செய்திகள் :

"எனது இளமைக் காலத்தில் பொன்னான 15 ஆண்டுகளை ஆம் ஆத்மிக்காகவே அர்ப்பணித்தேன், ஆனால்..!" - ராகவ் சதா

post image

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜக-வில் இணைந்த ராகவ் சதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "ஒரு பட்டயக் கணக்காளராக எனக்குக் காத்திருந்த நம்பிக்கைக்குரிய வேலைவாய்ப்பை துறந்து நான் அரசியலுக்கு வந்தேன்.

நான் ஒரு தொழில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக அரசியலுக்கு வரவில்லை. நான் ஓர் அரசியல் கட்சி நிறுவப்படும்போதே அதன் உறுப்பினராக இணைந்தேன்.

ராகவ் சதா
ராகவ் சதா

எனது இளமைக் காலத்தின் பொன்னான 15 ஆண்டுகளை ஆம் ஆத்மி கட்சிக்காகவே அர்ப்பணித்தேன்.

ஆனால் இன்று, அந்தக் கட்சி முன்பு இருந்த அதே கட்சியாக இல்லை. இன்று, அந்தக் கட்சியில் ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த சூழல் நிலவுகிறது.

நாடாளுமன்றத்தில் நாங்கள் பேசுவதும் தடுக்கப்பட்டது. எங்களைச் செயல்படவே விடவில்லை.

மேலும், பொதுமக்களுக்கு சேவையாற்றுவதை விடத் தங்கள் தனிப்பட்ட நலன்களுக்காகவே செயல்படும் சில ஊழல்வாதிகள், சமரசவாதிகளின் கட்டுப்பாட்டிற்குள் அக்கட்சி சென்றுவிட்டது.

கடந்த சில ஆண்டுகளாக, நான் சரியான மனிதனாக இருந்தாலும், ஒரு தவறான கட்சியில் இருக்கிறேனோ என்று எனக்குத் தோன்றிக் கொண்டே இருந்தது.

கட்சியை விட்டு விலகுவது என முடிவெடுப்பதற்கு முன், அரசியலை விட்டு விலகுவது, கட்சிக்குள் இருந்து சீர்திருத்தங்களை மேற்கொள்ள முயற்சிப்பது அல்லது வேறொரு அரசியல் கட்சியில் இணைவது என மூன்று மாற்று வழிகளைப் பற்றி நான் தீவிரமாகச் சிந்தித்தேன்.

ஆம் ஆத்மி கட்சி
ஆம் ஆத்மி கட்சி

மொத்தம் 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலக முடிவெடுத்துள்ளனர். இது அக்கட்சிக்குள் பரவலான அதிருப்தி நிலவுவதையே உணர்த்துகிறது. ஒருவர் தவறு செய்யலாம், இருவர் தவறு செய்யலாம்.

ஆனால் 7 பேர் ஒரே நேரத்தில் தவறு செய்ய முடியாது. பொதுமக்களின் பிரச்னைகளை இன்னும் அதிக ஆற்றலுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து முன்னெடுத்துப் பேசுவேன்” என்று வீடியோவில் பேசியிருக்கிறார்.

தேர்தல் முடிந்த சூட்டோடு விநாயகர், காளி கோயிலில் சாமி தரிசனம்; சொந்த ஊரில் வைகோ

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து விட்ட சூழலில் பதிவான அதிக வாக்கு சதவிகிதத்தால் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் மே 4 ம் தேதியை திக் திக் மனநிலையுடன் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றன. முதல்வர் மு.... மேலும் பார்க்க

``பையில் வெங்காயம் வைத்திருந்தால் எந்த ஆபத்தும் வராது" - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

மத்தியப்பிரதேச மாநிலம், சிவபுரியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``நான் காரிலோ அல்லது தங்கும் இடத்திலோ ஏசியைப் பயன... மேலும் பார்க்க

இணைந்த 7 எம்.பி-கள்: `மாநிலங்களவையில் பலம் கூடிய பாஜக' - ஏற்றுக்கொண்ட சபாநாயகர்

மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) இருந்தனர். இவர்களில் ராகவ் சதா உள்ளிட்ட 7 உறுப்பினர்கள், கடந்த வெள்ளிகிழமை ஆம் ஆத்மி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கா... மேலும் பார்க்க

”நகையை அடகு வச்சி தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்தார்” - மறைந்த தாயை நினைத்து உருகும் தவெக வேட்பாளர்

த.வெ.க-வின் திருவாரூர் மேற்கு மாவட்ட செயலாளர் யு.வி.எம்.ராஜராஜன். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் த.வெ.க சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டவர். இவரது தாய் வான்மதி என்கிற... மேலும் பார்க்க

மதுபான வழக்கு: "இந்த நீதிபதி முன் ஆஜராக மாட்டேன், அதற்கு பதில்.!"- கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோ

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ (CBI) பதிவு செய்த ஊழல் வழக்கில் இருந்து, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரையும் டெல்லி ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: "பாஜக பெண்களுக்கு ரூ. 1.80 லட்சம் தரும்" - மோடியின் வாக்குறுதி என்ன?

மேற்கு வங்கத்தில் 294 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது.முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்குக் கடந்த 23 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத்தேர்தல்... மேலும் பார்க்க