில் கால... மேலும் பார்க்க

Madhav Gadgil: மேற்கு தொடர்ச்சி மலை இருக்கும்வரை இவர் பெயர் ஒலிக்கும் - மறைந்தார் சூழலியல் பேரறிஞர்

இந்திய துணைக்கண்டத்தின் பெருங்கொடை, பேரதியசம், இயற்கையின் புதையல் என உயிரியலாளர்களாலும் இயற்கையியலாளர்களாலும் போற்றப்படுகிறது மேற்கு தொடர்ச்சி மலை. மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகளால் சிதைக்கப்பட்ட... மேலும் பார்க்க

ஊட்டி: காயத்துடன் உயிருக்குப் போராடிய இளம் ஆண் புலி; காப்பாற்றாதது ஏன்? - வனத்துறை விளக்கம்!

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் உள்ள போர்த்தியாடா பகுதி தனியார் தேயிலைத் தோட்டத்தில் காயத்துடன் புலி ஒன்று நடமாடி வருவதை உள்ளூர் மக்கள் கடந்த வாரம் பார்த்துள்ளனர். செல்போன்களில் பதிவு செய்து வனத்துறைய... மேலும் பார்க்க

'மலை ரயில் பாதை முதல் மின் கம்பங்கள் வரை சேதம்' - ஓர் இரவில் குன்னூரைப் புரட்டிப்போட்ட கனமழை |Photos

குன்னூர் மழை பாதிப்பு குன்னூர் மழை பாதிப்பு குன்னூர் மழை பாதிப்பு குன்னூர் மழை பாதிப்பு குன்னூர் மழை பாதிப்பு குன்னூர் மழை பாதிப்பு குன்னூர் மழை பாதிப்பு குன்னூர் மழை பாதிப்பு குன்னூர் மழை பாதிப்பு கு... மேலும் பார்க்க