Music for Meals: சமூக சேவைக்கு நிதி திரட்ட இசை நிகழ்ச்சி; இளையராஜாவிற்குக் குவிய...
"என் படத்திற்கு சென்சார் போர்ட் 48 கட்டுகள் கொடுத்தது; நிறைய கஷ்டப்பட்டோம்" - நடிகர் ஜீவா
'பேமிலி' படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில், ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'தலைவர் தம்பி தலைமையில்'.
இப்படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
இப்படம் வரும் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (ஜன.11) நடைபெற்றது.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜீவா சென்சார் போர்டு விவகாரம் குறித்துப் பேசியிருக்கிறார்.
"நான்தான் சென்சாரின் பிராண்ட் அம்பாசிடர். நான் நடித்த 'ஜிப்சி' படத்தில் 48 கட்டுகள். என்னைத்தான் முதலில் செய்தார்கள்.
சென்சார் எல்லாம் தாண்டி வந்தால் கொரோனா வைரஸ் வந்துவிட்டது. இந்த இரண்டு 'C'யும் எங்களுக்கு நிறைய கஷ்டத்தைக் கொடுத்தது" என்று ஜீவா பேசியிருக்கிறார்.
அதேபோல், மீண்டும் விஜய் நடிக்க வந்தால் அவருடன் இணைந்து நடிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

















