Australia: முதன்முறையாக 2 பூர்வகுடி வீரர்கள்; ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வரலாற்று...
'எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்' - வானதி சீனிவாசன் அறிவிப்பு
கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோவையில் சுமார் 257 சதுர கிமீ தூரம் வரவுள்ள மெட்ரோ திட்டம் குறித்து திமுக அரசு சரியாக அறிக்கை தாக்கல் செய்யவில்லை. தவறான தரவுகளை வைத்து விண்ணப்பித்துள்ளனர். பிரதமர் மோடி நமக்கு எதிராக உள்ளார் என்ற பரப்புரை செய்வதே இவர்கள் நோக்கமாகும்.

மெட்ரோ ரயில்வே திட்டத்துக்கு சில வரையறைகள் உள்ளன. அதை பற்றி தெரிந்து கொள்ளாமல் பொய் பரப்புரை செய்து வருகின்றனர். மெட்ரோ ரயில் திட்டம் குறித்து தெளிவான விளக்கங்களை தமிழ்நாடு அரசு குறிப்பிடவில்லை.
திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பட்டுள்ளதாக பொய் பரப்புரை செய்கிறார்கள். திமுக அரைகுறை செய்தியை மக்களிடம் பரப்புவதில் கைதேர்ந்தவர்கள். டெல்லியில் இருந்து வந்த அறிக்கையை அரைகுறையாக எடுத்துள்ளார்கள். சுற்றுலா மற்றும் தலைநகர் என்ற அடிப்படையில் சில மாநிலங்களில் மெட்ரோ ரயிலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மெட்ரோ வேண்டும் என்பதற்காக அடிப்படை ஆய்வுகள் செய்யவில்லை. திமுக போராட்டம் செய்து நாடகமாடுகிறது. 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை கொண்டு வருவோம்.
அறிக்கையில் கடைசி இரண்டு பக்கங்களை மட்டும் வெளியிட்டும் ஐயய்யோ என்று பேசுகிறார்கள். கோவையில் முக்கிய வணிக கட்டிடங்களை இடிக்கும் நோக்கில் மாநில அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஒழுங்காக ஹோம் வொர்க் செய்யாமல் சமர்ப்பித்தது தான் பிரச்னை. கோவையில் திமுகவுக்கு 10 தொகுதிகளிலும் தோல்வியை தந்த மக்களை பழி வாங்கும் நோக்கில் திட்டம் வரக்கூடாது என்பதற்காக இப்படி செய்துள்ளனர்.

ஜெயிலில் இருந்தவரை அமைச்சராக்கியது தான் திமுக செய்த சாதனை. 40 எம்பிக்களை வைத்து ஏன் திட்டத்தை கொண்டு வர முடியவில்லை. நாங்கள் கோவைக்கு உறுதியாக மெட்ரோ ரயில் கொண்டு வருவோம்.” என்றார்.

















